முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன அதிர்ஷ்டம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Posted By: Staff
Subscribe to Boldsky
முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம்..?- வீடியோ

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருபவர்கள், "அட.. ஜெயிக்கணும்னா, நெனச்சது நடக்கணும்னா... மச்சம் வேணும்... லக் வேணும்.. சும்மா எல்லாருக்கும் கிடைச்சிடாது.." என்று கூறுவது உண்டு.

வெற்றிக்கு மட்டுமல்ல, காதலுக்கும் கூட மச்சம் வேண்டும் என்று கூறும் நபர்களை நீங்கள் கண்டிருக்கலாம். உங்கள் நட்பு வட்டாரத்தில் அழகாக இருக்கும் ஆணை விட, சுமாரான நபர் ஒருவருக்கு அதிக பெண் தோழிகள் இருக்கலாம். உடனே... அவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு போலடா என்று சிலர் பொறாமையில் பொங்குவார்கள்.

இருக்கலாம்... சிலருக்கு நிஜமாகவே நல்ல மச்சம், நல்ல இடத்தில் இருக்கலாம். அந்த மச்சத்தின் காரணமாக கூட அவர்கள் வாழ்வில் நல்லது, கெட்டது அவர்கள் அறியாமலே அளவுக்கு அதிகமாக நடக்கலாம். இதில், முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன அதிர்ஷ்டம் என்று இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1 - #3

#1 - #3

குழந்தை வயதில் நீங்கள் கலகம் ஏற்படுத்தி சுட்டித்தனமான நபராக இருந்திருக்கலாம். நீங்கள் பிறப்பாலேயே ஒரு சிறந்த கிரியேட்டிவ் சிந்தனை உள்ளவராக இருக்கலாம். உங்களிடம் சுதந்திரமாக ஒரு வேலையை கொடுத்தால், அதை செம்மையாக செய்து முடிப்பீர்கள். இந்த மூன்று இடத்தில் மச்சம் இருந்தால், நீங்கள் வேலையை காட்டிலும், சொந்த தொழிலில் சிறந்து காணப்படுவீர்கள். ஒரு பாஸாக இருக்க உங்களிடம் லக் நிறையவே இருக்கிறது.

#4

#4

நீங்கள் உணர்ச்சிவசப்பட கூடிய நபர். அவ்வப்போது உங்களை நீங்களே வெளிபடுத்திக் கொள்வீர்கள். இது உங்கள் கவர்ச்சி மற்றும் ஜொலிக்கும் குணம் என்று கூறலாம். ஒரு இடத்தில் அல்லது காரியத்தில் பல கருத்துக்கள் முன்வைத்தால் நீங்கள் குழம்பி போய்விடுவீர்கள்.

#5

#5

இந்த மச்சமானது உங்கள் வாழ்வில் செல்வம் சார்ந்த நல்ல லக் இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. ஆனால், இதை அடைய நீங்கள் நன்கு உழைக்க வேண்டும், நிறைய பேருடன் போட்டி போட வேண்டும். முக்கியமாக சேமிப்பில் கவனமாக இருத்தல் வேண்டும். உங்களை சுற்றி நிறைய பேர் பொறாமை குணம் கொண்டிருக்கலாம். உங்களிடம் கனிவாக பேசி, உங்கள் செல்வதை கடன் வாங்கி போகலாம், அபகரித்தும் செல்லலாம்.

எனவே, அப்படியான மக்களிடம் இருந்து நீங்கள் தள்ளியே இருக்க வேண்டும். மேலும், அனைவரையும் நம்பலாம், ஆனால் குருட்டுத்தனமாக நம்புத,ல் கூடாது. எதற்கும் அனைத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

#6

#6

இந்த இடத்தில் மச்சம் இருப்பது உங்கள் அறிவு கூர்மை மற்றும் கற்பனை சிந்தனை மற்றும் கலை திறனை குறிக்கிறது. உங்களிடம் கலை சார்ந்த திறமைகள் ஏதேனும் மேலோங்கி காணப்படலாம். அதை பின்பற்றி சென்றால் உங்களுக்கு புகழ், வெற்றி, செல்வாக்கு நிச்சயம் கிடைக்கும்.

நீங்கள் தைரியமாக மட்டும் இருந்தால் போதும், வெற்றி உங்களை வந்து சேரும்.

#7

#7

நீங்கள் உங்கள் குடும்பத்தார் உடனேயே வாக்கு வாதத்தில் ஈடுபடலாம். இதன் காரணமாக நீங்கள் துக்கமாகவோ, மகிழ்ச்சி இன்றியோ இருக்க வாய்ப்புகள் உண்டு. இதனால் உங்கள் இல்வாழ்க்கை மற்றும் வேலை தான் பாதிப்படையும். எனவே, எத்தகைய சூழலாக இருந்தாலும், உங்கள் உறவினர், நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

#8

#8

இந்த இடத்தில் மச்சம் இருந்தால், பொருளாதார ரீதியாக சில ஏற்றதாழ்வுகள் காணும் நிலை ஏற்படலாம். நீங்கள் அதிகப்படியாக செலவு செய்யும் நபராக கூட இருக்காலாம். முக்கியமாக உங்களுக்கு சூதாட்டங்களில் ஈர்ப்பு இருக்க வாய்ப்புகள் உண்டு.

மேலும், இந்த இடத்தில் மச்சம் இருக்கும் நபர்கள் தங்கள் எதிர்பாலின நபர்களுடன் கொஞ்சம் ஃப்ளர்டிங் செய்வார்கள், ரொமான்ஸில் ஈடுபட முயல்வார்கள். ஆனால், இது உங்களை சிக்கலில் மாட்டிவிடலாம் எனவே உசாராக இருந்துக் கொள்ளுங்கள்.

#9

#9

இவர்களுக்கு தாம்பத்தியம் மற்றும் இதர விஷயங்களில் பிரச்சனை உண்டாகலாம். இந்த மச்சம் கொஞ்சம் மோசமானது தான். இது இன்னல்களையும், சிக்கல்களையும், படையெடுத்து வரவழைக்கும்.

#10

#10

இது வழிதோன்றல் ரீதியாக உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும் மச்சமாகும். உங்களை சுற்றி எப்போதும் உறவினர்கள், குழந்தைகள் இருந்துக் கொண்டே இருப்பார்கள். உறவினர் மூலமாக உதவி எப்போதுமே கிடைக்கும். உணர்வு ரீதியாக நீங்கள் நிறைந்திருப்பீர்கள்.

#11

#11

இந்த இடத்தில் மச்சம் இருப்பது உடல்நலமின்மை ஏற்படுத்தலாம். ஒருவேளை இந்த மச்சம் பெரிதாகவோ, மிகவும் கருமையாகவோ இருந்தால், அதை அகற்றிவிட கூறப்படுகிறது. இல்லையேல் குறைந்தபட்சம் வெளியே தெரியாதப்படி பார்த்துக் கொள்ள வேண்டுமாம்.

#12

#12

இந்த இடத்தில் மச்சம் இருக்கும் நபர்களுக்கு வெற்றியும், வாழ்க்கையும் சமநிலையாக இருக்கும். உங்களிடம் வெறுமென செல்வம் அதிகரித்து இருப்பதை காட்டிலும், அதனுடன் புகழும் சேர்ந்து இருக்கலாம். ஆடம்பரமாக வாழும் வாய்ப்புகள் இருந்தாலும், நீங்கள் மனதுக்கு நிறைவான வாழ்க்கையையே தேடுவீர்கள். இந்த இடத்தில் மச்சம் இருக்கும் பெண்கள் அழகாகவும், அதிர்ஷ்டம் நிறைந்தும் இருப்பார்கள்.

#13

#13

உங்கள் குழந்தைகளுக்கு வாழ்வில் பிரச்சனைகள் எழலாம். உங்களது உறவு மிக சிறப்பாக அமைந்திருக்காது. சகிப்புத்தன்மையை தவிர நீங்கள் வேறு எதையும் நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள்.

#14

#14

உங்கள் வாழ்வில் உணவு ரீதியாக சில பிரச்சனைகள் எழலாம். எல்லாரும் சாதாரணமாக உட்கொள்ள்ளும் உணவானது உங்களுக்கு மட்டும் அழற்சியை உண்டாக்கலாம். அல்லது நீங்கள் சில வகை உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பழக்கமும் கொண்டிருக்கலாம்.

#15

#15

எதையும் ஒரே மாதிரியாக இல்லாமல், மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கும் பழக்கம் கொண்டிருப்பீர்கள். அது உங்கள் அறையாக, வீடாக, வேலையாக கூட இருக்கலாம். ஏதேனும் புதியதாக செய்துக் கொண்டே இருக்க விரும்புவீர்கள்.

ஒரே இடத்தில் அதிக நேரம் இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியின்றி இருப்பீர்கள். பயணிக்க வேண்டும் என்றால் துள்ளிக்குதித்து செல்வீர்கள்.

#16

#16

இந்த இடத்தில் மச்சம் இருக்கும் நபர்கள் உணவு உண்பதிலும், தாம்பத்திய வாழ்விலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த இரண்டில் தான் உங்களுக்கு பெரிய பிரச்சனை வரலாம். முக்கியமாக உடல் பருமன் மற்றும் மன அழுத்தம். உங்களுக்கு ரொமான்ஸ் என்றால் பிடிக்கும்... ஆனால், சில சமயம் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் உங்களை மனசோர்வடைய செய்யும்.

#17

#17

சமூகத்தில் ஒரு நல்ல பெயர் வாங்கும் நபராக வர வாய்ப்புகள் உண்டு. சமூக சேவை, சமூக ஆர்வலராக முயல்வீர்கள். பேசும் திறன் சிறப்பாக இருக்கும். சில சமயம் வெற்றியை நோக்கி தலை கனம் அதிகரிக்கும் போது உங்கள் நற்பெயர் பாதிப்படையலாம். இது உங்கள் தன்னம்பிக்கையிலும் தாக்கம் உண்டாக்கலாம்.

#18

#18

வெளிநாடுகள் செல்லலும் யோகம் இருக்கிறது. பல ஊர், பல நாடுகள் சென்று வேலை பார்க்கும் வாய்ப்புகள் பெறுவீர்கள். ஆனால், நீரில் பயணிக்கும் போது அதிக கவனம் அவசியம்.

#19

#19

நட்பும், பணமும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும். உங்களுக்கு இருக்கும் மச்சம் சிறந்தது. எதிர்பாலின நபர்களிடம் அதிகம் வழிதல் கூடாது. உங்கள் வாழ்வில் இந்த விஷயம் காலில் சுடுதண்ணி ஊற்றியது போன்ற நிலையை உண்டாக்கலாம்.

#20

#20

இந்த மச்சம் உங்களுக்கு அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் இரண்டையும் அளிக்கலாம். ஒன்று புகழை அளிக்கும் அல்லது இகழ்ச்சியை தரும். ஆனால், உங்களிடம் இருக்கும் கற்பனை மற்றும் புத்திக் கூர்மையை சரியாக பயன்படுத்தினால் உங்கள் திறமைக்கு நல்லதே நடக்கும். நீங்கள் யாரையும், எதையும் எளிதில் மன்னித்து, மறந்தும் விடுவீர்கள். இந்த மச்சம் உடையவர்கள் வரலாற்று சிறப்புமிக்க திகழவும் வாய்ப்புகள் உண்டு.

#21

#21

உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும். இந்த மச்சம் உங்களுக்கு பெயர், புகழ் மற்றும் அங்கீகாரம் பெற்று தரும். உங்கள் பாதையில், செயலில், வேலையில் மனம் தளராது நீங்கள் உழைத்தால் மட்டும் போதுமானது.

#22

#22

நீங்கள் விரும்பியபடி உங்கள் வாழ்க்கையில் இன்பம் பொங்கி வழியும். விளையாட்டு துறையில் ஜொலிக்க வாய்ப்புகள் உண்டு. உங்களிடம் தலைமை அதிகாரியாக செயற்பட வாய்ப்புகள் உண்டு. ஒரு நிறுவனத்தை வழிநடத்தும் தலைமை செயற் அதிகாரி அளவிற்கு வளரலாம். தலைமை பொறுப்பில் சிறந்து செயற்படும் தன்மை கொண்டிருப்பீர்கள்.

#23

#23

புத்திக் கூர்மை சிறந்து இருக்கும். லோக்கலாகவும், இன்டர்நேஷனல் லெவலிலும் சிறப்பாக யோசிப்பீர்கள். வாழ்க்கையை எப்படி அர்த்தமுள்ளபடி வாழ வேண்டும் என்று அறிந்திருப்பீர்கள். நாளை என்ன நடக்கலாம், நடக்கும் என்பதை கணிக்கும் திறன் உங்களிடம் இருக்கும்.

#24

#24

இளம் வயதிலேயே வெற்றியடையவும், சாதிக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், வயதான காலத்தில் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அறிவுரை ஒன்று மட்டுமே உங்களுக்கு வழங்கப்படுகிறது. கடைசி நாட்களில் கொஞ்சம் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வரலாம்.

#25

#25

செழிப்புடன் காணப்படுவீர்கள். உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்தே தீரும். செய்யும் வேலையில் அதிக கவனம் தேவை. உங்கள் அணுகுமுறையை அப்படியே கையாளுங்கள். உங்கள் வாழ்க்கை எப்போதும் இனிமையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Your Face Moles Reveal About Personality? Read Here

How Your Face Moles Reveal About Personality? Read Here