For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நிரவ் மோடி கடை திறப்பு விழாவில் அமெரிக்க அதிபர்!

  |
  நீரவ் மோடி கடை திறப்பு விழாவில் அமெரிக்க அதிபர்!- வீடியோ

  இந்தியா முழுக்க கடந்த ஒரு வாரமாக பேசப்பட்டு வரும் பெயர் நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோதமாக பணப்பறிமாற்றம் மற்றும் கடன் பெற்று மோசடி என தொடர்ந்து செய்திகளில் இடம் பெற்று வருகிறார்.

  அதோடு அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகள்,கைப்பற்றப்பட்ட பொருட்கள் என எல்லாமே பகீர் ரகம். கடன் பெற்று ஊழல் செய்ததோ 11,400 கோடி ஆனால் சொத்துக்களை விற்று ஆறாயிரம் கோடி வரை தருகிறேன் என்று தாராளம் காட்டியிருக்கிறார் இந்த ஏழை வியாபாரி.

  இதே நேரத்தில் நிரவ் மோடி பற்றி இதுவரை உங்களுக்குத் தெரியாத சில தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  வைர நகை வியாபாரம் செய்யும் பல்வேறு நிறுவனங்களை வைத்திருக்கும் நிரவ் மோடி குஜாராத்தி குடும்பத்தில் பிறந்திருக்கிறார். பெல்ஜியத்தில் இருக்கக்கூடிய ஆண்ட்வெர்பில் வளர்ந்தார். வைர நகைகளின் தலைநகரம் என்று இந்த நகரம் அழைக்கப்படுகிறது.

  அமெரிக்காவில் இருக்கக்கூடிய வார்டன் ஸ்கூல் ஆஃப் பென்சல்வேனியாவிலிருந்து பாதியிலேயே வெளியேறி வைர வியாபாரத்தை பார்க்கத் துவங்கினார்.

  Image Courtesy

  #2

  #2

  2010 ஆம் ஆண்டு பிஸினஸில் இறங்கி மிக குறுகிய காலத்திலேயே ஹாலிவுட் பிரபலங்களான கேட் வின்ஸ்லெட்,டகோடா ஜான்சன் ஆகியோர் இவரது பிராண்டுக்கு அம்பாசிடர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

  2014 ஆம் ஆண்டு தில்லி மற்றும் மும்பையில் தனி ஷோரூம் திறக்கப்பட்டது.

  Image Courtesy

  #3

  #3

  இந்தியாவின் மிக இளவயது பில்லியனர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. 2016 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட தகவலின்படி நிரவ் மோடி உலக பணக்காரர்களில் 1067வது இடத்திலும் இந்திய அளவில் 46வது இடத்திலும் இருக்கிறார்.

  இந்தியாவைத் தாண்டி ஆசிய கண்டத்தையும் தாண்டி இவரது பிஸ்னஸ் பெருகியது.

  Image Courtesy

  #4

  #4

  2017 ஜனவரியில் நடிகை ப்ரியங்கா சோப்ரா பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டார். பிரியங்கா சோப்ராவும் சித்தார்த் மல்ஹோத்ராவும் இணைந்து நடித்த விளம்பரம் மிகவும் பிரபலமானது.

  இந்தியாவில் தன் பிஸ்னஸை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அதாவது 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தன்னுடைய கடையை ஆரம்பித்துவிட்டார் நிரவ்மோடி.

  Image Courtesy

  #5

  #5

  ஹாலிவுட்,பாலிவுட்டின் பல பிரபலங்கள் நிரவ் மோடியின் வைர நகைகளை அணிந்து போட்டோஷூட் எடுத்திருகிறார்கள். ஹாலிவுட் பிரபலமான தாராஜி ஹென்சன் தான் ஆஸ்கார் விருது வாங்கும் போது நிரவ் மோடியின் வைர நகையையே அணிந்திருந்தார். தகோடா ஜான்சன் கோல்டன் க்ளோப் விருது வாங்குகையில் நிரவ் மோடியின் வைர நகையையே அணிந்திருந்தார்.

  Image Courtesy

  #6

  #6

  டில்லி,மும்பை,நியூ யார்க்,லண்டன்,ஹாங் காங் என பதினாறுக்கும் மேற்பட்ட கடைகளை உலகளவில் வைத்திருக்கிறார் நிரவ் மோடி. நியூயார்க்கில் இருக்கும் மேடிசன் அவின்யூவில் நிரவ் மோடியின் வைரநகைக்கடை திறப்பு விழா நிகழ்விற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார் என்றும் சொல்லப்படுகிறது.

  க்றிஸ்டி கேட்லாக் கவரில் இடம்பெற்ற ஒரே பிராண்ட் நிரவ் மோடியின் பிராண்ட் மட்டும் தான்.

  Image Courtesy

  #7

  #7

  அமெரிக்காவில் குடியுரிமைப்பெற்றவரும் நிரவ் மோடியின் மனைவியும் ஆனவர் அமி மோடி. இவர்கள் ஜனவரி மாதமே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டாரக்ள் என்று சொல்லப்படுகிறது. சிபிஐ இந்த கேஸை ஜனவரி 29 ஆம் தேதி விசாரிக்க ஆரம்பிக்கிறது அவர்கள் நிரவ் மோடி அவரது மனைவி அமி மோடி, அவரது சகோதரர் நிஷல் மற்றும் மெஹல் ஆகியரை கைது செய்ய உத்திரவிட்டது.

  நிரவ் மோடியின் தாத்தா மற்றும் அப்பாவும் வைர வியாபாரம் செய்துவந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

  Image Courtesy

  #8

  #8

  இவர்களுக்கு ரோஹின்,அப்சா மற்றும் அனன்யா என மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். என்ன தான் இவர் பிரபலமானவராக இருந்தாலும் குழந்தைகளை வெளியுலகத்திற்கு மீடியா வெளிச்சம் தெரியாமலே தான் வளர்த்திருக்கிறார்கள்.

  அதே போல பார்ட்டிகளுக்கு என்று கூட வெளியில் அனுப்புவதில்லையாம். இவர்களது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கூட வீட்டிலேயே தான் நடக்குமாம்.

  Image Courtesy

  #9

  #9

  அதே போல வீட்டில் பாரம்பரிய நடைமுறைகள் பலவற்றை இன்றளவும் பின்பற்றி வருகிறார் நிரவ். வெளிநாட்டில் செட்டில் ஆனவராக இருந்தாலும் மனைவி மற்றும் குழந்தைகளிடத்தில் குஜராத்தி மொழியிலேயே தான் பேசுகிறார்.

  Image Courtesy

  #10

  #10

  நிரவ் மோடி தன்னுடைய பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதில் மனைவி அமி மோடி ஒரு உறுப்பினராக இருக்கிறார். அதே போல நிரவ் மோடி பெயரில் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 250 மாணவர்கள் உதவி பெறுகிறார்கள்.

  Image Courtesy

  #11

  #11

  தற்போது நிரவ் மோடி குடும்பத்தினருடன் நியூயார்கில் உள்ள JW Marriott's Essex House என்னும் இடத்தில் தங்கியிருக்கிறார்கள். அந்த ஹோட்டலில் வேலை பார்ப்பவரிடத்தில் நிரவ் மோடி குறித்து கேட்கப்பட்ட போது, இந்த செய்தி இந்தியாவில் மட்டும் தான் பரபரப்பாய் பேசுப்படுகிறது இங்கே ஒன்றும் இல்லை, நிரவ் இங்கே பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்.

  Image Courtesy

  #12

  #12

  குழந்தைகள் துருபாய் அம்பானி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களையும் பள்ளியிலிருந்து விலக்கி தான் நியூயார்க் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது தங்களது நண்பர்களிடத்தில் அப்பாவிற்கு உடல்நலம் சரியில்லை, அதனால் நாங்கள் நியூயார்க்கில் செட்டிலாகப்போகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள் அவரது குழந்தைகள்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Facts About Nirav Modi

  Facts About Nirav Modi
  Story first published: Saturday, February 24, 2018, 11:42 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more