இந்த 2 ராசிக்காரரும்இன்னைக்கு வெள்ளை சட்டை போட்டா போற காரியம் ஜோரா நடக்கும்...

daily horoscope 6.6.18, 6.6.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

daily horoscope 6.6.18

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசிர்வாதமும் ஆலோசனைகளும் கிடைக்கும். சுப செய்திகள் வந்து சேரும். சுப செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தன வரவும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். மனதில் இருந்து வந்த சிறுசிறு கவலைகள் நீங்கும். வேலையில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பயன்படுத்திக் கொள்ள வேண்டியது உங்களுடைய சாமர்த்தியம். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் திசை தெற்காகவும்,அதிர்ஷ்ட எண் 5 ஆகவும் அதிர்ஷ்ட நிறம் சிவப்பாகவும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை மிகச் சிறப்பாக செய்து முடிப்பார்கள். செய்யும் தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளால் உங்களுடைய மதிப்புகள் உயரும். வீட்டில் உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அரசாங்கத்தின் மூலமாக அனுகூலங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடமேற்கும் திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கிறது.

மிதுனம்

மிதுனம்

வீட்டில் இதுவரை இருந்து வந்த பொருளாதார சிக்கல்கள் விலகும். பொது காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மனதில் தேங்கியிருந்த கவலைகளை தூக்கி எறிந்துவிட்டு மகிழ்ச்சியாக பயணிப்பீர்கள். தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமண முயற்சிகள் கைகூடும். வரன்கள் வந்துசேரும். வாகனச் சேர்க்கை ஏற்படும். திறமையின் காரணமாக புதிய பொறுப்புகள் உண்டாகும். உங்களுடைய அதிர்ஷ்டமான எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.

கடகம்

கடகம்

பயணங்களின் மூலம் நினைத்த காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கினில் மாற்றம் உண்டாகும். உடல் சோர்வின் காரணமாக எடுத்த காரியத்தை நிறைவேற்ற கால தாமதமாகும். நினைவாற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 9ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதாநிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

தொழிலில் உங்களுடைய முழு திறமையும் வெளிப்படும். உங்களுடைய ஆற்றலால் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும். வீடு, மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சின்ன சின்ன தடைகளும் தாமதங்களும் உண்டாகலாம். பொருள் சேர்க்கை போதுமான அளவில் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களுடனும் நண்பர்களுடனும் சிறிது கவனத்துடன் செயல்பட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

தாய்வழி உறவினர்கள் குறிப்பாக, தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். இந்திரங்கள் சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். நினைத்த காரியத்தை முடிக்க முடியாமல் இழுத்தடிக்க வேண்டியிருக்கும். தேவையில்லாத அலைச்சல்கள் உண்டாகும். உத்தியுாகத்தில் இருப்பவர்கள் அடுத்தவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க நேரிடும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக காவியும் இருக்கும்.

துலாம்

துலாம்

உறவினர்களிடம் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். இன்றைக்கு எதிர்பாராமல் திடீர் செலவுகள் வந்து உங்களுக்கு நெருக்கடியைத் தரும். குடும்ப உறுப்பினர்களின் மீதான அக்கறையால் அவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் தேவையில்லாத மனச்சோர்வு உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் என எவரிடமும் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளையும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

மனதில் உண்டாகிற தேவையில்லாத எண்ணங்களினால் மனக்கவலைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களினால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதுவித திட்டங்களை முயற்சி செய்து பார்ப்பீர்கள். தொழிலில் நுட்பமான நுணுக்கங்களைக்கூட கற்றுக்கொண்டு, செயல்படத் துவங்குவீர்கள். சுயதொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய புதிய முயற்சிகளால் லாபம் உண்டாகும். நீங்கள் செய்யும் நல்ல காரியங்களின் விளைவாக உங்களுக்கு புகழ் உண்டாகும். மற்றவர்களிடம் உங்களுடைய மதிப்பு உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.

தனுசு

தனுசு

உங்கள் மீது பிறருக்கு இருந்த நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே போகும். தொழிலில் முன்னேற்றத்துக்கான வாய்ப்பகள் கூடிக்கொண்டே போகும். புதிய நண்பர்குளின் அறிமுகத்தால் நன்மைகள் உண்டாகும். பிரபலமான ஆட்களின் அநிமுகத்தினால் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி, உறவுகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பும் அதிர்ஷ்ட திசையாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் இருக்கும்.

மகரம்

மகரம்

இதுவரை மறைமுக இருந்துவந்த எதிர்ப்புகளால் உண்டாகியிருந்த இன்னல்கள் தீரும் நேரமிது. உயர் கல்வியில் இருந்துவந்த தடங்கல்கள் விலகிப்போகும். கடன்களை ஒட்டுமொத்தமாக அடைப்பதற்கான தனவரவுகள் உங்களுக்கு வந்து சேரும். பணியில் இடமாற்றங்கள் நேர வாய்ப்பிருக்கிறது. புதிய தொழில் சார்ந்த முயற்சிகளால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டமான திசையாக மேற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கிறது.

கும்பம்

கும்பம்

இதுவரையிலும் திருமண விஷயங்களில் இருந்துவந்த இழுபறியும் தடைகளும் நீங்கி, சாதகமான நிலை உண்டாகும். வீடு மற்றும் மனைகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் இதுவரை இருந்துவந்த பிரச்னைகள் தீர்ந்து போகும். நினைத்த காரியங்களை வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆதரவினால் தடையின்றி முடிந்து போகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கப் போகிறது.

மீனம்

மீனம்

வாகனங்களின் வழி மேற்கொள்ளப்படும் பயணங்களின் மூலம் நிறைய அனுகூலங்களை உங்களுக்குப் பெற்றுத் தரும். பெற்றோர்களின் உடல் நலத்தில் போதிய அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். வெளியிடங்களில் எதிர்பார்த்த கடனுதவிகள் உங்களுக்கு வந்து சேரும். வுலை செய்யும் இடத்தில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டியது மிகமிக அவசியம். அறச் செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கப்போகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, June 6, 2018, 6:00 [IST]
Desktop Bottom Promotion