நியூஸ் பேப்பரில் வெளியாகி கேலிக் கூத்தான திருமண விளம்பரங்கள் - புகைப்படத் தொகுப்பு!

Posted By: Staff
Subscribe to Boldsky

கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்து பயிறு, ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம்ன்னு சொல்வாங்க. அதாவது ஆயிரம் தடவை போய் வந்தாவது ஒரு கல்யாணம் பண்ணலாம்ங்கிறது இதோட உண்மை அர்த்தம்.

நிஜமாலே, கல்யாணம்ங்கிறது நமக்காக நம்ம வாழ்க்கையில நடக்குறே ஒரே ஒரு திருவிழா. வேற எப்பவும் தனிப்பட்ட நபருக்காக ஒரு திருவிழா நடக்காது. அது எல்லாரும் கூடி, விமர்சையா நடக்கணும்.

கல்யாணுக்கு வரன் பார்க்க பல வழிகள் இருக்கு, ப்ரோக்கர் மூலமா, நாளேடு விளம்பரம், ஆன்லைன் விளம்பரம், தெரிஞ்சவங்க, சொந்தக் காரங்க கிட்ட சொல்றதுன்னு நிறையா வகை நாம பார்த்திருப்போம்.

இதுல, இந்த நாளேடுல விளம்பரம் கொடுக்குற வகை இருக்கே அங்கதாங்க நிறையா தமாசு நடக்குது. எப்படி கொடுக்கிறது, என்ன விவரம் கொடுக்கணும், பொண்ணு எப்படி எதிர்ப்பார்க்கனும்னு தெரியாம.. கண்டத எழுதிக் கொடுத்திடுறாங்க. பேப்பர் காரங்களும் அதப் படிச்சு பார்க்காம அப்படியே பப்ளிஷ் பண்ணிடுறாங்க.

இப்படியாக, நாளேடுகள்ல வெளியாகிக் கேலிக்கூத்தான திருமண விளம்ரங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அப்பாவி!

அப்பாவி!

நல்ல அம்சமாக இருக்கும் ஹோம்லி லுக்கிங் பெண். வயசு 32க்கு மேல இருந்தாலும் பரவாயில்ல.. 32க்கு மேல தான் 92ம் வருது... அது நோக்கு... பரவாயில்லையோ? வட இந்தியாவை சேர்ந்த படித்த அகர்வால் பையன். பிறந்தது 67 டிசம்பர்'ல... விளம்பரம் கொடுத்திருக்கிறது 2010ல. கூட்டி கழிச்சி பார்த்தா... 43 வயசு. அதாவது அங்கிள்... பாய் இல்ல.

பஞ்சாபி!

பஞ்சாபி!

நல்ல உடற்கட்டு மற்றும் அழகான ஆண்மகன் என்ன விவாகரத்து ஆயிடுச்சாம். மும்பையில செட்டிலான ஃபேமிலி, நல்ல ஆழகான, கலாச்சாரமான பொண்ணு வேணும்னு விளம்பரம் பண்ணியிருக்கார். டவுரி கூட வேண்டாம்னு சொல்லிருக்காப்புல. நல்ல மனசு தானுங்களே! 48 வயசானாலும் பார்க்க 40 வயசு மாதிரி தான் இருப்பாராம் புள்ளாண்டன்! அடடே!!!!

விசா!

விசா!

முன்ன எல்லாம் சொந்த வீடு, சொந்த தொழில், அரசு உத்தியோகம்ன்னு கல்யாண வரன் தேடுனாங்க! இப்போ எச்1 விசா இருக்கு, பையன் அமெரிக்காவுல இருக்கான்னு சொல்லி வரன் தேடுறாங்க.

பெரிசா ஒன்னும் இல்ல...

பெரிசா ஒன்னும் இல்ல...

பெரிசா எந்த பிரச்சனையும் இல்லையாம், முந்தைய கல்யாண வாழ்க்கையில ஏற்பட்ட காரணத்தால ஆண்மை குறைபாடு மட்டுமாம். அதுவும் ஸ்ட்ரெஸ் காரணமா தான். அதையும் சரி பண்ணிடலாம். இத எல்லாமா விளம்பரத்துல போடுவாங்க. ரொம்ப ஓபனா பேசுறீங்களே!

என் இஷ்டம்...

என் இஷ்டம்...

நல்லா அழகான பொண்ணு, தொழில் பண்ற பஞ்சாபி பையன் தான் வேனுமாமா. முக்கியமா பையன் அம்மா பிள்ளையா இருக்க கூடாது, என்ன ட்ரெஸ் பண்ணாலும் கேள்வி கேட்க கிடாது. இன்ட்ரஸ்ட் இருக்கவங்க மட்டும் மெயில் பண்ணுங்கன்னு சொல்லியிருக்கா.

மாமிச மாமி!

மாமிச மாமி!

அதென்ன நான்-வெஜ் பிராமின். நேக்கு புரியல... அசைவம் சாப்பிடுற மாமியா... அட நாம் சாப்பிடுற உருளைக்கிழங்கு, தக்காளிலயேதவளையோட ஜீன் கலப்பு இருக்குன்னு சொல்றாங்க. அப்பறம் என்ன தக்காளியே நான் வெஜ் தானே பின்ன. விடுங்கோ... எல்லாரும் இந்த லோகத்துல நான்-வெஜ் தான்.

கூப்பிடாதிங்க ப்ளீஸ்!

கூப்பிடாதிங்க ப்ளீஸ்!

எம்.பி.எ படிச்ச பொண்ணு, நல்ல பெரிய குடும்பம். கலக்டர், போலீஸ் ஆபீசர், டாக்டர் இல்ல பிஸ்னஸ்மேனா கூட இருக்கட்டுமாம். ஆனா, சாப்ட்வேர் என்ஜினியர் மட்டும் வேண்டாம்.. ப்ளீஸ் கால் பண்ணி தொல்லை பண்ணாதிங்கன்னு சொல்லியிருக்காங்க.

புடிச்சுட்டான்...

புடிச்சுட்டான்...

சொந்த தொழில், சொந்த வீடு எல்லாம் இருக்கு. பத்து இலட்சம் சம்பாதிக்கிறார் மனுஷன். பொண்ணுக்கு ஒரே ஒரு கண்டீஷன்.... ஃபேஸ்புக் மட்டும் யூஸ் பண்ணக் கூடாது. அம்புட்டு தான். இப்ப எல்லா தப்பும் அங்க தான் ஆரம்பிக்குதுன்னு தம்பி எப்படியோ கண்டுபிடிச்சுட்டார்.

நல்ல அம்மா?

நல்ல அம்மா?

நல்ல அழகான, படிச்ச, சிகாகோல செட்டிலான பையன்னு லெட்டர செம்மையா ஆரம்பிச்சு.. பின்னாடி, அவனால ஏன் ஒரு பொண்ண தேர்வு பண்ண முடியல, பின்னாடி பாதி லெட்டர்ல சரவெடி வெடிச்சிருக்காங்க. அதுலயும் அந்த போட்டோஷாப் போட்டோ எல்லாம் நல்ல தரமான டிரால்.

புது டிசைன்!

புது டிசைன்!

ஒருவேள இவங்க குடும்பம் ஹோல்-சேல் வியாபாரியோ இருப்பாங்களோ... மூணு பேருக்கும் சேர்ந்து ஒரே விளம்பரமா போட்டிருக்காங்க. நல்ல சிக்கனவாதி குடும்பம் போல. நல்லா வருவீங்க மக்களே!

இதுலயும் அவசரம்!

இதுலயும் அவசரம்!

15 நாள்ல கல்யாணம் பண்ணாட்டி, சொத்து கித்து எழுதி வெக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களோ... இல்ல அருணாச்சலம், பம்மல் கே சம்மந்தம் பாணியில பரம்பர சொத்து கிடைக்காமல் போயிடுமோ..?

அருமை!

அருமை!

அதாவது பொண்ணு லட்சணமா இருக்கும், நல்லா படிச்சிருக்கு... அமெரிக்காவுல வேலை பார்க்குது... ஏன்ப்பா எச்.1 விசா இருக்குன்னு கூட சொல்லேன்... இதென்ன இந்தோ-பாக் ஸ்டைல்ல பர்தா கட்டத் தெரியும்னு எல்லாம் விளம்பரம் பண்றீங்க. என்னமோ மா.... இவங்க எல்லாம் வரன் பாக்குறாங்களா இல்ல, அடுத்த கலக்கு போவது யாரு சாம்பியன்ஸ்க்கு ரிகல்சல் பாக்குறாங்களான்னு தெரியில.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny Matrimonial Ads that Published in Newspaper

Here is a Collection Funny Matrimonial Ads that Published in Newspaper.