போலீசாரின் உண்மை முகம் வெளிப்பட்ட உறைய வைக்கும் சம்பவங்கள்!

Subscribe to Boldsky

இந்திய மக்களையும் சட்டத்தையும் பாதுகாக்கும் உயரிய பொறுப்பில் இருப்பவர்கள் காவலர்கள். தங்களுடைய கடமையை அவர்கள் சரிவரச் செய்வதில்லை. லஞ்சம் வாங்குகிறார்கள் போன்ற எண்ணற்ற புகார்கள் ஒரு புறம் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவர்களில் சிலர் நம் மக்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தங்கள் உயிரையும் மதிக்காது சாதனை படைத்து சில போலீஸ்காரர்கள் பற்றிய தொகுப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியிருந்த சமயம், மும்பையில் இருக்கும் லோயர் பரேல் சேனாபதி பாபத் மார்க் பகுதியில் அமைந்திருக்கும் கமலா மில்ஸ் வளாகத்தில் ஏராளமானோர் குலுமியிருந்தனர்.

அங்கே ஓட்டல்க்ள், மதுவிடுதி,உட்பட பல்வேறு அலுவலகங்கள் இருக்கின்றன.

அங்கே இருந்த ஐ அபோவ் என்ற ஓட்டலில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. அப்போது அங்கே தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்க தன்னுடைய சகப் பணியாளர்களுடன் கடினமாக போராடி பலரையும் மீட்டவர் போலீஸ் கான்ஸ்டபிள் சுதர்ஷன் சிண்டே.ஒவ்வொருவரையும் ஏழு மாடி படி வழியாக ஏறி காப்பாற்றியிருக்கிறார்.

Image Courtesy

 #2

#2

நம்பாலி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சஞ்ஜெய் குமாருக்கு ஓர் புகார் வருகிறது. பிறந்து நான்கு மாதமேயான தன்னுடைய குழந்தை கடத்தப்பட்டதாக ஓர் புகார். உடனடியாக செயலில் இறங்கிய அவர், குழந்தை கடத்தப்பட்டு பதினைந்து மணி நேரத்தில் குழந்தையை மீட்டு குழந்தையின் தாயிடமே ஒப்படைத்தார்.

கடத்தப்பட்ட குழந்தை தாயிடம் ஒப்படைக்கும் போது தன்னை காப்பாற்றிய போலீஸ் அதிகாரியைப் பார்த்து குழந்தை சிரிக்கும். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.

Image Courtesy

#3

#3

போலீஸ் என்றால் அதிரடியாக இருப்பார்கள், லத்தியால் அடிப்பார்கள், துப்பாக்கியால் சுடுவார்கள் என்று மட்டும் நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். அதையும் தாண்டி கையறுநிலையில் கூட மக்களைக் காப்பாற்ற ஒரு போலீஸ் என்ன செய்வான் என்று யோசிக்கிறீர்களா அப்படியானால் இந்தப் படத்தைப் பாருங்கள்.

எவ்வளோ சொல்லியும் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க வேண்டிய இருச்சக்கர வாகனத்தில் ஐந்து பேருடன் பயணிக்கும் இந்தக் குடும்பத்தலைவரைப் பார்த்து போலீசார் செய்த காரியமும் சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது.

Image Courtesy

#4

#4

வட இந்தியாவில் இருக்கும் பெண்கள் கர்வா சாத் என்ற பண்டிகையை வெகுவிமர்சையாக கொண்டாடுவார்கள். திருமணமான பெண்கள் கணவரின் நீண்ட ஆயுளை வேண்டி ஒரு நாள் முழுவதும் விரதமிருக்கும் இந்த நிகழ்வு அங்கே மிகவும் பிரபலம்.

அப்போது பாதுகாப்பு உபகரணமான ஹெல்மெட் இல்லாமல் வண்டியோட்ட மாட்டோம் என்று உறுதியளித்த கணவன்மார்களுக்கு இந்த கர்வா சாத் பண்டிகை நாளன்று டிராபிக் போலீசாரால் ஹெல்மெட் பரிசாக வழங்கப்பட்டது.

Image Courtesy

#5

#5

போலீஸ் பெரிய ஆளுன்னா விட்ரூம் என்று பரவலாக ஒரு பேச்சு இருக்கிறது. இங்கே சட்டம் எல்லாருக்கும் ஒன்று தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஹிந்தி நடிகர் முகேஷ் ரிஷி ஒரு நாடகத்தில் ராவணனாக நடிப்பதற்காக ஹெல்மெட் அணியாமல் ஹார்லி டேவிட்சன் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார்.

இந்தியா கேட் அருகில் போலீசாரால் மடகிப்பிடிக்கப்பட்ட இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Image Courtesy

#6

#6

காஷ்மீரில் போலீசாருக்கும் சிர்பிஎஃப் வீரர்களுக்கும் இடையில் அடிக்கடி சண்டை நிகழும். பட்பூரா சோக்,சோப்ரே ஆகிய இடங்களில் சண்டை பலமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் போலீஸ் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.

திடீரென்று எதிரணியினர் வீசிய ஓர் வெடி இவர் மடியில் வந்து விழ, சற்றும் தாமதிக்காமல் அதனை ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் தூக்கி வீசி பத்துபேரின் உயிரைக் காப்பாற்றினார்.

அவர் பதட்டத்தில் தப்பிக்க நினைத்திருந்தாலோ அல்லது வெடியை அங்கேயே தவற விட்டிருந்தாலோ அங்கிருந்த அத்தனை பேரும் உயிரிழந்திருக்கக்கூடும்.

Image Courtesy

#7

#7

சபாஷ் உத்திர பிரதேச போலீஸ், பள்ளி வாகனத்தில் பயணத்தி ஒன்பது வயது மாணவி ஒருவருக்கு அந்த பள்ளிப்பேருந்தில் இருந்த நடத்துனர் பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான். இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்குத் தெரிய வர அவர்கள் போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பள்ளியிலிருந்தும் வெளியிலிருந்தும் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்களால் மாணிவியின் பெற்றோர் கொடுத்த புகார் வாப்பஸ் பெறப்பட்டது. இந்நிலையில் உத்திர பிரதேச போலீஸார் அந்த பள்ளி, பள்ளி ஆசிரியர், தலைமையாசிரியர், பேருந்து ஓட்டுநர், நடத்துனர் அத்தனை பேர் மீதும் பொதுநல வழக்கை தொடுத்து கைது செய்திருக்கிறார்கள்.

Image Courtesy

#8

#8

நொடிப்பொழுதில் நடக்கிற ஓர் சம்பவம் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கிற ஓர் விஷயமாக மாறிவும். இந்த உதாரணம் ரயில் பயணத்திற்கு பெரிதும் பொருந்தும். மும்பையில் இருக்கிற நலாஸோப்பரா ரயில்வே நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த ட்ரைனுக்கும் ப்ளாட்பாரத்திற்கும் இடையில் விழத்தெரிந்த பெண் ஒருவரை அதிரடியாக காப்பாற்ற சிறிய காயங்களுடன் அந்தப் பெண் உயிர் பிழைத்தார்.

நடப்பதை நொடிப்பொழுதில் யூகித்து துரிதமாக செயல்பட்ட அந்த ரயில்வே போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுக்கள்.

#9

#9

முதன் முறையாக அசாம் போலீஸ் இந்த வேலையை செய்திருக்கிறார்கள். கவுகாத்தி விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆறு மாதக் குழந்தையை காப்பாற்ற உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக முப்பத்தியாறு கிலோமீட்டர் தூரத்தை முப்பதே நிமிடங்களில் கடக்க உதவும் துரித ஏற்பாடுகள் நடந்தன.

#10

#10

சாகர் என்ற மாவட்டத்திலிருந்து சித்தோரா கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்கு அருகில் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் நானூறு குழந்தைகள் வரை அங்கே படிக்கிறார்கள். அந்த குண்டு வெடித்தால் அத்தனை குழந்தைகளும் இறக்க நேரிடும். சுமார் சுற்றுவட்டாரத்தில் ஐநூறு மீட்டர் வரை சேதங்கள் இருக்கும்.

இதனை உடனடியாக உணர்ந்த போலீஸ் ஒருவர், பத்து கிலோ எடையுள்ள அந்த குண்டை தூக்கிக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஓடியிருக்கிறார்.

Image Courtesy

 #11

#11

போலீசார் டெக்னாலஜியிலும் புகுந்து விளையாடுவார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம். கூகுள் சேர்ச் உதவியுடன் சூப்பர் பர்க்லர் என்று அழைக்கப்பட்ட கொலைக்கும்பலை பிடித்திருக்கிறார்கள். இவர்கள் மத்திய பிரதேச அரசாங்க அதிகாரிகள் வீட்டில் எல்லாம் கொள்ளையடித்த பலே கொள்ளையர்கள்.

Image Courtesy

 #12

#12

மேற்கு உத்தரப்பிரதேசத்தின் புலாந்த்ஷாஹர் வட்ட பெண் போலீஸ் அதிகாரி, ஸ்ரீசேதா தாகூர் வாகனச் சோதனையின்போது, பா.ஜ.க. மாவட்டப் பிரதிநிதி பிரமோத் லோதி என்பவரிடம் வாகனம் தொடர்பான ஆவணங்களைக் கேட்டுள்ளார்.

பிரமோத் லோதியிடம் ஆவணங்கள் இல்லாததால், அவருக்கு அபராதம் விதித்து, செலான் வழங்கியுள்ளார் ஸ்ரீசேதா. அப்போது, பிரமோத்துடன் வந்த பா.ஜ.க. தொண்டர்கள், ஆட்களைத் திரட்டி ஸ்ரீசேதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து, ஸ்ரீசேதா லஞ்சம் கேட்பதாகப் பொய்யாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க. தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். அவரைச் சுற்றி கூட்டம் கூடி கோஷங்கள் எழுப்பப்பட்டபோதும், ஸ்ரீசேதாவின் சற்றும் அசரவில்லை .

போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அவர், உங்கள் முதல்வரிடம் சென்று காவல்துறை இனி வாகனச் சோதனையில் ஈடுபடக்கூடாது என்று எழுதி வாங்கி வாருங்கள். அப்போது, நான் என் கடமையைச் செய்யாமல் இருக்கிறேன். என்று கூலாக பதில் சொல்லியிருக்கிறார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync pulse
  English summary

  Highlights of police force in recent times.

  Highlights of police force in recent times.
  Story first published: Saturday, January 6, 2018, 14:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more