தமிழில் இருந்து களவாடப்பட்ட ஆங்கில சொற்கள்!

Posted By:
Subscribe to Boldsky
தமிழில் இருந்து வந்த ஆங்கில வார்த்தைகள்..வீடியோ

இன்றைய தலைமுறை தங்கள் பிள்ளைகள் அம்மா, அப்பா என்று அழைப்பதை காட்டிலும், வீட்டுக்கு வரும் உறவினர்களிடம் தமிழில் பேசுவதை காட்டிலும் வேற்று மொழியான ஆங்கிலம் பேசுவதையே விரும்புகிறது. இதனால், சில தமிழ் வார்த்தைகளை பேசுவதையே அவர்கள் கொச்சையாகவும் கருதும் நிகழ்வுகளை நாம் கண்கூட நிறைய இடத்தில் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இன்று நம்மை அறியாமல் நாம் ஆங்கிலம் என்று கருதி உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் ஆங்கில வார்த்தைகளானது தமிழில் இருந்து களவாடப்பட்ட சொற்கள் என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

சக்கரை - Jaggery - வெல்லம், சர்க்கரை வியாதி இருப்பவர்களும் கூட வெல்லம் உண்ணலாம் என்று சில இயற்கை மருத்துவர்கள் கூறுகிறார்கள். இயற்கை இனிப்பான வெல்லம் ஆரோக்கியத்திற்கு நல்லது. வெள்ளை சக்கரை மாதிரி இது உடல் பருமன் அதிகரிக்கவோ, நீரிழிவு நோய் வரவோ செய்யாது.

#2

#2

மாங்காய் - Mango - பழம், முக்கனிகளில் ஒன்றாக திகழ்கிறது மாங்கனி. கோடை காலங்களில் அதிகமாக விளையும் இந்த பழம் உலகின் பல பகுதிகளில் பல வகைகளில் விளைகிறது. இதை பழமாகவும், ஜூசாகவும் மட்டுமின்றி, ஊறுகாய் மற்றும் சாம்பார் வகைளிலும் சேர்த்து உண்ணும் வழக்கம் நமது ஊர்களில் இருக்கிறது.

#3

#3

முருங்கை - Moringa - காய்கறிகளில் ஒன்று முருங்கை. முருங்கை காய் மட்டுமின்றி, இதன் இலைகளும் நல்ல மருத்துவ குணங்கள் கொண்டவை. இது ஆண்களுக்கு ஆரோக்கியம் மற்றும் வலுமை அதிகரிக்க. கருவளம் மேலோங்க உதவுகிறது.

#4

#4

கை பிடி - kabaddi - தமிழர் விளையாட்டு. கபடி என்பது தமிழர் கலாச்சாரத்தில் இருந்துவரும் ஒரு விளையாட்டு. இன்று இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் வளர்ந்து வரும் விளையாட்டாக இருக்கிறது. இதுவரை நடந்த அனைத்து கபடி போட்டிகளிலும் இந்தியா தான் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#5

#5

காசு - Cash - பணம், நாம் ஆங்கிலத்தில் பொதுவாக கூறும் cash என்ற சொல்லானது நமது தமிழ் மொழியான காசு எனும் சொல்லில் இருந்து மருவியது. காசு என்பது பணத்தாளாக அல்லாமல் தங்கள், வெள்ளி, செப்பு போன்றவற்றிலான நாணயமாகும்.

#6

#6

கயிறு - Coir - கட்டும் கயிறு. பிளிச்சை, சனல், இருக்கு மற்றும் தென்னை முதலான நார் கொண்டு, அதை திரித்து தயாரிக்கப்படும் பொருள் தான் கயிறு. இதன் நாம் நூல் என்றும் கூறுவதுண்டு. ஆங்கிலத்தில் Coir / Rope எனும் வார்த்தை தமிழ் சொல்லான கயிறில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்.

#7

#7

தேக்கு - Teak - இது ஒரு உயர்ந்த விலை கொண்ட மரவகை. வெப்ப மண்டலங்களில் வளரக்கூடிய தன்மை கொண்டுள்ளது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதியில் தேக்கு மரம் அதிகளவில் வளர்கிறது. இது சுமார் 30 - 40 மீட்டர் உயரம் வரையிலும் வளரும் தன்மை கொண்டுள்ளது. இதில் மூன்று வகை இருக்கின்றன. பொதுத் தேக்கு, டாகத் தேக்கு மற்றும் பிலிப்பைன் தேக்கு.

#8

#8

அணைக்கட்டு - Anicut - நீர் தேக்கம் செய்யப்பட்டு, அங்கிருந்து தேவையான இடங்களுக்கு பிரித்து அளிக்கப்படும் இடமாகும். ஆங்கிலத்தில் இதற்கு Dam என்ற வார்த்தை இருப்பினும், அவர்கள் Anicut என்ற சொல்லையும் பயன்படுத்தி வருகிறார்கள். இது அணைக்கட்டு எனும் தமிழ் சொல்லில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்.

#9

#9

வெட்டிவேர் - Vetiver - மண்ணரிப்பை தடுக்க உதவும் ஒரு வகை தாவரம் தான் இந்த வெட்டிவேர். இது இந்தியாவை பூர்விகமாக கொண்ட தாவரமாகும். வெட்டிவேரின் மூலமாக நறுமண எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமின்றி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இதை ஒரு மருத்துவ பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள்.

#10

#10

கண்டு - Candy - இனிப்பு உணவுப் பொருள். கேண்டி என்றதுமே நமக்கு குச்சு மிட்டாய் தான் நினைவிற்கு வரும். மிட்டாய் என்று கூறுவது இப்போது கிராமத்து சொல்வழக்கு ஆகிவிட்டது. ஆகயால் கேண்டி என்று ஸ்டைலாக கூறிவருகிறார்கள். ஆனால், கேண்டி என்ற வார்த்தையே தமிழில் இனிப்பு உணவை குறிப்பிடும் கண்டு என்ற வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்ட சொல் தான்.

#11

#11

கறி - Curry - குழம்பு வகை உணவு. நாம் காய்கறி, இறைச்சி போன்ற எதை குழம்பாக வைத்தாலும் அதை கறி குழம்பு என்று கூறுவதுண்டு. கறி என்பது கோழி, ஆடு, மாட்டு கறியை மட்டும் குறிப்பது அல்லது. கறி என்பதன் பொருளானது குழம்பு, பிரட்டல் என சாதத்துடன் பிணைந்து உண்ணும் உணவு வகையின் பெயராகும். இது கோழி, கீரை, மீன் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

#12

#12

இஞ்சிவேர் - Ginger - உணவில் சேர்க்கப்படும் ஒரு சமையல் பொருள். இந்தியாவிலும், சீனாவிலும் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உணவு இஞ்சி. தினமும் நாம் உட்கொள்ள வேண்டிய உணவுகளில் ஒன்று இஞ்சி. இது செரிமானத்தை சீராக்க உதவும் சிறந்த உணவுப் பொருளாகும். இதில் மருத்துவ பழங்கள் அதிகமாக இருக்கிறது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

#13

#13

ஆனைக் கொன்றான் - Anaconda - இதற்கு யானை கொல்பவன் என்ற பொருளும் இருக்கிறது. உலகின் பெரிய பாம்பு வகையாக கருதப்படும் அனகோண்டா ஆனது ஆனை கொன்றான் என்ற தமிழ் சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். இது உலகிலேயே பெரியவகை, நீளமான பாம்பு என்று கருதப்படுகிறது. இதற்கு பெரிதாக நச்சுத்தன்மை இல்லை என்றாலும், இது ஒரு ஆளையே சுருட்டி, இறுக்கி கொண்டு விழுங்கும் தன்மை கொண்டுள்ளதாகும். அமேசான் ஆற்றில் வாழ்கிறது என்றும் கருதப்படும் இந்த பாம்புகள், மீன்கள், கோழி, ஆடுகள், குதிரை போன்றவற்றை உண்ணும்.

#14

#14

கட்டில் - Cot - படுத்து உறங்க உதவும் வீட்டு பொருள். இதுமட்டுமின்றி, கூலி - Coolie, கிடங்கு - Godown, பச்சிலை - Patchouli என நூற்றுக்கணக்கான தமிழ் வார்த்தைகள் ஆங்கில வார்த்தைகளில் பயன்படுத்துப்பட்டு வருகிறது.

ஆங்கிலம்!

ஆங்கிலம்!

தமிழ் மொழி மட்டுமின்றி, மலையாளம், இந்தி, மற்றும்ஏனைய பல உலக மொழிகளில் இருந்து பல வார்த்தைகள் கொண்டு இயங்கி வருகிறது ஆங்கிலம். ஆகவே தான் ஆங்கிலம் தனித்து இயங்க முடியாத மொழியாகவும், செம்மொழி எனப்படும் கிளாசிக் லாங்குவேஜ் அந்தஸ்து பெறாமலும் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

List of English Words of Tamil Origin!

This is a list of English words that are directly or ultimately of Tamil origin. Language center of Hong Kong university has proposed that at least 107 words in the Oxford English Dictionary (OED) has been found of having Tamil origin.