வரலாற்றில் நிகழ்ந்த சில வேடிக்கையான சம்பவங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வரலாறு என்று சொன்னாலே குரூரமான அல்லது கஷ்டப்பட்டு ரத்தம் சிந்தி அதிகாரத்தை எதிர்த்து பாடுபட்ட கதையைத் தான் கேட்டிருப்போம். எப்போதும் வரலாறு அப்படியே இருந்திருக்குமா என்ன? பொதுவாகவே இன்றைக்கு நடக்கக்கூடிய விஷயங்கள் தான் நாளை வரலாறாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.வரலாற்று முழுக்கவே போராட்டங்களும் போர்களும் மட்டுமே நீடித்திருக்குமா என்றால் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மையாக இருக்கக்கூடும்.

ஹிஸ்ட்ரி சப்ஜெக்ட் போர் என்று சொல்பவர்கள் இதைப் படியுங்கள் வரலாற்றில் அதாவது முந்தைய காலத்தில் நிகழ்ந்த சில ஜாலியான சமாச்சாரங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஈமு கோழி :

ஈமு கோழி :

முதலாம் உலகப்போர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவில் கிரேட் ஈமு வார் என்ற போர் நடத்தப்பட்டது.விளையாட்டாக மெஷின் கன் கொண்டு ஈமோ கோழிகள் இருக்கும் இடத்தில் சுடப்பட்டது. அதாவது இது ஈமுக்கோழிகள் கொல்லப்பட வேண்டும் என்பதற்காக சுடப்பட்டது அல்ல.

மாறாக துப்பாக்கி குண்டு, அதாவது தனக்கு ஆபத்து வரும் போது ஈமு கோழி தன்னை எப்படி தற்காத்துக் கொள்கிறது என்பதை பார்க்க ஆஸ்திரேலிய ராணுவம் இந்த போரை நடத்தியது.

Image Courtesy

 வெற்றி :

வெற்றி :

சுமார் 2500 ரவுண்டு மிஷின் கன்னால் சுடப்பட்டது. இதன் பிறகு ஏதேனும் ஈமு கோழி இறந்திருக்கிறதா என்று சோதனையிட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு ஈமுகோழி கூட இறக்கவில்லையாம். இறுதியில் இந்தப் போரில் ஈமுகோழி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Image Courtesy

இரண்டே கார் :

இரண்டே கார் :

1895 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஒட்டுமொத்த ஒஹியோ மாகாணத்தில் இரண்டே இரண்டு கார்கள் மட்டுமே இருந்திருக்கிறது. அவை இரண்டும் ஒன்றோண்டொன்று மோதி விபத்திற்குள்ளாகின.

Image Courtesy

தோட்டா இல்லை :

தோட்டா இல்லை :

1821 ஆம் ஆண்டு க்ரீஸ் துருக்கியர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. க்ரீஸ் மக்கள் தங்களது சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். துருக்கியர்களின் தலைமையிடங்கள் எல்லாம் முற்றுகையிடப்பட்டது. இருவருக்கும் இடையில் கடுமையான தாக்குதல்கள் நடைப்பெற்றன.

ஒரு கட்டத்தில் துருக்கியர்கள் படையில் துப்பாக்கி தோட்டாக்களின் எண்ணிக்கை இருப்பு குறைந்து கொண்டே போனது.

Image Courtesy

எழுதி வைத்துவிடு :

எழுதி வைத்துவிடு :

இதனால் துப்பாக்கி தோட்டா தயாரிப்பதாற்காக அங்கிருந்த பெரிய பெரிய கட்டிடங்களில் இருக்கும் தூண்களையெல்லாம் சிதைத்து அழித்திருக்கிறார்கள். அதிலிருந்து எடுக்கப்படுகிற லெட் தோட்டா தயாரிப்பதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அப்படி தூண்கள் இருக்கும் இடத்தை தேடிச் சென்ற போது ஒரு இடத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்த பலகை துருக்கியர்களை ஆச்சரியப்படுத்தியது. அது துருக்கியர்களை மட்டுமல்ல அதைப் படிக்கும் ஒவ்வொருவருக்குமே சிரிப்பை வரவழைக்கக்கூடியதாகவே இருக்கிறது. அப்படி அதில் என்ன தெரியுமா எழுதியிருந்தார்கள்

இதில் துப்பாக்கி தோட்டாக்கள் இருக்கிறது.இதைத் தொட வேண்டாம் என்று இருந்ததாம்.

Image Courtesy

போதை சந்தை :

போதை சந்தை :

1820களில் சீனாவை க்யிங் வம்சத்தினர் ஆண்டு வந்தனர். அப்போது எல்லாம் சர்வ சாதரணமாக வெளிநாட்டுப் பொருட்களை விற்கும் இடமாக சீனா இருந்தது. அவ்வளவாக கெடுபிடிகள் இருக்காது. ஆனால் போதைப் பொருட்களை மட்டும் கடுமையாக எதிர்த்து வந்தது சீன அரசாங்கம்.

ஆனால் பிரிட்டிஷ் அங்கே ஒப்பியம் எனப்படுகிற போதைப் பொருளை விற்று விட வேண்டும், மிகப்பெரிய சந்தையை உருவாகக் வேண்டும் என்று திட்டமிட்டது.

Image Courtesy

குரங்குகள் :

குரங்குகள் :

ஓபியம் போதைப் பொருளுடன் கடலில் பிரிட்டிஷ் கப்பல் வந்து நின்றது.அதனை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று திட்டமிட்ட சீனப்படையினர் முதலில் பல திட்டங்களை வகுத்தார்கள் ஆனால் கரையிலிருந்து கப்பல் நின்று கொண்டிருக்கும் தொலைவுக்கு எதையும் சாத்தியப்படுத்தப்படுத்த முடியவில்லை.

தொடர்ந்து அங்கே போரும் நடைப்பெற்றது. அந்த போரில் ஒரு பகுதியாக குரங்குகளின் மேல் நெருப்பு வைத்து அனுப்பினார்கள்.

Image Courtesy

 முதலாம் உலகப் போர் :

முதலாம் உலகப் போர் :

ஆஸ்திரியா-ஹங்கேரி நாட்டின் பொறுப்பில் இருந்த அர்ச்டுகே ஃபெர்டினாட் படுகொலை செய்யப்பட்டார் இது தான் முதலாம் உலகப் போர் ஏற்பட காரணமாய் அமைந்துவிட்டது. ஆனால் அவரை படுகொலை செய்ய என்ன காரணம் தெரியுமா?

ப்ளாக் ஹேண்ட் எனப்படுகிற ஒரு செர்பியன் தீவிரவாத கும்பல் ஒரு கடைக்கு சேண்ட்விச் வாங்க சென்றிருக்கிறார்கள். ஆனால் அங்கே அவர்களுக்கு முன்னதாக அர்ச்டுகே நின்றிருக்கிறார். உடனே சுவரை சுட்டுக் கொன்று விட்டிருக்கிறார்கள்.

Image Courtesy

தனித்துவமானது :

தனித்துவமானது :

இரண்டாம் உலகப்போரின் போது ஒரே இடத்திற்கு குண்டு போட இரண்டு படைப்பிரிவுகளை நியமித்தது அமெரிக்கா. ஒரு குழு எதார்த்தமாக 1000 அடி கீழே இறங்கிவிட்டார்கள் எதிரிப் படையான ஜெர்மனியை நோக்கி குண்டு வீச ஆரம்பித்தார்கள். அவர்கள் வீச ஆரம்பித்துவிட்டதை தெரியாத மேலே இருந்த படையும் குண்டு வீச ஆரம்பித்தது.

ஒரே நேரத்தில் இவ்வளவு குண்டுகளை வீச அமெரிக்கா ஒரு தனித்துவமான ஐடியா வகுத்து செயல்படுகிறது, நமக்கு தெரியாது ஓர் போர் ரகசியம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது என்று பயந்து விட்டார்களாம் ஜெர்மானியர்கள்.

Image Courtesy

மரம் வெட்டத் தான் இத்தனையும் :

மரம் வெட்டத் தான் இத்தனையும் :

1976 ஆம் ஆண்டு அமெரிக்கா அரசாங்கம் ஆப்ரேசன் பால் புன்யான் என்ற திட்டத்தை ஆரம்பித்தார்கள். திட்டத்தின் முக்கிய நோக்கம் மரத்தை வெட்டுவது. குறிப்பிட்ட இடத்திலிருந்து கண்காணிக்க அந்த மரம் தடையாக இருந்ததால் அவற்றை வெட்டி வீழ்த்த இந்த ஐடியா இந்த மரங்களை வெட்ட அமெரிக்கா என்ன ஆயுதங்களை வீரர்களுக்கு கொடுத்து அனுப்பியது தெரியுமா?

பீரங்கி, சிறப்புப்படைகள்,போர் வாகனங்கள், டேக் வாண்டோ எனப்படுகிற தற்காப்பு படை வீரர்கள்,கையெறி குண்டுகள்,ஹெலிகாப்டர் என இன்னும் நிறைய ஒரு மரத்தை வெட்ட அனுப்பியிருக்கிறது அமெரிக்கா.

பக்கெட்டுக்கு போரா :

பக்கெட்டுக்கு போரா :

புறாவுக்கு போரா என்று கேட்டதை விட காமெடியான விஷயம் இது. இந்த சம்பவம் 1300களில் நடந்திருக்கிறது இத்தாலியில் உள்ள மொடேனாவில் வசிக்கும் நபர்கள் பக்கத்து ஊரான போல்கனோவிலிருந்து ஒரு பக்கெட்டை திருடியிருக்கிறார்கள்.

இது போல்கனீஸ் மக்களுக்கு பெரும் அவமானமாகிவிட்டதாம். இதனால் இரண்டு ஊர்களும் உள்நாட்டு போர் அறிவித்து போரிட்டுக் கொண்டார்கள். கிட்டத்தட்ட 2000 மக்கள் இந்த போரில் பங்கேற்றிருக்கிறார்கள். ஏரளமான சேதங்கள் ஆனால் இறுதி வரையில் திருடப்பட்ட அந்த பக்கெட்டை மீட்க முடியவில்லையாம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Funny Events In Our History

Funny Events In Our History
Story first published: Tuesday, April 10, 2018, 12:35 [IST]