Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
பிரம்ம புராணத்தின்படி இந்த செயல்களை பார்ப்பதே உங்களை நரகத்திற்கு கூட்டிச்செல்லுமாம்
ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுறுத்தலின்படி பிரம்ம வைவார்த்த புராணத்தில் ஒருவரின் வாழ்க்கை நெறிகளை பற்றி முக்கிய குறிப்புகள் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுறுத்தலின்படி பிரம்ம வைவார்த்த புராணத்தில் ஒருவரின் வாழ
மும்மூர்த்திகளுள் ஒருவரான பிரம்மதான் படைப்பின் கடவுளாவர். நமது தலைவிதியை நிர்ணயிப்பவரும் இவரே. நமது பாவ, புண்ணியங்களின் கணக்கை பொறுத்து நமது இறப்பிற்கு பின் நாம் செல்ல வேண்டியது சொர்க்கமா? நரகமா? என்பதை முடிவு செய்வதிலும் பிரம்மாவின் பங்கு மிகமுக்கியமானது.

ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுறுத்தலின்படி பிரம்ம வைவார்த்த புராணத்தில் ஒருவரின் வாழ்க்கை நெறிகளை பற்றி முக்கிய குறிப்புகள் உள்ளது. இதன்படி ஒருவர் வாழ்க்கையில் செய்யும் சிறிய செயல்கள் கூட அவர்களின் வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பதிவில் உங்களின் எந்தெந்த செயல்கள் மிகப்பெரும் பாவமாக கருதப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

பாவச்செயல் 1
வேதங்களின் படி, ஒருவர் விதவை அல்லது விவாகரத்து ஆன பெண்ணுடன் உடல்ரீதியான நெருக்கம் காட்டினால் அது மிகப்பெரும் பாவச்செயலாக கருதப்படுகிறது. இது உங்களை நேராக நரகத்திற்கு கூட்டிச்செல்லும்.

பாவச்செயல் 2
அரசமரம் என்பது தூய்மையின் அடையாளமாக இந்து மதத்தில் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட அரசமரத்தை வெட்டுவதோ அல்லது வெட்டிய மரத்தை பயன்படுத்துவதா கொடியபவமாகும்.

பாவச்செயல் 3
கடவுளை பழிப்பது என்பது பாவங்களிலேயே முக்கியமான பாவம் ஆகும். குறிப்பாக விஷ்ணும் மற்றும் பிரம்மா ஆகிய கடவுள்களை சபிப்பது அல்லது திட்டுவது உங்களை நேராக நரகவாயிலுக்கு கூட்டிச்செல்லும். நீங்கள் அனுபவிக்கும் துயரங்கள் யாவும் உங்களின் பாவங்களை பொறுத்துத்தானே தவிர கடவுள் உங்கள் மேல் எந்தவித பாரபட்சமும் காட்டமாட்டார்.

பாவச்செயல் 4
பொய்சாட்சி கூறுவது என்பது மிகவும் தப்பான செயலாகும். பொய்ச்சாட்சி கூறுவதை பார்ப்பதும் கூட தவறான செயல்தான். ஒருவேளை நீங்கள் கூறும் பொய்ச்சாட்சியால் ஒருவர் பாதிக்கபட்டால் உங்களுக்கு நிச்சயம் நரகம்தான்.

பாவச்செயல் 5
திருமணமான பெண் ஒருவர் கணவர் அல்லாத வேறு ஒரு ஆணுடன் தவறான உறவில் ஈடுப்பட்டால் அது மிகப்பெரிய பாவமாகும். இந்த விஷயம் தெரிந்தும் ஒருவர் அதனை கண்டும் காணாமல் இருந்தால் அவர்களும் நரகத்திற்கு செல்ல வேண்டியதுதான்.

பாவச்செயல் 6
சிறிய சிறிய விஷயங்களுக்கெல்லாம் கோப்படுபவர்களுக்கு அவர்களின் கோபம்தான் மிகப்பெரிய எதிரி ஆகும். இப்படி கோபப்படுபவர்களும் சரி அவர்கள் கோபத்தால் பாதிக்கப்படுவபவர்கள் இருவருமே நரகத்திற்கு செல்வார்கள் என பிரம்ம வைவார்த்த புராணம் கூறுகிறது.

பாவச்செயல் 7
கடவுள் சிலைகளை உடைப்பதோ அல்லது ஒருவர் கடவுள் சிலைகளை உடைப்பதை பார்த்துக்கொண்டு அதனை தடுக்க எந்தவித முயற்சியும் செய்யாமல் வேடிக்கை பார்ப்பது உங்களை நரகத்திற்கு கூட்டிச்செல்லும் கொடிய பாவமாகும்.

பாவச்செயல் 8
விருந்தினர் என்பவர் கடவுள்களின் தூதர்கள் ஆவார்கள். விருந்தோம்பல் என்பது ஒருவரின் அடிப்படை நல்ல குணமாகும். விருந்தினர்களிடம் மோசமாக நடந்து கொள்பவர்களுக்கு நரக வாயில் எப்பொழுதும் திறந்தே இருக்கும்.

பாவச்செயல் 9
உணவு என்பது கடவுள் மனிதகுலத்திற்கு அளித்துள்ள அற்புதமான பரிசாகும். உணவை வீணாக்குவது என்பது கடவுளையே பழிப்பதற்கு சமமாகும். உணவை வீணாக்கும் செயல் கடவுளால் மன்னிக்க முடியாத ஒன்று இது உங்களை நரகத்திற்கு கூட்டி செல்லும்.

பாவச்செயல் 10
குழந்தைகளை வேலை வாங்குவது என்பது சட்டப்படிமட்டும் குற்றம் அல்ல, புராணங்களின் படியும் இது மிகப்பெரிய குற்றமாகும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய வயதில் குழந்தைகளை கொடுமைப்படுத்தி வேலை வாங்குவதும், அதனை வேடிக்கை பார்ப்பதும் உங்களுக்கு நரகம் என்பதை உறுதி செய்யும் செயல்களாகும்.



Click it and Unblock the Notifications
