For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்ஃபி எடுத்தது ஒரு குத்தமாய்யா? தோனியை வச்சு செய்த நெட்டிசன்கள்!

தோனியின் எளிமையான குணத்தை கலாய்த்தவர்கள் ட்வீட் செய்தவற்றின் தொகுப்பு

|

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக வலம் வருபவர் தல தோனி. அவருடைய கேப்டன்சி,பேட்டிங் உட்பட பல விஷங்கள் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி கிரிக்கெட் வாசனையே தெரியாதவர்கள் கூட தோனியின் பெயரை உச்சரிக்க காரணமாய் இருப்பது அவருடைய சிம்ப்ளிசிட்டி.

Dhoni haters Troll his simplicity

Image Courtesy

பழக மிகவும் எளிமையானவர். பிற போட்டியாளர்களை, பிறரை அரவணைத்துச் செல்லும் குணம் ஆகியவை பெருமளவு பேசப்படுகிறது. அதனாலேயே அவருக்கு சேர்ந்த கூட்டம் இன்னும் அதிகம் என்று கூட சொல்லலாம். இது ஒரு புறம் இருக்க, என்ன தான் எல்லாரும் பாராட்டும் ஹீரோ என்றாலும் அவருக்கும் சில எதிரிகள், விமர்சகர்கள் என்று இருக்கத்தானே செய்வார்கள்.

தோனியின் விமர்சகர்களுக்கு இம்முறை கையில் கிடைத்திருப்பது தோனியின் சிம்ப்ளிசிட்டி. தோனியின் சிம்ப்ளிசிட்டியை கலாய்த்த சில ட்வீட்கள் இங்கே...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

#1

உலகிலேயே மிகப்பெரிய பணக்கார கிரிக்கெட் வீரர் தோனி. அவர் நினைத்தால் துபாயில் இருக்கிற எண்ணெய் கிணறு கூட விலை பேசி வாங்க முடியும். ஆனால் அவருடைய எளிமையான குணத்தால் இன்னமும் தண்ணீரில் தான் குளிக்கிறார் என்று ட்வீட் தட்டியிருக்கிறார் ஒரு நபர்.

#2

சென்னை சூப்பர் கிங்க்ஸின் ஐபிஎல் வெற்றியைத் தொடர்ந்து, உருவாக்கப்பட்ட இந்த மீமிலும் தோனியின் சிம்ப்ளிசிட்டி தான் கேலிக்கூத்தாகியிருக்கிறது. அதில் தோனி நினைத்திருந்தால் அனைத்து ஐபில் சீசன்களை விளையாடி கோப்பை ஜெயித்திருக்க முடியும். ஆனால் தோனி மூன்றே மூன்று சீசன் மட்டும் தான் ஃபிக்ஸ் செய்திருக்கிறார்.

இதைவிட அடுத்த வரி தான் ஹைலைட்.... தோனியின் சிம்ப்ளிசிட்டி லெவலைப் பாருங்கள்...

#3

தோனி விளையாட்டின் மைதானத்தில் ஓய்வெடுக்கும் படத்தை போட்டுவிட்டு, தோனியிடம் இருக்கும் பணத்திற்கு அவர் ஓர் சோஃபா தயாரிக்கும் தொழிற்சாலையையே விலைக்கு வாங்க முடியும். ஆனால் அவர் தரையில் தான் உட்கார்ந்திருக்கிறார் என்று கலாய்த்திருக்கிறார்கள்.

#4

வயலில் நின்று தோனி செல்ஃபி எடுத்த புகைப்படத்தை போட்டு.... தோனி இந்திய அணிக்காக பகுதி நேரமாகத்தான் கிரிக்கெட் விளையாடுகிறார். ஆனால் அவருடைய முக்கியமான வேலை விவசாயம் தான். அவர் கோலியைப் போல பிஸ்னஸ் செய்யவில்லை என்ற இமேஜை பகிர்ந்தவர், கீழே என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?

தன்னை போட்டோ எடுக்க ஒரு ஆளை சம்பளத்திற்கு நியமிக்கும் அளவிற்கு வருமானம் இருந்தும் அப்படி ஏதும் செய்யாமல் தன்னைத் தானே செல்ஃபி எடுத்துக் கொள்ளும் தோனி சிம்ப்ளிசிட்டி தான்.

#5

#5

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கேக்கெல்லாம் முகத்தில் தடவ எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்தவர்கள், முகத்தை சுத்தம் செய்ய மிகவும் விலை உயர்ந்த சோப் வாங்க வசதி இருந்தும் தோனி அதையெல்லாம் செய்யவில்லை என்று கலாய்த்திருக்கிறார்கள்.

Image Courtesy

#6

தோனியின் சிம்ப்ளிசிட்டி லெவலைச் சொல்ல இதைவிட யாரும் கலாய்த்திருக்க முடியாது. உலகிலே பணக்கார கிரிக்கெட்டரான தோனி இன்னமும் ஆக்ஸிஜனைத் தான் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்.

#7

ஆக்ஸிஜனுக்கு அடுத்த லெவல் இது... எம்.எஸ் தோனியிடம் இருக்கிற பணத்திற்கு அவர் வேறு கிரகத்திற்கு கூட செல்ல முடியும் ஆனால் தோனி இந்த பூமியில் தான் வாழ வேண்டும் என்று தேர்ந்தெடுத்திருக்கிறாரே...

சிம்ப்ளிசிட்டி லெவலை கணக்குப்புதிராகவும் கொடுத்திருக்கிறார்.

#8

தோனியிடம் இருக்கிற புகழுக்கும் பணத்திற்கும் தனி ஐபிஎல் டீம் வாங்க முடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் அவர்களில் ஒருவராக விளையாடுவது தோனியின் சிம்ப்ளிசிட்டி.

#9

தன்னுடைய வழக்கமான ஸ்டைலாக 6 களாக பறக்க விட்டிருக்க முடிந்தும் வேண்டுமென்றே அவுட் ஆகி பெவிலியின் திரும்பும் தோனியின் சிம்ப்ளிசிட்டி தான் என்று சொல்லாலமல் சொல்லி கலாய்த்திருக்கிறார் இந்த நபர்.

#10

தோனியிடம் இருக்கிற செல்வத்திற்கு தனி ஹெலிகாப்டரே வாங்க முடியும். ஆனால் அதை விடுத்து தோனி இன்னமும் ஹெலிகாப்டர் ஷாட் அடித்துக் கொண்டிருக்கிறார். சிம்ப்ளிசிட்டி என்று சொன்னாலே அது தோனி தான் என்றிருக்கிறார் இந்த நபர்.

#11

கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பணக்கார வீரராக வலம் வருகிறார் தோனி. அவர் நினைத்தால் நாட்டின் அனைத்து தங்கத்தையும் விலை கொடுத்து வாங்க முடியும். தங்கத்தாலேயே க்ரீடம் செய்து அணிந்துகொள்ள முடியும். ஆனால் தோனி இன்னமும் ஹெல்மெட் தான் அணிந்து கொள்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Dhoni haters Troll his simplicity

Dhoni haters Troll his simplicity
Desktop Bottom Promotion