பிப்ரவரி 15 - இன்றைய ராசி பலன்!

By: Staff
Subscribe to Boldsky

இன்றைய நாள் இனிதாக துவங்கியிருக்கிறது. இன்றைய புத்தம் புதிய நாளினை துவங்குவதற்கு முன்னதாக இந்த நாள் உங்களுக்கு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்...

ஒவ்வொரு ராசிக்கும் இன்றைய நாள் எப்படியிருக்கும், நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா என்பது குறித்த எதிர்ப்பார்ப்பு நிறைந்த கேள்விகளுக்கு பதில்கள் காத்திருக்கிறது தொடர்ந்து படித்திடுங்கள். உற்சாகத்துடன் இன்றைய நாளினை துவங்க வாழ்த்துக்கள்

Feb 15 Rasi palan
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மேஷம் :

மேஷம் :

இன்றைக்கு உங்களுக்கு அதிக அலைச்சல் இருக்கும், நீங்கள் இன்றைக்கு மேற்கொள்ளும் பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். உங்களது உடன் பிறப்புக்களால் நல்ல செய்திகளை கேட்பீர்கள். தொடர்ந்து இன்று உங்களுக்கு உடல் சோர்வு நீடிக்கும்.

மனதிற்கு சஞ்சலமான சில விஷயங்கள் நடந்தேறினாலும் எளிதாக கடந்து வந்து விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் எந்த வீண் சச்சரவுகளும் வேண்டாம் மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டும், பெண்கள் இன்றைக்கு குடும்ப உறுப்பினர்களிடையே அனுசரித்துச் செல்வீர்கள்.

ரிஷபம் :

ரிஷபம் :

இதுவரை விலகியிருந்த உறவுகள் மீண்டும் உங்களோடு உறவாட வருவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பினால் உங்களது வேலை அல்லது வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வழி பிறக்கும். இன்றைக்கு மிகவும் கேளிக்கைகள் நிறைந்த நாளாக கருதப்படும்.

கடன் பிரச்சனை தீர முக்கிய முடிவினை இன்று எடுப்பீர்கள். கண் திருஷ்டி ஏற்பட வாய்ப்புண்டு மாணவர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக அமைந்திருக்கும். பென்கள் வெளியில் செல்லும் போது தங்கள் உடமைகளில் பாதுகாப்பாக இருக்கவும்.

மிதுனம் :

மிதுனம் :

இன்று வீட்டில் கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி மகிழ்வுடன் இருப்பீர்கள். சேமிப்பு தொடர்பான விவகாரங்களில் கவனம் தேவை , பொது இடத்தில் பணியாற்றுபவர்கள் உங்களது நடவடிக்கை மற்றும் பேச்சில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய முக்கியமான நாள் இது!

மாணவர்கள் உடன் படிக்கும் மாணவர்களின் விவாதங்களில் பங்கேற்காமல் தவிர்ப்பது நல்லது, பெண்கள் பணி செய்யும் இடத்தில் இன்று இக்கட்டான சூழலை சந்திப்பீர்கள்.

கடகம் :

கடகம் :

இன்றைக்கு எந்த புதிய செயலை ஆரம்பித்தாலும் நீங்கள் வெற்றிகரமாக முடிப்பீர்கள். பெற்றோர் குழந்தைகளிடத்தில் சற்று பொறுமையாக நடந்து கொள்ளவும் தாய் வழி உறவினர்களால் உங்களுக்கு செலவு உண்டு. வீண் செலவுகள் செய்யும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இன்று சஞ்சலமான நாளாக அமைந்திடும். பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளிடம் நல்ல பேரை பெறுவீர்கள்.

சிம்மம் :

சிம்மம் :

பல நாட்களாக எதிர்ப்பார்த்த உதவி உங்களுக்கு கிடைத்திடும். புதிய நட்புகள் கிடைக்கும் நாள் இது! சொத்துக்களை வாங்க வேண்டும், அல்லது பூர்வீக சொத்தினை மராமத்து வேலைகளைச் செய்ய வேண்டும் என்று திட்டமிடுவீர்கள். புதிய வேலை தேடும் வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்கவும்.

மாணவர்கள் இன்றைக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவீர்கள். பெண்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் எட்டிப்பார்க்கும்.

கன்னி :

கன்னி :

இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள். அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர்கள் . குடும்பத்தில் உற்சாகம் பொங்கிடும். திடிர் பயணங்களால் மனம் உற்சாகம் கொள்வீர்கள். ஆன்மீக சிந்தனை இன்று உங்களுக்கு மேலோங்கும். தெரியாத நபர்களிடத்தில் உங்களது தனிப்பட்ட விஷயங்களை பகிர வேண்டாம். காதலர்களுக்கு இன்றைய தினம் சற்று இக்கட்டான சூழலாக விளங்கிடும்.

விளையாட்டுத் துறையில் இருக்கும் மாணவர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமைந்திடும். பெண்களுக்கு கணவர் வழி உறவுகளால் மனசஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு.

 துலாம் :

துலாம் :

இன்று உணவு விஷயத்தில் சற்று தாரளமாக இருப்பீர்கள். விருந்துகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு உண்டு. தாயுடன் அணுகூலமான உறவு மேம்படும். வேலை செய்யுமிடத்தில் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகலாம். மனதில் இனம் புரியாத சோர்வு தொற்றிக் கொள்ளும்.

திடீர் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகலாம். மாணவர்கள் தங்களது மறதியினால் தண்டனை பெறலாம். பெண்களுக்கு மருத்துவ செலவு ஏற்படும்.

விருச்சிகம் :

விருச்சிகம் :

உங்கள் மீதான விருப்பம் மேலோங்கும், என்னாலும் சாதிக்க முடியும் என்று உறுதியுடன் இன்றைய நாளை துவங்குவீர்கள். வழக்கத்திற்கு மாறான கூடுதல் உற்சாகம் இன்று உங்கள் மனதில் எழக்கூடும்.

உடனிருப்போர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்களது சிறிய நடவடிக்கை உங்கள் மீதான தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்திடும் என்பதால் கவனமாக இருக்கவும். மாணவர்கள் ஆசிரியர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பது நல்லது. பெண்களுக்கு கணவருடனான அன்னியோன்னியம் அதிகரிக்கும்.

தனுசு :

தனுசு :

உடன் பிறப்புகளால் உங்களுடைய நாள் இன்று மகிழ்வானதாக அமைந்திடும் இன்று உங்களுக்கு வீண் செலவுகள் உண்டு. சருமம் தொடர்பான தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரிகள் இன்றைக்கு யாருக்குமே கடன் அல்லது வாக்குறுதி கொடுக்க வேண்டாம். பணி செய்யும் இடத்தில் உடன் பணியாற்றுவோருக்கிடையில் வார்த்தைப் போர் உண்டாகலாம்.

மாணவர்கள் இன்று ஏமாற்றத்தை சந்திப்பீர்கள் பெண்களுக்கு எதிர்பாராத பாராட்டு கிடைத்திடும்.

மகரம் :

மகரம் :

இன்று உங்களுக்கு எதிர்ப்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது. தேவையற்ற எண்ணங்களை தவிர்த்திடுங்கள். தலை வலியால் மிகவும் அவதிப்படுவீர்கள். இன்று விநாயகரை வணங்குவது உங்களுக்கு நல்லது. வீண் வதந்திகளால் மனம் சஞ்சலப்படும். வியாபாரிகள் தொலை தூர பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மாணவர்கள் தங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு செரிமானம் தொடர்பான பிரச்சனை எழலாம்.

கும்பம் :

கும்பம் :

உங்களது செயலால் இன்று நல்ல பெயர் கிடைத்திடும். நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த சம்பவம் நடந்தேறும். திடீர் உறவினர் வருகை உங்களை திக்குமுக்காட வைத்திடும். தந்தையுடனான உங்கள் உறவு மேம்படும். பணியாளர்கள் இன்று மன சஞ்சலத்தினை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு எதிர்ப்பார்த்த லாபம் உண்டு.

மாணவர்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள். பெண்களுக்கு வரன் தொடர்பான சிக்கல்கள் தீர்ந்திடும்

மீனம் :

மீனம் :

குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.கண்ணாடி பொருட்களை கையாளும் போது கவனமாக கையாளுங்கள் நண்பர்களின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சியில் இறங்க வேண்டாம். இன்று உங்களுக்கு அதிகமான அலைச்சல் உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்ப்பாராத வாய்ப்புகள் கிடைத்திடும்.

மாணவர்கள் இன்று மறதியால் அவதிப்படுவீர்கள். பெண்கள் இன்று கூடுதல் உற்சாகமாக காணப்படுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Feb 15 Rasi palan

Feb 15 Rasi palan
Story first published: Thursday, February 15, 2018, 6:30 [IST]
Subscribe Newsletter