உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க பின்பற்ற வேண்டிய சில வாஸ்து சாஸ்திர டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்குமே சந்தோஷம், ஆரோக்கியம் மற்றும் செல்வம் என அனைத்தும் நிறைந்த, மனதிற்கு அமைதி தரும் வீட்டில் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பொதுவான பழமொழி ஒன்று உள்ளது. ஆனால் ஜங்க் உணவுகளை சாப்பிட்டு, நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலைப் பார்த்து, சரியாக தூங்காமல் இருந்தால், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு பதிலாக நோயுடன் தான் இருக்க வேண்டி இருக்கும். ஒருவரது ஆரோக்கியம் நாம் இருக்கும் இடங்களைச் சுற்றி இருக்கும் சூழலைப் பொறுத்தது.

வீடு தான் ஒவ்வொருவருக்கும் சொர்க்கம். அதிலும் ஒருவரது வீடு அங்கு வாழ்பவர்களுக்கு பிடித்தவாறு இருந்தால், வீடே கோயில் போன்று மனதிற்கு அமைதியைத் தரும் இடமாக இருக்கும். ஒரு வீடு வாஸ்து சாஸ்திரப்படி அமைந்திருந்தால், அந்த வீட்டில் வறுமை நீங்கி செல்வம் கொட்டும், வீட்டில் சந்தோஷம் பெருகும், சண்டைகள் நீங்கி அமைதி பெருகும். அதுமட்டுமின்றி, வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒருவரது வீடு அமைந்தால், அது ஒருவரது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனத் தெரியுமா?

இக்கட்டுரையில் ஒருவரது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில வாஸ்து சாஸ்திர டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதனைப் பின்பற்றி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் #1

டிப்ஸ் #1

படுக்கையில் உறங்கும் போது, தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால்களை நீட்டி உறங்குங்கள். அதேப் போல் வாத மற்றும் கப உடலைக் கொண்டவர்கள், தூங்கும் போது இடது பக்கமாகவும், பித்த உடம்பைக் கொண்டவர்கள் வலது பக்கமாகவும் திரும்பி தூங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

வீட்டில் உள்ள மாடிப்படிகளும் ஒருவரது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பது தெரியுமா? எப்போதுமே வீட்டின் மையப் பகுதியில் மாடிப்படி கட்டுக்களை அமைக்கக்கூடாது. அப்படி மாடிப்படிகளை வைத்தால், வீட்டில் உள்ளோர் பெரிய ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்பட நேரிடும். வீட்டினுள் மாடிப்படிகள் வேண்டுமானால், ஒரு ஓரமான மூலையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

வீட்டின் மையப் பகுதியான ஹாலில் கனமான நாற்காலிகளைப் போட்டு வைக்கக்கூடாது. எப்போதுமே வீட்டின் மையப்பகுதி வெற்றிடமாக இருக்க வேண்டும். ஏனெனில் வீட்டின் மையப் பகுதியான ஹால் தான் பிரம்மஸ்தானம். இந்த இடம் வெற்றிடமாக இருந்தால் தான், நேர்மறை ஆற்றல் தடையின்றி பாயும். ஒருவேளை அவ்விடத்தில் பாயும் ஆற்றலுக்கு தடை ஏற்பட்டால், அதனால் அவ்வீட்டில் உள்ளோர் தான் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

ரெய்கி படிகங்களை வீட்டின் பிரம்மஸ்தானத்தில் வைப்பது நல்லது. இதனால் வீட்டினுள் நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக பாயும். ரெய்கி படிகங்கள் வீட்டில் வலிமையான நேர்மறை ஆற்றல்களை மேம்படுத்தும். ஆகவே இதனை வீட்டின் மையப்பகுதியான ஹாலில் வைத்திருங்கள்.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

சில வீடுகளில் உத்தரங்கள் வைக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கும். ஆனால் இம்மாதிரியான வீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டின் மையப்பகுதியில் உத்தரங்கள் சென்றால், அது வீட்டில் உள்ளோருக்கு ஒரு குழப்பமான மனநிலையைத் தரும். ஏனெனில் இவை மனதில் உள்ள நேர்மறை எண்ணங்களுக்கு தடையை ஏற்படுத்தும்.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

நல்ல ஆரோக்கியத்திற்கு, வீட்டில் உள்ள அக்னி பொருட்கள் சமநிலையில் இருக்க வேண்டியது அவசியம். வீடு தெற்கு திசையை நோக்கி இருந்தாலோ அல்லது தெற்கு திசையை நோக்கி சரிவு இருந்தாலோ அல்லது ஜெனரேட்டர் வடகிழக்கு திசையை நோக்கி இருந்தாலோ மற்றும் தென்கிழக்கு திசையில் தண்ணீர் தொட்டி இருந்தாலோ, ஆரோக்கிய பிரச்சனைகளை வீட்டில் உள்ளோர் சந்திப்பர்

டிப்ஸ் #7

டிப்ஸ் #7

அக்னி மூலையில் தினந்தோறும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். அதுவும் வீட்டின் தென்கிழக்கு திசையில் தினமும் மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். மெழுகுவர்த்திகளை ஏற்றினால், அது வீட்டிற்கு அழகைக் கொடுப்பதோடு, வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை எரித்து, வீட்டில் உள்ளோரின் உடல் ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்திருக்கும்.

டிப்ஸ் #8

டிப்ஸ் #8

வீட்டைச் சுற்றியுள்ள சுவர் மற்றும் நுழைவு வாயில் கதவு ஒரே உயரத்தில் இருக்க வேண்டியது அவசியம். அதிலும் வீட்டின் நுழைவு வாயிலின் பக்கவாட்டில் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்த்து வாருங்கள். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

டிப்ஸ் #9

டிப்ஸ் #9

அனுமன் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பர். வீட்டின் தெற்கு திசையை நோக்கி அனுமன் போட்டோவை தொங்கவிடுங்கள். இதனால் வீட்டினுள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆற்றல்கள் நுழைவது தடுக்கப்பட்டு, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

டிப்ஸ் #10

டிப்ஸ் #10

வீட்டில் யாருக்காவது உடல்நலம் சரியில்லை என்றால், அவர் தங்கும் அறையினுள் ஒரு மெழுகுவர்த்தியை சில வாரங்களுக்கு ஏற்றுங்கள். மெழுகுவர்த்தியை வடக்கு திசையில் ஏற்றி வைத்தால், அது தொழிலுக்கு நல்லது. வடகிழக்கு பகுதியில் ஏற்றினால், அறிவாற்றல் மேம்படும். கிழக்கு திசையில் ஏற்றினால், குடும்பம் மற்றும் ஆரோக்கியத்திற்கு நல்லது. தெற்கு திசையில் ஏற்றினால், அது பெயர் மற்றும் புகழை உண்டாக்கும். தென்மேற்கு பகுதியில் ஏற்றனில், காதல் மற்றும் உறவுகளுக்கு நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Important Vastu Tips For Good Health

Here are some important vastu tips for good health. Read on to know more...
Story first published: Thursday, March 8, 2018, 10:50 [IST]