For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்ம ஊரு ரோடு மோசன்னு சொல்றவங்க, 2 நிமிஷம் இந்த பக்கம் வந்துட்டு போங்க - # Funny Pics

By John
|

தவறு செய்யாத மக்களே இல்லைங்க. ஆனா, அடுத்தடுத்து வர நாட்கள அந்த தவற திருத்திக்கிட்டு வாழ்றோமா, இல்லையாங்கிறது தான் வாழ்க்கை. அதுல தான் நம்ம வெற்றி, தோல்வி அடங்கி இருக்கு.

சரி! தத்துவத்த இத்தோட முடிச்சுக்குவோம். ஏன்னா நாம இங்க ஒன்னும் பெருசா அரசியல் இல்ல தலையாய கடமை பத்தி பேசி கிழிச்சிட வரல.

துபாய்ல ரோட்டுல சோத்த போட்டு குழம்பு ஊத்தி கொழச்சு அடிக்கலாம்னு வடிவேலு ஒரு படத்துல சொல்லி இருப்பாரு. அதுக்கான காரணம். அங்க சாலை வசதிகள் ரொம்ப சூப்பரா இருக்கும். நம்ம ஊருல ரொம்ப மோசமா இருக்குங்கிறது சிம்பாலிக்கா சொல்லி இருப்பாங்க.

ஆனா! அங்கயும் கூட மோசமான வேலை செய்ற ஆட்கள் இருக்காங்க. அதுவும் எப்படின்னா, இந்த சின்ன விஷயத்த கூடாவ சரியா பண்ண மாட்டாங்கன்னு உச்சுக்கொட்டி புலம்புற அளவுக்கு நிறையாவே தப்பு பண்ணிருக்காங்க.

அதுல! அட, இதுக்கு நம்ம ஊரே தேவலன்னு உங்கள நினைக்க வைக்கிற சில படங்கள இந்த தொகுப்புல பார்க்கப் போறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

அமிக்கல்லை குத்தத் தெரியாதவன் குத்தியது போல இருக்கிறது என் கட்சி காரரின் கபாலம்னு சொல்ற மாதிரி இல்லடா எழுதி வெச்சிருக்கீங்க... அதாகப்பட்டது இதை ஆங்கிலத்தில் விவரிக்க வேண்டும் என்றால்.. Shomebody shucks at shpelling, shee? Sho shilly. இப்படியாக இருக்கிறது நீங்கள் ரோட்டில் வரைந்து வைத்திருக்கும் எழுத்து சித்திரம். அப்பறசண்டிகளா!

#2

#2

சோம்பேறித் தனத்தின் உச்சம். ஒருவேள மினிஸ்டர் வீட்டுக்கு வழி போட்டுக் கொடுத்திருப்பாங்களோ. ராஸ்கல்ஸ்! இதுக்கு பேசாம பார்க்கிங் ஏரியாவ அங்கன இருந்து மொத்தமா தூக்கி இருக்கலாமே. இனி! அங்க வண்டிய எங்குட்டு போய் பார்க் பண்றது.

#3

#3

அதாகப்பட்டது பொதுமக்களே! இந்த இடத்துல அந்த ஊட்டுக்காரர், தன்னோட கார காலையில கேரேஜ்ல இருந்து கீழ இறக்க முயற்சி பண்ணி ரோட்டுக்கு வரதுக்குள்ள சாயங்காலம் ஆயிடும். அப்பறம் என்னாத்துக்கு ஆபீஸ்க்கு போயிட்டு. அப்படியே திரும்ப மேல ஏத்திட்டு ராத்திரி குப்புற படுத்து தூங்கிட வேண்டியதுதான்.

#4

#4

இது யாரு பார்த்த வேலை. இதுக்கு எங்க ஊரு தர்மாகோல் அமைச்சரே எம்புட்டோ தேவல. இங்கன வண்டிய திருப்பி அவன் திருகியடிச்சு சாகுறதுக்கா?!

#5

#5

அவசரம்! அம்புட்டு பயலுக்கும் அவசரம். ரோடு காயலன்னு தெரிஞ்சும் பக்கிப்பய எம்புட்டு தூரம் ஒட்டிக்கிட்டே வந்திருக்கான் பாருங்களேன். இந்த டிரைவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்னு கடைசி படத்துல பாப்போம்.

#6

#6

எங்க ஊருல எல்லாம் சிசிடிவி தான் வேலை செய்யாது. சும்மானாச்சுக்கும் இருக்கும். இங்க ட்ராபிக் சிக்னலே சும்மானாச்சுக்கும் தான் இருக்கு. இது வேலை பண்ணினாலும் என்ன பிரயோசனம்.

#7

#7

பொதுவா ஆப்ரேஷன் பண்ணும் போது டாக்டர் கத்திரிக்கோல், ஊசி வயித்துல வெச்சு தெச்சத பார்த்திருப்போம். இதென்னடா புதுசா ரோடு போடுறவங்க கூட இப்படி எல்லாம் பண்றாங்களே...!

#8

#8

எதுக்கு....! முன்ன அந்த பைக் ஓட்டிட்டு வந்த பயல சாகடிக்க பார்த்தாங்க. இப்ப சைக்கிள் ஓட்டிட்டு வர போறவங்கள சாகடிக்க இந்த டிசைனு போல. எங்கிருந்து தான் இவங்கெல்லாம் வருவாங்களோ!

#9

#9

ட்ரெயின்னா ஊருவிட்டு, ஊரு போக பயன்படுத்துவாங்க. அது உலக வழக்கம். இதென்னடா புதுசா ஊருக்குள்ளயே ட்ரெயின் ஓட்றீங்க! பெட்ரோல் விலை அங்கயும் எறிடுச்சோ... டிரைவர் ஷார்ட்-கட்ல வண்டி ஓட்டுறாரு போல.. ஆமா! ட்ரெயினுக்கு பெட்ரோலா? டீசலா?? !?!?!

#10

#10

நம்ம ஊருன்னு மட்டுமில்லைங்க எல்லா ஊரு கார்பரேஷனும் ஒரே மாதிரி தான் போல. இவங்க பாட்டுக்கு கேரேஜ் முன்ன இப்படி சொருகி வெச்சுட்டு போயிட்டாங்க. இனி அவன் உள்ள இருக்க வண்டிய எப்படி வெளிய எடுப்பான். இல்ல வெளிய ஓட்டிட்டு வர வண்டிய எப்படி உள்ள நிறுத்துவான்.

#11

#11

இப்பதான் தெரியுது அசலூருல ஏண்டா மக்கள் தொகை கம்மியா இருக்குன்னு. ரோடு முழுக்க இப்படி தப்பு தப்பா சைன் டிசைன் பண்ணி வெச்சா.. அவனவன் முட்டி மோதி ஆம்புலன்ஸ் ஏறி பரலோகம் போயிடுவான். அப்பறம் எப்படி மக்கள் தொகை அதிகரிக்கும்.

#12

#12

இது என்ன மாதிரியான டிசைன். இத என்னன்னு சொல்லி ஃபாலோ பண்றது.... நோ கமெண்ட்ஸ் சிம்பிளி வேஸ்ட்!

#13

#13

இந்த பொண்ணுங்க... பிடிச்சிருக்க ஆனா நண்பனானு சொல்வாங்களே... இருக்கு ஆனா இல்லன்னு சொல்ற மாதிரி. பீச்சாங்கை பக்கமா போலாம், ஆனா போகக் கூடாது.

#14

#14

என்னவொரு புத்திசாலித்தனம்.

#15

#15

தம்பி நீங்க இன்னும் எங்க ஊரு பக்கம் வந்து பார்க்கலயே.. ரோட்டுக்கு பங்க்சர் போட உலகத்துக்கு கத்துக் கொடுத்ததே நாங்க தான்.

#16

#16

பரவால்ல ஊர் உலகத்துல இருக்க புத்திசாலி எல்லாம் நம்ம ஊருல தான் இருக்காங்கன்னு இத்தன நாள் தப்பா நெனச்சுட்டோம். பெரிய, பெரிய லெஜென்ட் எல்லாம் வெளிநாட்டு தான் இருக்காங்க போல.

#17

#17

மாட்டு சாணத்தை அந்தப்பக்கமா அள்ளிப் போட்டு வேலைய பார்க்குற அறிவு கூடவ இல்ல. அடேய்! இருங்கடா உங்கள திட்ட டிக்ஷனரில புதுசா வார்த்தைய கண்டுப்பிடிச்சுட்டு வரேன்...

#18

#18

அதே தான்.. செத்து, செத்து விளையாடலாம்ங்கிறத சீரியசா எடுத்துக்கிட்டாங்க போல... முட்டி மோதிக்கிற மாதிரியே சைன் டிசைன் பண்ணி வெச்சிருக்காங்க!

#19

#19

அந்த டிரைவருக்கான தண்டனை என்னன்னு கடைசியா பார்க்கலாம்னு சொன்னேன்ல.. அது இதுதான்... இனிமே! அவசரப்பட்டு போவ.... போய் தான் பாரேன்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Funny Pics: Road Construction Fails

Funny Pics: Road Construction Fails Completely Lacking Common Sense
Story first published: Thursday, October 25, 2018, 16:20 [IST]