வாஜ்பாய் குறித்த நேருவின் கணிப்பும், நேரு மீது வாஜ்பாய் கொண்டிருந்த பற்றும் - #Unknown Facts

அடல் பிஹாரி வாஜ்பாய் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!

இந்தியாவில் பல நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்கள் இருந்தாலும், அவர்களில் வெகு சிலரை மட்டுமே இந்தியர்கள் மிகவும் விரும்பி தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர். அவர்களில் ஒருவர் தான் அடல் பிஹாரி வாஜ்பாய்.

இந்தியாவில், இந்தியர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட இந்திய பிரதமர் என்று அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை குறிப்பிடுவது மிகையல்ல. தனது வயது மூப்பின் காரணத்தாலும், உடல்நல குறைப்பாட்டாலும் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பொதுவாழ்வில் இருந்தும், கட்சி பொறுப்பில் இருந்தும் விலகி இருந்தார் அடல் பிஹாரி வாஜ்பாய்.

Lesser Known Facts About Atal Bihari Vajpayee!

Image Source: 99images

கடந்த ஓரிரு மாதங்களாக அவரது உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டு வந்தது. கடந்த இரு தினங்களாக அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களது உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வருவதால், பல அரசியல் தலைவர்கள் அவரை மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்து வருகிறார்கள்.

அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு சிறந்த பிரதமர் என்று நாம் அனைவரும் அறிவோம்.. ஆனால், அவரது சிறப்புகளை குறிக்கும் சில உண்மைகளை வெகு சிலரே அறிவார்கள்... அவற்றை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படேஷ்வர்

படேஷ்வர்

அடல் பிஹாரி வாஜ்பாயின் மூதாதையர்கள் ஆக்ரா அருகே அமைந்திருக்கும் படேஷ்வர் என்ற பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள். அடல் பிஹாரி வாஜ்பாயின் தாத்தா பண்டிட் ஷியாம் லால் வாஜ்பாய் அவர்கள் படேஷ்வரில் இருந்து மத்திய பிரதேசத்தின் மோரேனா என்ற பகுதிக்கு இடம்பெயரிந்து வந்தார்.

மாணவர்

மாணவர்

அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு சிறந்த அரசியல் தலைவர், பிரதமர் மட்டுமல்ல, ஒரு சிறந்த மாணவனும் கூட. இவர் தனது முதுகலை பிரிவில் அரசியல் அறிவியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று விருது வென்றவர் ஆவார்.

கம்யூனிசம்!?

கம்யூனிசம்!?

அடல் பிஹாரி வாஜ்பாய் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவாக் சங்கத்தையும் சார்ந்தவர் என்று அனைவரும் அறிந்தது தான். ஆனால், ஆரம்பக் காலக்கட்டத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் கம்யூனிஸ்ம் மீது தான் ஆர்வம் கொண்டிருந்தாராம்.

ஆனால், பாபா சாஹேப் ஆப்டே அவர்களால் ஈர்க்கப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பாய் 1939ல் ஆர்.எஸ்.எஸ்.ல் தன்னை இணைத்துக் கொண்டார். பிறகு 1947ம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிராச்சார நபராக மாறினார்.

சிறை!

சிறை!

1942ம் ஆண்டு Quit India Movemenetல் பங்கெடுத்து கொண்ட அடல் பிஹாரி வாஜ்பாய் தனது மூத்த சகோதரர் பிரேம் என்பவருடன் பிரிட்டிஷ் அரசு கொடுத்த தண்டனையின் பெயரால் 23 நாட்கள் சிறை சென்றார்.

தந்தையுடன்...

தந்தையுடன்...

அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் அவரது தந்தை இருவரும் ஒரே சட்ட கல்லூரியில் (DAV College in Kanpur) ஒன்றாக பயின்றவர்கள். இவர்கள் இருவரும் ஒரே ஹாஸ்டல் அறையில் தங்கி சட்டம் பயின்றனர் என்று அறியப்படுகிறது.

ஊடக காதல்!

ஊடக காதல்!

அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு ஊடகத்தின் மீது பெரும் காதல் என்றே கூறலாம். தனது இளம் வயதில் இவர் ஒரு ஊடகவியலாளராக வேண்டும் என்று விரும்பினார். உத்திர பிரதேசத்தில் இருந்த போது, தீனதயாள் உபதயாவின் நாளேடான ராஷ்டிராதர்மா என்ற இந்தி மொழி மாத இதழிலும், பஞ்சன்யா என்ற வார இதழிலும் அடல் பிஹாரி வாஜ்பாய் பணியாற்றினார்.

பெரும் துயர்!

பெரும் துயர்!

அடல் பிஹாரி வாஜ்பாய் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் தீவிர தொண்டர். இவர் தான் பாரத ஜனதா சங்கத்தை நிறுவியவர். 1953ம் ஆண்டு முகர்ஜியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார் அடல் பிஹாரி வாஜ்பாய். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த போராட்டத்தின் போரே உயிர் மாய்ந்தார் முகர்ஜி. இதனால் பெரும் துயரம் அடைந்தார் அடல் பிஹாரி வாஜ்பாய்.

முதல் வெற்றி!

முதல் வெற்றி!

1957ம் ஆண்டு இரண்டாவது பொதுத்தேர்தலின் போது, அடல் பிஹாரி வாஜ்பாய் முதல் முறையாக இரண்டு தொகுதிகளில் போட்டி கண்டார். மதுராவில் ராஜ மகேந்திர பிரதாப் என்பவரிடம் தோல்வி கண்ட அடல் பிஹாரி வாஜ்பாய். பல்ராம்பூர் தொகுதியில் வெற்றிக் கண்டார்.

நேருவின் கணிப்பு!

நேருவின் கணிப்பு!

பேச்சு வல்லமைக்கு பெயர் போனவர் அடல் பிஹாரி வாஜ்பாய். இந்திய பாராளுமன்றத்தில் இவரது முதல் பேச்சை கேட்ட அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், நிச்சயம் அடல் பிஹாரி வாஜ்பாய் வருங்காலத்தில் இந்திய பிரதமராக பதவி வகிப்பார் என்று கணித்தாரம்.

நேரு மீதான பற்று...

நேரு மீதான பற்று...

1977ம் ஆண்டு மொரார்ஜி தேசாய் அவர்களின் அரசில் வெளியுறவு துறை அமைச்சராக பதிவி ஏற்றார் அடல் பிஹாரி வாஜ்பாய். அப்போது அவர் சவுத் பிளாக்கில் நுழைந்த போது, அங்கிருந்த ஜவஹர்லால் நேரு அவர்களின் முழுவுருவ படம் காணாமல் போனாதை அறிந்தார். உடனே, அதிகாரிகளை அழைத்து, இங்கிருந்த நேரு அவர்களின் படத்தை, மீண்டும் மாட்டுங்கள் என்று உத்தரவிட்டு சென்றாராம்.

உடல்நலம்!

உடல்நலம்!

2000ம் ஆண்டில் இருந்தே அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் உடல்நிலை மோசமாக துவங்கியது. 2001ம் ஆண்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறகு 2009ம் ஆங்கு ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டார். இதனால், அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களது பேச்சு திறன் பாதிக்கப்பட்டது.

சிறப்பு!

சிறப்பு!

இந்தியாவின் பெரும் மதிப்பிற்குரிய மற்றும் பலரால் நேசிக்கப்படும் அரசியல் தலைவராக திகழ்பவர் அடல் பிஹாரி வாஜ்பாய் என்றாலும். நான்கு வெவ்வேறு மாநிலங்களில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்வான ஒரே தலைவர் என்ற பெருமையும் கொண்டிருக்கிறார் வாஜ்பாய். இவர் உத்திர பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் போட்டியிட்டு வென்று பாராளுமன்றம் சென்றிருக்கிறார்.

பாராளுமன்ற உறுப்பினராக 47 ஆண்டுகள் பதவி வகித்திருக்கிறார் அடல் பிஹாரி வாஜ்பாய். இவர் 11 முறை லோக் சபா மற்றும் 2 முறை ராஜ்ஜிய சபா உறுப்பினராக பதவி வைகித்திருக்கிறார்.

பாரத ரத்னா!

பாரத ரத்னா!

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் நாள், இந்திய அரசின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது. இதில் சிறப்பம்சமாக காணப்பட்டது யாதெனில்... 2015 மார்ச் மாதம் 27ம் நாள், அன்றைய இந்திய ஜனாதிபதி அவர்களே அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களது வீட்டுக்கு சென்று கௌரவித்தார்.

அசைவ விரும்பி!

அசைவ விரும்பி!

பிறப்பால் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் அடல் பிஹாரி வாஜ்பாய். ஆனால், இவருக்கு அசைவ உணவு என்றால் மிகவும் விருப்பமாம். அதிலும் இறால் என்றால் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மிகவும் விருப்பமாம். பழைய டெல்லியின் கரீம் ரெஸ்டாரண்டில் அசைவ உணவுகளை வேண்டி, விரும்பி சுவைப்பாராம் அடல் பிஹாரி வாஜ்பாய்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion