பிப்.16 - திருமண வரன் அமைய கன்னி ராசியினர் இன்று என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Posted By: Staff
Subscribe to Boldsky

பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை இன்றைய தினத்தை புதிதாக துவங்கியிருக்கிறோம். ஒவ்வொரு முறை தோல்வியைனை சந்திக்கும் போதும் சோர்ந்து போகாது, தொடர்ந்து போராடிக் கொண்டேயிருங்கள். அது கடினமானதாய் இருக்க வேண்டும் என்பதல்ல ஒவ்வொரு நாளும் ஒரு அடி முன்னே எடுத்து வைத்தால் கூட உங்கள் இலக்கினை ஒரு நாள் அடைந்துவிடலாம் என்பதை மறக்க வேண்டாம்.

Feburary 16 Rasi Palan

நான் தோற்று விட்டேன் என்று வருத்தப்படுவதை விட இன்றைக்கு அதற்காக ஒரு முயற்சியும் நான் எடுக்கவில்லை என்று வருத்தப்படுவதே உத்தமமாக இருக்கும்.நீங்கள் இன்றைக்கு எடுக்கப்போகிற புதிய முயற்சிகளுக்கு போல்ட்ஸ்கை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இன்றைய தேதிக்கு உங்களுடைய ராசிபலன் என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம் :

மேஷம் :

இன்றைக்கு நீங்கள் செய்யக்கூடிய சில செயல்களால் நண்பர்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாவீர்கள். பெற்றோருக்கு அல்லது மூத்தோருக்கு கூடுதலாக செலவு செய்ய நேரிடலாம். வியாபாரத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது, பணியாளர்கள் இன்று கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

இரவலாக எந்த பொருளையும் இன்று வாங்க வேண்டாம் அதனால் உங்களுக்கு வீண் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. இல்லறத்தில் மகிழ்ச்சி உண்டாகிடும்.

 ரிஷபம் :

ரிஷபம் :

உற்றாரும் உறவினர்களும் இன்று உங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுப்பர். மனைவியுடன் சுமூக போக்கு ஏற்படும். எதிர்காலம் குறித்த திட்டமிடல் இன்று அதிகரிக்கும். வியாபாரம் செய்வோர் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது, இன்று உங்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்,

மிதுனம் :

மிதுனம் :

எதிர்பாராத உதவி உங்களுக்கு இன்று கிடைக்க வாய்ப்புண்டு. ஏற்கனவே கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் சந்தர்ப்பம் வாய்க்கும். தண்ணீரினால் இன்று உங்களுக்கு சிக்கல் உண்டு என்பதால் சற்று கவனமாக இருக்கவும்.

கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமையுடன் இருப்பது நல்லது. வேலையில் திடீர் தடுமாற்றங்கள் நிகழ்ந்திடும். பெண்கள் குழந்தைகளினால் இன்னலுக்கு ஆளாக நேரிடலாம்.

கடகம் :

கடகம் :

இன்றைக்கு உங்களுடைய வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.நண்பர்களால் விரயம் உண்டு என்பதால் அவர்களிடத்தில் அமைதிப் போக்கினை கடைபிடித்திடுங்கள்.

வேலை செய்யும் இடத்தில் மனசஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு.

சிம்மம் :

சிம்மம் :

இன்று உங்களுக்கு இறை நாட்டம் அதிகமாக இருக்கும், பேருந்து பயணங்களில் சற்று கவனமாக இருக்கவும். தந்தையுடன் சுமூக உறவு நீடித்திடும். சூழ்நிலையை சமாளிக்க கற்று அதற்கேற்ப நடந்து கொள்வதால் நல்ல பெயரை சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் உடன் பணியாற்றுவோருடன் அனுசரனை ஏற்படும்.

வெளியில் செல்லும் போது விநாயகரை வழிபட்ட பின்பு செல்லவும்.

கன்னி :

கன்னி :

உங்களுடைய வேலையினால் அல்லது ஆர்வத்தினால் பலரை பகைத்துக் கொள்ள நேரிடலாம். செல்லப்பிராணிகள் மீது திடீர் அவா பிறக்கும்.உடன் பிறப்புகளிடம் வீண் சண்டை நடைபெறும். கடனுதவியால் இன்றைய பொழுதை எளிதாக கடப்பீர்கள். திருமணப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று முருகனை வணங்கினால் நல்ல ஆதாயம் கிடைத்திடும்.

துலாம் :

துலாம் :

இன்று வழக்கத்திற்கு மாறான கூடுதல் புகழ்வெளிச்சம் உங்கள் மேல் பாய்ந்திடும். இன்றைக்கு அதிக அலைச்சல் உண்டு என்பதால் எதற்கும் தயாராக இருங்கள். தொழிலில் மேற்கொள்ள நினைத்திருக்கிற மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாகவே முடிய வாய்ப்புண்டு.

உடன் பணியாற்றுவோரிடம் அனுசரணையுடன் நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர பொருட்களில் நாட்டம் உண்டாகும்.

விருச்சிகம் :

விருச்சிகம் :

இன்று அதிக உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இணையிடமிருந்து நல்ல சேதி வந்து சேரும். தாய் மற்றும் தாய் ஸ்தானத்தில் இருப்பவர்களால் இன்று அனுகூலமுண்டு ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள முயற்சி எடுப்பீர்கள். காதலர்களின் உறவில் சின்ன விரிசல் விழலாம். வேலை செய்வோருக்கு இன்று மிகவும் சிறந்த நாளாக இருக்கும். உங்களுடைய பணியை மேலிடத்தில் அங்கீகரிப்பார்கள்

தனுசு :

தனுசு :

இருச்சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு இன்று செலவு ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பாராத நட்புகளால் வியாபாரத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வருவீர்கள். காலையிலிருந்து உடல் உபாதைகள் எட்டிப் பார்க்கும். அலுவல் வேலையை நிதானமாக கையாள்வது நல்லது.

கணவன் மனைவி இடையே விரோத போக்கு குறைந்து காணப்படும்.

மகரம் :

மகரம் :

நெருங்கிய நண்பர்களால் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. மனம் அமைதி கொள்ளாமல் அலைபாய்ந்திடும் நாள் இது.

உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.வியாபாரத்தில் தேக்க நிலையைப் போக்க நீங்கள் எடுக்கும் முயற்சி கை கொடுக்கும்.

உங்களுடைய குல தெய்வத்தை இன்று வணங்குவது உங்கள் நாளை இன்பமாக்கும்.

கும்பம் :

கும்பம் :

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். நீங்கள் செய்கிற, துவங்கிற விஷயம் இன்று வெற்றிகரமாகவே முடிந்திடும்.

நண்பர்கள் உதவியுடன் புதிய தொழில் துவங்கும் வேலை நல்ல முன்னேற்றம் காணும். தாய் வழி உறவுகளால் இன்று செலவு உண்டு. அரசு ஆவணங்கள் தொடர்பான சிக்கல் தீர்ந்திடும். பூர்வீக சொத்துக்களால் செலவு அதிகரிக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கால பைரவரை வணங்குவதால் கீர்த்தி உண்டாகும்.

 மீனம் :

மீனம் :

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. வீண் விவாதங்களினால் உங்கள் மனம் புண்பட நேரிடும். வியாபாரத்தில் திடீர் பணவரவு அதிகரிக்கும். பெண்களுக்கு மனஸ்தாபம் உண்டாகும் ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்சிக்கான ஆயுத்தங்கள் நிகழலாம்.

வேலை செய்யுமிடத்தில் சங்கடமான சூழல் உருவாகும். ஆஞ்சிநேயரை வழிபட்டால் சங்கடஙக்ள் பறந்து போகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Feburary 16 Rasi Palan

Feburary 16 Rasi Palan
Story first published: Friday, February 16, 2018, 6:30 [IST]