உலக மக்கள் தொகையில் 11 சதவீதம் பேரைக் கொன்றவன் ஹீரோ! யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

1206 ஆம் ஆண்டிலிருந்து 1227 ஆன் ஆண்டு வரை மங்கோலியாவை ஆட்சி செய்தவர் செங்கிஸ் கான். கிட்டத்தட்ட பன்னிரெண்டு மில்லியன் சதுர கிலோமீட்டர் வரையிலும் தன்னுடைய ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்திருந்தார். வரலாற்றில் அதுவரை யாருமே அடைந்திராத மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக செங்கிஸ்கானின் சாம்ராஜ்ஜியம் அமைந்திருந்தது.

அதோடு ஆசியாவிற்கும் ஐரோப்பிவிற்கும் படையெடுத்து கோடிக்கணக்கான மக்களை கொன்று குவித்தார். அதே நேரத்தில் மங்கோலிய நாட்டின் கலாச்சாரத்தை கட்டிக் காத்தார். தன் நாட்டில் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்ற சுதந்திரத்தை கொடுத்தார். உலகின் எந்த திசைக்கும் பயணிக்கலாம் என்ற சுதந்திரம் மங்கோலியாவில் ஏற்படுத்தியிருந்தார். இப்படி பல சாதனைகளை வைத்திருக்கும் செங்கிஸ் கான் குறித்து நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மையான பெயர் :

உண்மையான பெயர் :

மங்கோலியாவில் இருக்கும் ஓனன் ஆற்றின் ஓரத்தில் இருக்கக்கூடிய ஓர் கிராமத்தில் 1162 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் செங்கிஸ் கான். உண்மையில் இவருடைய பெயர் செங்கிஸ் கான் அல்ல. இவர் பெயர் தேமுஜீன். இதற்கு அர்த்தம் இரும்பு. இரும்பைப் போல உறுதியானவன் என்ற அர்த்தத்தில் இந்த பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

1206 ஆம் ஆண்டு வரை இவர் தேமுஜீன் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார்.

Image Courtesy

குழந்தைப்பருவம் :

குழந்தைப்பருவம் :

செங்கிஸ் கானின் ஆரம்ப கால வாழ்க்கை அவ்வளவு இனிமையானதாக இருக்கவில்லை வாழ்வின் பெரும் மிருகத்தனமான நாட்களை தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே கடந்து விட்டார் செங்கிஸ் கான். செங்கிஸ்கானுக்கு ஒன்பது வயதாகும் போதே அவருடைய தந்தை படுகொலை செய்யப்பட்டார்

ஒரு கட்டத்தில் இவர்கள் வாழும் சமூகத்திலிருந்தே இவர்களது குடும்பத்தை வெளியேற்றினார்கள். இவரது தாயும் ஏழு குழந்தைகளையும் அனாதைகளாய் விட்டுச் சென்றார்.

Image Courtesy

 தனியொருவன் :

தனியொருவன் :

இளவயதிலிருந்தே தனியொருவனாய் காட்டில் அழைந்து திரிந்தார். வேட்டையாடி அலைந்து திரிந்து தனக்கான உணவை தேடிக்கொள்ளும் அவலநிலை தான் செங்கிஸ்கானின் குழந்தைப் பருவம் கழிந்தது.அதோடு வளரும் பருவத்தில் தன்னுடைய தம்பியையே கொலை செய்கிறார் செங்கிஸ் கான் இதுவும் உணவுக்காக நடந்த மோதலில் தான் நடக்கிறது.

பின்னர் இவரும் இவருடைய மனைவியும் கடத்தப்படுகிறார்கள். பல காலங்கள் அடிமைகளாகவே இருக்கிறார்கள்

Image Courtesy

கடின போராட்டம் :

கடின போராட்டம் :

எல்லா போராட்டங்களையும் கடந்து தன்னுடைய 20களில் இந்த அடிமை வாழ்க்கை தனக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கிறார் இதிலிருந்து வெளியேறவேண்டும் என்று திட்டமிட்டு மிகப்பெரிய போர்குணம் கொண்ட வீரனாக உருவெடுக்கிறார் செங்கிஸ் கான்.

அங்கே தனக்கென்று சேர்த்துக் கொண்ட கூட்டத்தினரை சேர்த்துக் கொண்டு அடிமைத்தனத்திலிருந்து வெளியே வருகிறார் செங்கிஸ்கான்.

Image Courtesy

சான்று :

சான்று :

அதுவரையில் தன்னை அடிமைபடுத்தியவர்களுக்கு எதிராக போராடி வெற்றி பெறுவது என்பது சாதரண காரியமல்ல.அதை சாத்தியமாக்கிய மாவீரன் செங்கிஸ் கானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த முழுமையான தகவலும் கிடைக்கவில்லை இன்னும் சொல்லப்போனால் அவருடைய உருவம் எப்படியிருக்கும் என்பதற்கான சரியான சான்றுகள் கூட இல்லை.

செங்கிஸ்கான் குறித்த சிலையோ அல்லது ஓவியமோ எதுவுமே நமக்கு கிடைக்கவில்லை.

Image Courtesy

செய்திகள் :

செய்திகள் :

முழுவதும் அவரது போர்,பயணங்கள், கைப்பற்றிய இடம் ஆகியவை குறித்தே இடம்பெற்றிருக்கிறது. அதில் ஆங்காங்கே செங்கிஸ்கானை வர்ணித்திருக்கிறார்கள் அதை வைத்தே செங்கிஸ்கான் இப்படியான உருவ அமைப்பில் இருப்பார் என்று ஒரு உருவம் உருவாக்கப்பட்டது.

செங்கிஸ்கான் தன்னிடத்தில் ஏராளமான திறமைகளை தன்னிடத்தில் வைத்திருந்தார். அதோடு தன் அவையில் இருக்கும் அமைச்சர்களுக்கு அவரது திறமையை பொருத்தே பதவி அளிக்கப்பட்டது.

மாறாக அவருடைய பாரம்பரியம்,பரம்பரையாக இங்கே பணியாற்றுகிறவர்கள், மூதாதையர்கள் உறவு ஆகிய கரிசனம் எல்லாம் இல்லை.

Image Courtesy

யுக்தி :

யுக்தி :

எடுத்தவுடனேயே போர் தொடுத்துவிட மாட்டார் செங்கிஸ் கான். முதலில் உங்கள் ராஜ்ஜியத்தை எங்கள் மங்கோலிய ஆட்சியின் கீழ் கொண்டு வாருங்கள் என்று தகவல் அனுப்புவார். ஒப்புக்கொண்டால் அந்த அரசருக்கு உரிய மரியாதையுடன் நடத்தப்படுவார். இதே முரண்டு பிடித்தால் அவ்வளவு தான்.

செங்கிஸ்கான் வரலாற்றில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது 1219 ஆம் ஆண்டு செங்கிஸ் கான் மேற்கொண்ட ஓர் நடவடிக்கை தான்.

Image Courtesy

பழிக்குப் பழி :

பழிக்குப் பழி :

க்வாசர்மித் பேரரசரான ஷா மங்கோலிய ஆட்சியிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறார். இருந்தும் செங்கிஸ் கான் ஷா அரசரிடம் மிகப்பெரிய உடன்படிக்கைக்கு ஒத்து வருகிறார். அந்த உடன்படிக்கையின் படி ஷா பேரரசின் கீழ் இருப்பவர்கள் சில்க் ரோட் வழியாக பண்ட பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம்.

ஆனால் ஷா அரசர் இதற்கு உடன்படியவில்லை அதோடு செங்கிஸ்கானின் தூதுவர்களையும் கொன்றார்.

Image Courtesy

கோபம் :

கோபம் :

இதனால் கடும் ஆத்திரமுற்ற செங்கிஸ்கான் தன்னுடைய முழு படையையும் ஷா அரசாட்சி இருக்கக்கூடிய பெர்சியவில் போர் தொடுக்கிறார். கோடிக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள் ஷா மன்னரின் அரசாட்சி கவிழ்கிறது. ஆனால் இன்னமும் செங்கிஸ்கானின் கோபம் தணியவில்லை. டாங்கெட்ஸ் என்ற ஊர் அவர்கள் ஷாவின் அரசாட்சியை கலைக்க உதவி செய்யவில்லை என்பதால் கோபம் அங்கேயும் போர் தொடுக்கிறார்

இரண்டிலுமே செங்கிஸ்கானுக்குத் தான் வெற்றி கிடைக்கிறது.

Image Courtesy

40 மில்லியன் :

40 மில்லியன் :

சரியாகவும் அதே சமயத்தில் துல்லியமாகவும் இவ்வளவு மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற புள்ளிவிவரம் இல்லை. ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் கூற்றுப்படி சுமார் நாற்பது மில்லியன் மக்களை செங்கிஸ்கான் கொன்றிருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.

செங்கிஸ்கான் ஆட்சியின் போது சீனாவின் மக்கள் தொகை பாதியாக குறைந்திருக்கிறது. அதே போல பெர்ஷியாவில் ஷா மன்னருக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் நான்கில் மூன்று பகுதியினர் கொல்லப்பட்டார்கள். இதைத் தவிர ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையிலிருந்து 11 சதவீதத்தனரை செங்கிஸ் கான் கொன்றிருப்பதாக கூறப்படுகிறது.

Image Courtesy

மதம் :

மதம் :

பிற மன்னர்களைப் போல தான் வழிபடும் மதத்தையே வழிபட வேண்டும் என்றோ அல்லது தன்னையே எல்லாரும் வணங்க வேண்டும் என்றோ கூறவில்லை மாறாக அவர்கள் விரும்புகிற மதத்தை பின்பற்ற செங்கிஸ்கான் முழு சுதந்திரம் அளித்தார். அதோடு வழிபாட்டுத் தளங்களுக்கு வரிச்சலுகையும் செய்தார்.

செங்கிஸ்கானுக்கும் ஆன்மீகத்தின் மீது அலாதி நம்பிக்கை இருந்திருக்கிறது. ஒவ்வொரு போரின் போதுமே தன் கூடாரத்தில் உட்கார்ந்து பல நாட்கள் வேண்டுதல் நடத்தும் நபராக இருந்திருக்கிறார் அதோடு ஆன்மீக தலைவர்களிடத்திலும் நிறைய உபதேசங்களை பெற்றிருக்கிறார்.

Image Courtesy

போஸ்ட் :

போஸ்ட் :

மங்கோலியர்களின் பலம் அவர்களுடை அம்பு மற்றும் பாய்ந்து ஓடக்கூடிய குதிரை மட்டுமல்ல கடல் கடந்த தொடர்புகளும் தான் . செங்கிஸ்கான் யாம் என்ற பெயரில் கொரியர் சர்வீஸ் அப்போதே ஏற்று நடத்தினார். மிகவும் தேர்ந்த முறையில் இந்த யாம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இதில் பணியாற்ற நியமிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 200 கிலோமீட்டர் வரை பயணிப்பார்களாம்.

Image Courtesy

மறைவு :

மறைவு :

செங்கிஸ்கானின் வாழ்க்கை முழுவதுமே புதிர் நிரம்பியதாகவே இருந்தது. இது அவருடைய மரணத்திலும் நீடித்தது. செங்கிஸ்கான் எப்படி இறந்தார், அவரது உடல் எங்கே என்று யாருக்குமே தெரியவில்லை.

சிலர் செங்கிஸ்கான் குதிரையில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது கீழே விழுந்தார் என்றும் இதில் இவருக்கு உடல் முழுவதும் காயமேற்பட்டு உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது. இன்னும் சிலரோ செங்கிஸ்கானுக்கு மலேரியா காய்ச்சல் ஏற்பட்டது என்றார்கள்.

அதோடு சீனா நாட்டு இளவரசியை செங்கிஸ்கான் மணமுடிக்க எண்ணினார் அதைப் பொறுக்காத மன்னர் செங்கிஸ்கானை நயவஞ்சகமாக கொன்று விட்டார் என்றார்கள்.

Image Courtesy

மங்கோலியாவின் தந்தை :

மங்கோலியாவின் தந்தை :

இன்று மிகப்பெரிய ஹீரோவாகவே செங்கிஸ்கான் பார்க்கப்படுகிறார்.அதோடு மங்கோலியாவின் தந்தை என்று புகழப்படுகிறார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் குறிப்பாக சோவியத் சகாப்தத்தின் போது செங்கிஸ்கான் பெயரைச் சொல்லவே தடை விதிக்கப்பட்டிருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக செங்கிஸ்கான் என்ற பெயரை மக்கள் மனதிலிருந்து நீக்க வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்தார்கள்.

Image Courtesy

என்றும் செங்கிஸ்கான்:

என்றும் செங்கிஸ்கான்:

செங்கிஸ்கானின் பிறந்த இடமான கெண்டிலில் இருக்கும் நினைவிடத்திற்கு செல்ல மக்கள் தடுக்கப்பட்டார்கள். பள்ளி மாணவர்களின் புத்தகங்களில் செங்கிஸ்கான் குறித்து ஒரு வரி கூட இடம்பெறக்கூடாது என்று தடை செய்தார்கள். இத்தனையும் கடந்து 1990 ஆம் ஆண்டு மங்கோலியாவிற்கு சுதந்திரம் கிடைத்த போது வரலாறு மீண்டும் செங்கிஸ்கானை அரவணைத்துக் கொண்டது.

மங்கோலியாவில் இருக்கும் உலான் படோர் நகரின் முக்கியமான விமான நிலையத்திற்கு செங்கிஸ்கான் பெயரே சூட்டப்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட மங்கோலியாவின் ரூபாய் நோட்டில் செங்கிஸ்கான் படமே இடம்பெற்றிருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Life History of Genghis Khan

Life History of Genghis Khan
Story first published: Tuesday, April 10, 2018, 17:32 [IST]