Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
ஆரம்ப காலத்தில் விபச்சார விடுதியின் அடையாளம் இது தான்!
கழிவறைகள் குறித்த சில வரலாற்று தரவுகளை பார்க்கலாம்.
என்ன தான் மெட்ரோபாலிட்டன் சிட்டி என்று சொல்லிக் கொண்டாலும் கழிவறை என்பது படுகேவலமாக இருக்கிறது என்பது தான் கவலைக்கிடமான உண்மை. இன்றைக்கு நவீனத்தின் அடையாளமாகவும் ஆடம்பரத்தின் வரையரையின்றி கழிவறை மற்றும் கழிவறை அலங்காரப் பொருட்கள் விற்பனையாகிறது.
இன்றைக்கு இந்த நிலைக்கு வருவதற்கு முன்னர் ஆரம்ப காலத்திலிருந்தே கழிவறையின் வளர்ச்சி எப்படியிருந்தது என்ற வரலாறினை தெரிந்து கொள்ளலாம். இன்றைக்கு மிக அத்தியவசியமாக இருக்கக்கூடிய கழிவரைகளைப் பற்றி நாம் அதிகமாக மெனக்கெடுவது இல்லை என்பது ஒரு புறம் உண்மை என்றாலும் ஆரம்பத்திலிருந்து இந்த கழிவறை எத்தகைய பரிணாமங்களை சந்தித்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ரோம் :
ஆரம்ப கால ரோமானியர்கள் குளிப்பது என்பது ஓர் புனிதச் சடங்காகவே செய்தார்கள். அதோடு சமூக மக்களை தினமும் ஒன்றிணைக்கும் ஓர் நிகழ்வாகவும் அதனை பார்த்தார்கள். குறிப்பிட்ட இன மக்களுக்கு முதல் மரியாதையாக ஹாட் ரூம் எல்லாம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆண் மற்றும் பெண் இருவருக்கும் தனித்தனியாக வெவ்வேறு நுழைவு வாயில் இருந்திருக்கின்றன.
மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் மிகவும் உள்புறமாகத் தான் இந்த குளிக்குமிடம் இருந்திருக்கிறது.

மத்திய கிழக்கு :
ரோமானியர்கள் இந்த குளிக்கும் வழக்கத்தை தங்கள் ஆட்சி முழுவதும் பரவச் செய்தார்கள், அதனை கட்டாயப்படுத்தினார்கள். இது ஆப்ரிக்காவின் வடக்குப் பகுதி, மெடிடேரியன் நாடுகள் என எல்லா இடங்களிலும் பரவியது. அதன் பிறகு பொதுவிடங்களில் குளிப்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.
ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட அறுபதாயிரம் குளியல் இடங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதோடு அப்படி குளியல் இடங்கள் கட்டுவது என்பது தங்கள் நாட்டிற்கு வளத்தை கொடுக்கும் என்றும் நம்பியிருக்கிறார்கள். அதனால் தான் ஏகப்பட்ட குளியல் இடங்களை கட்டியிருக்கிறார்கள்.

பயணிகள் :
அந்த காலத்தில் மேற்குலகில் இருந்து பலரும் பயணித்து வந்திருக்கிறார்கள். தங்கள் தொழில் வளத்தை பெருக்க நினைத்தவர்கள் இங்கிருக்கும் சில பழக்க வழக்கங்களையும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள் அதில் ஒன்று தான் இந்த குளியல் தொட்டி!
இதே குளியல் தொட்டி முறை தங்களது வசதிக்கேற்ப தங்கள் கலாச்சாரத்திற்கு ஏற்ப மெருகேற்றி பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

1095-1291 :
இந்த காலகட்டங்களில் இங்கிலாந்தில் குளியல் தொட்டி முறை குறிப்பாக பொது இடத்தில் குளிப்பது என்பது வேகமாக பரவியது. இங்கே ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாகவே குளித்திருக்கிறார்கள். சில நேரங்களில் அங்கேயே உணவு உண்பது,உரையாடுவது எல்லாம் நடக்குமாம்.
அதிகப்படியான மக்கள் இப்படி குளிக்க ஆரம்பித்ததும் சுத்தமான தண்ணீர் கிடைப்பது என்பது சவாலான விஷயமாகிவிட்டது .

விபச்சார விடுதிகள் :
அதோடு காலப்போக்கில் இந்த குளியல் தொட்டி என்பது விபச்சார விடுதிகளில் இருக்கக்கூடிய ஓர் நடைமுறை என்றானது. அந்த குளியல் தொட்டி இருப்பது தான் விபச்சார விடுதி என்பதற்கான அடையாளம் எனும் நிலையும் உருவானது. அதனால் பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பொது இடங்களில் குளிப்பதை தவிர்க்க ஆரம்பித்தார்கள்.1347 ஆம் ஆண்டு அந்த மக்களை கொடூரமான ப்ளேக் நோய் தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்த நோய்க்கு காரணம் சுகாதாரமற்ற முறையில் பொதுவெளியில் குளித்தது தான் காரணம் என்று சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து பொது இடத்தில் குளிப்பதை அந்த மக்கள் முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார்கள்.

ஜப்பான் :
ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்ட ஐரோப்பியர்களால் அங்கு கழிவறை வசதி எப்படியிருந்தது என்பது குறித்து ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
அங்கும் குளியல் என்பது ஓர் சம்பிரதாய சடங்காக இருந்திருக்கிறது. குளியல் தொட்டி கட்டிக் கொடுப்பதை ஓர் தர்மமாக நினைத்திருக்கிறார்கள். செல்வந்தர்கள் பலரும் முன் வந்து ஏழைகளுக்காக குளியல் தொட்டி கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.
அங்கிருக்கும் சூழல்களைக் கொண்டு பல வகை குளியல் இடங்களை கட்டியிருக்கிறார்கள்.

கழிப்பிடம் :
துவக்க காலங்களில் கழிப்பிடமும் பொதுவான ஓர் இடமாகவே இருந்திருக்கிறது.நீங்கள் வாழும் சமூகம், அந்த சமூக மக்களின் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப கழிப்பிடங்களின் வசதி மேம்படுத்தப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே ப்ரைவேட் டாய்லெட்டை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மிடில் கிளாஸ் மற்றும் வறுமையில் வாழக்கூடிய மக்கள் இது போன்ற பொதுவான கழிப்பிடங்களைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அரண்மனை :
ஐரோப்பாவில் இருக்கக்கூடிய அரண்மனைகளில் தனி அறைக் கழிப்பிடங்கள் இருந்திருக்கிறது. மேலே அரண்மனையில் தங்கள் அறைக்கு அருகில் கழிவறையாக தனியறை அமைக்கப்பட்டிருந்தது. கழிவுகள் கீழே தரையில் விழுமாம். பொதுவாக இந்த கழிப்பிடங்கள் எல்லாம் ஆற்றின் கரையோரங்களில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. கழிவுகள் எல்லாம் தானாக தண்ணீரில் அடித்து செல்லப்படக்கூடிய வகையில் அமைத்தார்கள்.
அதன் பின்னர் மனிதன் தொடர்ந்து கரையோரத்தில் மட்டுமே வசிக்க முடியாது என்ற நிலை வந்த போது பானைகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறான். அங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டான். இலைகள்,லெனின் துணி ஆகியவை அதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டு :
200 ஆண்டுகால ஐரோப்பிய வரலாற்றில் சுமார் ஏழு முறை பிளேக் நோய் தாக்கி கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்தார்கள். அதனைத் தொடர்ந்து தங்களையும் தங்களுடைய சுற்றுப்புறத்தையும் எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட ஆரம்பித்தது.
1546 ஆம் ஆண்டு மன்னர் எட்டாவது ஹென்றி பொது குளியல் மற்றும் கழிப்பிடங்களை எல்லாம் இழுத்து மூடினார்.

ஆடைகள் :
குளிப்பதற்கு பதிலாக நம் சருமத்தை ஒட்டி சுத்தமான லெனின் ஆடை அணிந்தால் அதுவே சுத்தம் என்று கூறப்பட்டது. இதனால் மக்கள் மெல்ல சுத்தமான லெனின் துணி அணிய முன்வந்தார்கள். மக்களின் வரவேற்பு அதிகரிக்கவே துணி துவைப்பவர்கள், துணி துவைக்கும் இடங்கள் ஆகியவை வளர்ந்தது.
சுத்தமான வெள்ளை லெனின் துணி அணிவது என்பது அப்போது கௌரவத்தின் சின்னமாக பார்க்கப்பட்டிருக்கிறது.

சோப் :
தங்கள் உடலை சுத்தப்படுத்துவதற்கு பதிலாக அந்த ஆடைகளை சுத்தப்படுத்துவது, அதற்கு வாசனை ஏற்றுவது ஆகிய வேலைகளை செய்தார்கள். அந்த துணியை சுத்தமாக்க சோப் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் சோப் சாம்பல், வேக வைத்த விலங்குகளின் கொழுப்பு மற்றும் சில இயற்கையாக கிடைக்கக்கூடிய செடி,கொடிகள்,பூக்கள் அதன் சாறுகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சிறுநீர் :
சிறுநீரைக் கூட துணியை சலவை செய்து வெண்மையாக்க, அழுக்கினை போக்க பயன்படுத்தியிருக்கிறார்கள். துவைப்பதிலேயே அடித்து துவைப்பது, ஒரு கட்டையை கொண்டு துணியை அடிப்பது என பல முறைகளை பின்பற்றியிருக்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில் மக்கள் குளிப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறிப்போனது.

பதினெட்டு :
இந்த நூற்றாண்டில் கூட அன்றாடம் குளிப்பது என்பதை நடைமுறைக்கு வரவில்லை. அப்போது குழாய்கள் அமைத்து தண்ணீரை மக்கள் வசித்த இடத்திற்கு கொண்டு வந்தார்கள். இதுவும் பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமானது. இதனால் குளியல் இடம்,கழிப்பிடம், சமையல் ஆகியவை தாங்கள் வசிக்கும் வீட்டிற்குள்ளேயே செய்து கொள்ள முடிந்தது. அதன் பிறகு அதற்கு என்று தனியறை குளிர் காலங்களில் சூடான நீரைப் பயன்படுத்த என தங்களது தேவைகளுக்கு வசதிகளை அதிகரித்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

கழிவு வெளியேற்றம் :
தாங்கள் வசிக்கும் இடத்திலேயே கழிவறைகளை கொண்டு வந்ததும். அதனை எப்படி சுத்தப்படுத்துவது என்று மக்கள் ஒரு கட்டத்தில் சிந்திக்க ஆரம்பித்தார்கள் அதோடு அந்த நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என்றும் யோசித்தார்கள். 1775 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கும்மிங்கஸ் என்பவர் ஃப்ளஸ் செய்யும் முறையை கண்டுபிடித்தார். இது இன்றைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் பிறகு மெல்ல மெல்ல தொழில்நுட்பங்கள் வளர ஆரம்பித்ததும் நம் வசதிக்காக ஒவ்வொன்றாக கண்டுபிடிக்க ஆரம்பித்தாரக்ள்.

அடிமை :
இந்த தொழில்நுட்ப வளர்ச்சி, வசதி வாய்ப்புகள் எல்லாம் எல்லாருக்கும் பொதுவானதாக அமைந்திடவில்லை. மாறாக செல்வந்தர்களுக்கு மட்டுமே சாத்தியப்பட்டது.அப்படியென்றால் பிற மக்கள் என்ன செய்தார்கள். கழிவறையை சுத்தம் செய்ய அடிமை மக்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.
காலப்போக்கில் அவர்கள் வழிவழியாக கழிவறையை சுத்தம் செய்யும் வேலை மட்டும் தான் செய்ய வேண்டியவர்களாக பார்க்கப்பட்டார்கள்.



Click it and Unblock the Notifications