Latest Updates
-
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம்
இன்னைக்கு லோ லோன்னு அலையப் போற ராசிக்காரர் யார் தெரியுமா?... நீங்களே பாருங்க...
daily horoscope 6.5.18, 6.5.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
மனதில் உண்டாகிற தேவையில்லாத எண்ணங்களினால் மனக்கவலைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களினால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதுவித திட்டங்களை முயற்சி செய்து பார்ப்பீர்கள். தொழிலில் நுட்பமான நுணுக்கங்களைக்கூட கற்றுக்கொண்டு, செயல்படத் துவங்குவீர்கள். சுயதொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய புதிய முயற்சிகளால் லாபம் உண்டாகும். நீங்கள் செய்யும் நல்ல காரியங்களின் விளைவாக உங்களுக்கு புகழ் உண்டாகும். மற்றவர்களிடம் உங்களுடைய மதிப்பு உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.

ரிஷபம்
வீடு மற்றும் மனைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களால் சுப விரயச் செலவுகள் வந்து சேரும். நீங்கள் மனதுக்குள் நினைத்து வைத்திருந்த பிரார்த்தனைகள் நிறைவேறும். எதிர்பார்த்து காத்திருந்த பணம் வந்து சேர சற்று கால தாமதமாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்டமான திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய ஒட்டுமொத்த அறிவாற்றலையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு களம் இன்று அமையும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மன தைரியத்துடன் புதிய காரியங்களில் இறங்கி, அதில் வெற்றியும் காண்பீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக கொஞ்சம் அலைச்சல்களைப் பொருத்துக் கொள்ள நேரிடும். எதிலுமே நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய திசையாக வடக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 8ம் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கடகம்
உங்கள் மீது பிறருக்கு இருந்த நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே போகும். தொழிலில் முன்னேற்றத்துக்கான வாய்ப்பகள் கூடிக்கொண்டே போகும். புதிய நண்பர்குளின் அறிமுகத்தால் நன்மைகள் உண்டாகும். பிரபலமான ஆட்களின் அநிமுகத்தினால் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி, உறவுகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பும் அதிர்ஷ்ட திசையாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் இருக்கும்.

சிம்மம்
வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். அதற்கான சிந்தனைகள் மேலோங்கும். ஓரளவு அதில் வெற்றியும் பெறுவீர்கள். உறவினர்களுக்கு இடையில் உங்கள் மீதான மதிப்புகள் உயரும். நினைத்த செயலை செய்து முடிப்பதில் கால தாமதம் ஏற்படும். பணியில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் திசையாக வடக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும் இருக்கும்.

கன்னி
இதுவரை மறைமுக இருந்துவந்த எதிர்ப்புகளால் உண்டாகியிருந்த இன்னல்கள் தீரும் நேரமிது. உயர் கல்வியில் இருந்துவந்த தடங்கல்கள் விலகிப்போகும். கடன்களை ஒட்டுமொத்தமாக அடைப்பதற்கான தனவரவுகள் உங்களுக்கு வந்து சேரும். பணியில் இடமாற்றங்கள் நேர வாய்ப்பிருக்கிறது. புதிய தொழில் சார்ந்த முயற்சிகளால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டமான திசையாக மேற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கிறது.

துலாம்
தொழிலில் உங்களுக்கு கிடைக்கும் வாடிக்கையாளர்களுடைய அறிமுகத்தினால் லாபம் அதிகரிக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். மனதளவிலும் உடலளவிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நீங்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்டமான திசையாக தெற்கும் அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 1 ம் அதிர்ஷ்டமான நிறமாக சிவப்பு நிறமும் இருந்து வருகிறது.

விருச்சிகம்
வாகனங்களின் வழி மேற்கொள்ளப்படும் பயணங்களின் மூலம் நிறைய அனுகூலங்களை உங்களுக்குப் பெற்றுத் தரும். பெற்றோர்களின் உடல் நலத்தில் போதிய அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். வெளியிடங்களில் எதிர்பார்த்த கடனுதவிகள் உங்களுக்கு வந்து சேரும். வுலை செய்யும் இடத்தில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டியது மிகமிக அவசியம். அறச் செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கப்போகிறது.

தனுசு
இதுவரையிலும் திருமண விஷயங்களில் இருந்துவந்த இழுபறியும் தடைகளும் நீங்கி, சாதகமான நிலை உண்டாகும். வீடு மற்றும் மனைகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் இதுவரை இருந்துவந்த பிரச்னைகள் தீர்ந்து போகும். நினைத்த காரியங்களை வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆதரவினால் தடையின்றி முடிந்து போகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கப் போகிறது.

மகரம்
தொழிலில் இருந்த பல தடைகளும் நீங்கும். நினைத்த காரியத்தை நினைத்ததைவிட சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது, கவனமாக இருக்க வேண்டும். மனதில் தேவையில்லாத கவலைகள் அதிகரிக்கும். சுப செய்திகள் சில வந்து சேரும். அந்த சுப செய்திகளினால் இன்பம் அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக பச்சை நிறமாகவும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக 2 ம் இருக்கும்.

கும்பம்
உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடன் பணிபுரியும் பணியாளர்களுடைய எண்ணங்களை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி, செயல்படுவீர்கள். தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்காக பிறரிடம் கேட்ட கடனுதவிகள் வந்து சேரும். நீண்ட நாள் உங்களுக்கு இருந்து வந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் பல்வேறு திசைகளில் இருந்து வந்து சேரும். மாணவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கின்றது.

மீனம்
எந்த காரியத்தை எடுத்தாலும் சற்று நிதானமாக செய்ய வேண்டியது அவசியம். வீண் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொல்லைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான செய்திகளும் பலன்களும் வந்து சேரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். சொந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் மேன்மை அடைவதற்கான சூழல்கள் வந்து சேரும். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் திசையாக மேற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட நிறமாக காவியும் இருக்கும்.



Click it and Unblock the Notifications