கால சர்ப்ப தோஷம் இருந்தால் திருமணத்தடை ஏற்படும் என்பது உண்மையா?

By: Staff
Subscribe to Boldsky

ஒவ்வொருவரின் ஜாதக நிலைப்படி அவரது எதிர்காலம் கணக்கிடப்படும்.அதோடு அவருக்கு ஏதேனும் தோஷங்கள் இருக்கிறதா? இதனால அவருக்கு எத்தகைய பாதிப்புகள், எந்த நேரத்தில் ஏற்படும் என்பதை நம்மால் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடிகிறது.

எல்லாரும் கேட்டவுடன் சற்று பயப்படுகிற தோஷங்களில் ஒன்று நாக சர்ப தோஷம். இது குறித்த பல்வேறு வதந்திகள் உலாவிக் கொண்டிருக்கின்றன. முதலில் நாக சர்ப தோஷம் என்றால் என்ன அது யாருக்கெல்லாம் வரும், வந்தால் என்ன பலன் போன்ற அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் தேவையற்ற பயங்களிலிருந்து நீங்கள் விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் கிரகங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப யோகம் எனப்படும். இதில் ராகு என்பது காலனையும், கேது சர்ப்பத்தையும் குறிக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும்.

இப்படி ராகு கேதுவுக்கு இடையில் ஏழு கோள்களும் இருக்கக்கூடிய காலத்தை சர்ப்ப காலம் என்று குறிப்பிடுகிறார்கள். அப்போது பிறக்கிற குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும்.

#2

#2

உங்கள் ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் இருந்து மற்ற கட்டங்கள் காலியாக இருந்தால் மட்டுமே அவை நாக சர்ப தோஷமாகும். எதாவது ஒரு கிரகம் விலகியிருந்தால் கூட அவை நாக சர்ப தோஷம் ஆகாது.

இவற்றில் கிரகங்கள் அமையும் தன்மை பொருத்து கால சர்ப தோஷம் பல வகைகளாக பிரிக்கிறார்கள். இதற்கேற்ற பலன்களும் இருக்கிறது.

#3

#3

முதல் வகை அனந்த கால சர்ப்ப தோஷம். ராகு முதல் வீட்டிலும் கேது ஏழாம் வீட்டிலும் இருப்பர். மற்ற கிரகங்கள் இவர்களுக்கு இடையில் அமைந்திருக்கும். அதாவது முதலாவதும் கடைசியுமாக ராகு கேது இருந்தால் அதற்கு பெயர் அனந்த கால சர்ப்ப தோஷம்.

இந்த தோஷம் இருப்பவர்களுக்கு இளமை காலம் மிகவும் சிரமமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும். சிலருக்கு திருமணத்தடை இருக்கும். அதன் பிறகான வாழ்க்கை அமைதியாய் அமைந்திடும்.

Image courtesy

#4

#4

இரண்டாம் வீட்டில் ராகு மற்றும் கேது எட்டாம் வீட்டில் இருந்தால் அதற்கு குளிகை கால சர்ப்ப தோஷம் . இவர்களுக்கு பூர்வீக சொத்து நிலைக்காது,தொடர்ந்து உடல் நிலையில் எதாவது பிரச்சனைகள் வந்து கொண்டேயிருக்கும். 32வயதுக்கு மேல் நன்மைகள் உண்டு.

பொருளாதரப் பின்னடைவு ஏற்படக்கூடும்.

Image Courtesy

#5

#5

ராகு மூன்றாம் வீட்டிலும் கேது ஒன்பதாம் வீட்டிலும் இருப்பதை வாசுகி கால சர்ப்பதோஷம் என்கிறார்கள். இது மனபலத்தை கெடுக்ககூடியது. அதனால் இவர்களால் எந்த வேலையையும் துணிந்து செய்ய முன் வர மாட்டார்கள். இவர்கள் பார்க்கிற வேலை மற்றும் தொழிலில் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டேயிருக்கும். சகோதரர்களுக்கிடையில் விரோதப் போக்கு ஏற்படும்.

Image Courtesy

#6

#6

சங்கல்ப கால சர்ப்ப தோஷம் என்றால் நான்காம் வீட்டில் ராகுவும் பத்தாம் வீட்டில் கேதுவுமிருக்க வேண்டும். இவர்களுக்கு வாசுகி கால சர்ப்ப தோஷ தாக்கத்துடன் கூடுதலாக மன அழுத்தம் ஏற்படக்கூடும்.

திருமணத்திற்கு வெளியே ஏற்படுகிற உறவுமுறையினால் பல்வேறு சங்கடங்களை சந்திக்க நேரிடும். பெற்றோரின் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

Image Courtesy

#7

#7

ஐந்தாம் வீட்டில் ராகு மற்றும் பதினோராம் வீட்டில் கேது இருப்பவர்களுக்கு பத்ம கால சர்ப்ப தோஷம் இருக்கும். இது தான் சற்று மோசமான தோஷமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இது புத்திர தோஷத்தை கொடுக்கக்கூடியது. குழந்தை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுக்கூடும் இதனால் கணவன் மனைவிக்கு இடையே உறவில் விரிசல் விழும் .

48வயதுக்கு பிறகு இவர்களுக்கு நல்ல மாற்றங்கள் தெரியும்.

Image Courtesy

#8

#8

மஹா பதம கால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கு ஆறாம் வீட்டில் ராகுவும் பன்னிரெண்டாம் வீட்டில் கேதுவும் இருப்பார்கள். இது இளமைக்காலத்தை விட பிற்காலத்தில் தான் சிறந்த பலனை அளிக்கக்கூடியது. அதிகார பதவி, புகழ், அந்தஸ்த்து ஆகியவற்றை கிடைக்கச் செய்திடும்.

புகழின் உச்சியில் ஏற்றிவிடும் அதே சமயம் நம்மை அதளாபாதாளத்திற்கும் கொண்டு செல்லக்கூடியது இது. இவர்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பு இருக்கும்.

Image Courtesy

#9

#9

ஏழாம் வீட்டில் ராகுவின் லக்னத்தில் கேது இருந்தால் அது கால மிருத்யு சர்ப்ப தோஷம்.இவர்களுக்கு 27வயதுக்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு முன்னால் செய்து கொண்டால் அது நிலைக்காது.

Image Courtesy

#10

#10

எட்டாம் வீட்டில் ராகுவும் இரண்டாம் வீட்டில் கேதுவும் இருந்தால் அது கார்க்கேடக கால சர்ப்ப தோஷம். பூர்வீக சொத்துக்களால் இவருக்கு ஆபத்துக்கள் உண்டு. குறிப்பாக தந்தை வழி சொத்தினை தவிர்ப்பது நலம். அதனை அடைய ஆசைபட்டு பல்வேறு தவறான செயல்களை செய்ய வைத்திடும்.

Image Courtesy

#11

#11

சங்ககுட கால சர்ப்பதோஷம் என்பது ஒன்பதாம் வீட்டில் ராகுவும் மூன்றாம் வீட்டில் கேதுவும் இருந்தால் சொல்லக்கூடியது. இவர்களுக்கு சீரான ஒரு வாழ்க்கை அமையாது. மேடு பள்ளங்கள் நிறைந்ததாகவே இருக்கும். தொடர்ந்து தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு உண்டு.

Image Courtesy

#12

#12

10ஆம் வீட்டில் ராகு மற்றும் நான்காம் வீட்டில் கேது என இருந்தால் அதன் பெயர் கடக கால சர்ப்ப தோஷம் வேலை செய்யும் இடத்தில்,தொழில் செய்கிற இடத்தில் பிரச்சனைகள் உருவாகிடும். பத்தாம் வீட்டில் ராகு இருப்பதால், வெளிச்சம் இல்லாத தொழில் அமையும். அதாவது ஒளியைக் கொண்டு வேலை செய்வது போல புகைப்படம் எடுப்பது, எக்ஸ்ரே போன்றவை.

அதோடு இந்த தோஷத்தினால் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டு தண்டனை பெறக்கூடிய சூழல்கள் உருவாகும்.

Image Courtesy

#13

#13

பதினோராம் இடத்தில் ராகு மற்றும் ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் அதன் பெயர் விஷ்தார கால சர்ப்ப தோஷம். அடிக்கடி பயணம் மேற்கொள்கிற வேலை அமையும். இதனால் உடல்நலனில் ஏதாவது சிக்கல்கள் வந்து கொண்டேயிருக்கும்.

Image Courtesy

#14

#14

பன்னிரெண்டாம் இடத்தில் ராகு மற்றும் ஆறாம் இடத்தில் கேது இருக்க இதனை ஷேஷ கால சர்ப்ப தோஷம் என்பார்கள். இவர்களுக்கு கல்வி யோகம் நிறைய இருக்கிறது. கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதே சமயம் இவர்களுக்கு எதிரிகளும் அதிகமிருப்பர்.

Image Courtesy

#15

#15

கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.

தோஷத்தின் வீரியம் குறைய பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வாருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

ராகு கேதுக்கள் நிற்கும் நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வது வேண்டும். ஸ்வாதி, சதயம், திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களில் உள்ள பிரதோஷ காலத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்தால் ராகு கேதுவின் விஷத்தன்மை நீங்கி தோஷத்தின் வீரியம் குறைந்திடும்.

Image Courtesy

#16

#16

கனவில் இறந்த மூதாதையர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். சில நேரத்தில் நம்மை யாரோ தாக்க வருவது போலேயோ அல்லது கொலை செய்வது போலேயோ தோன்றலாம். தண்ணீர் நிரம்பிய இடங்கள் அடிக்கடி நினைவில் வந்து போகும். இப்படி உங்கள் கனவில் தொடர்ந்து ஏதாவது வந்து கொண்டிருந்தால் இதனை கால சர்ப்ப தோஷத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

Image Courtesy

#17

#17

இது முன் ஜென்மத்தில் செய்த வினையால் ஏற்படுகிறது. முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படக்கூடும்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Detail About Kala Sharpa Dosh

Detail About Kala Sharpa Dosh
Story first published: Friday, February 2, 2018, 11:20 [IST]
Subscribe Newsletter