Latest Updates
-
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா?
இன்னைக்கு இந்த ராசிக்கு போதும் போதும்னு சொல்ற அளவுக்கு பணவரவு வந்துசேரும்...
daily horoscope 30.5.18, 30.5.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
புதிய முயற்சிகளில் இதுவரை இருந்துவந்த தடைகளும் தாமதங்களும் அகலும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். நீங்கள் வெளியிடங்களில் எதிர்பார்த்து காத்திருந்த பண வரவுகள் வந்து சேர சிறிது கால தாமதமாகலாம். உடன் பிறந்த சகோதர, சகோரர்களின் ஆதரவால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணியில் உள்ளவர்கள் மேன்மை அடைவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு நிறம்.

ரிஷபம்
கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் கால தாமதங்கள் விலகி, எதிர்பார்த்த முடிவுகள் கைகூடி வரும். குழந்தைகளின் தேவைகளைப் பூாத்தி செய்து அதன்மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். நினைத்த காரியங்களை செய்து முடித்ததால் முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய தொழில் சம்பந்தப்பட்ட முதலீடுகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 7, அதிர்ஷ்ட திசை தெற்கு, அதிர்ஷ்ட நிறம் நீல நிறம்.

மிதுனம்
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாகனப் பயணங்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கைக்கு வந்து சேரும். மூலிகை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் பிறக்கும். புதிய தொழில் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை பெரியோர்களிடம் இருந்து பணிவோடு பெற்றுக் கொள்வீர்கள். வீட்டில் உள்ளவர்களின் மூலமாக உண்டான மனக்குழப்பத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 3, அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் நிறம்.

கடகம்
வெளிநாடுகளுடன் தொடர்புடைய தொழில் முயற்சிகள் அனைத்தும் கைகூடி வரும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, வெற்றியை நோக்கிச் செல்வீர்கள். விரைவில் முடிந்து விடும் என்று நீங்கள் எதிர்பார்த்த சில காரியங்கள் பல தடைகளுக்குப் பின் நடக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 1, அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை நிறம்.

சிம்மம்
மனதில் அதிகப்படியான புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களுடைய தொழிலில் உள்ள வழக்கமான வாடிக்கையாளர்களால் உங்கள் தொழிலுக்கு நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் பல மடங்கு அதிகரிக்கும். போதும் என்று சொல்லுமளவுக்கு பணவரவு வந்துசேரும். பரம்பரை சொத்துக்கள் தொடர்புடைய விஷயங்களில் நினைத்த முடிவுகள் அத்தனையும் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 2, அதிர்ஷ்ட திசை கிழக்கு, அதிர்ஷ்ட நிறம் பழுப்பு நிறம்.

கன்னி
தொழிலை உயர்த்துவதற்கான அத்தனை முற்சிகளையும் மேற்கொள்வீர்கள். உங்கள் முயற்சிகள் அத்தனையும் கைகூடி வரும் காலமிது. எண்ணங்கள் ஒரு வரையறை பெற்று தொழில் சீராக உதவும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டே இருந்து வந்த செயல்களை துரிதமாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 4, அதிர்ஷ்ட திசை தெற்கு, அதிர்ஷ்ட நிறம் நீல நிறம்.

துலாம்
வெளியிடங்களில் உங்களுடைய செல்வாக்குகள் பல மடங்கு உயர்ந்து கொண்டே போகும். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரையில் கவலைப்படத் தேவையில்லை. மேம்பட்ட ஆரோக்கியம் தான் இருக்கும். குடும்பத்தில் உண்டாகும் சுப செய்திகளால் மகிழ்ச்சி பெருகும். நினைத்த காரியங்களை எதிர்பார்த்தபடி, செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகளை மிக லாவகமாகவும் எளிதாகவும் தீர்வு காண்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 6, அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு நிறம்.

விருச்சிகம்
தொழில் சம்பந்தமாக பல புதிய செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். விவாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவு உங்கள் பக்கம் கிடைக்கும். பணியிடங்களில் உங்கள் மீதான நம்பிக்கையும் மரியாதையும் அதிகரிக்கும். ஆடைகள், ஆபரங்கள் வாங்குவதற்கான சூழல்கள் உண்டாகும். இசை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மனம் லயிக்கும். அதனால் மனம் அமைதியடையும். புத்துணர்வாக உணர்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 4, அதிர்ஷ்ட திசை தென்கிழக்கு, அதிர்ஷ்ட நிறம் இள நீல நிறம்.

தனுசு
பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான அசாத்திய தன்னம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்து காணப்படும். மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நண்பர்களுடன் கேளிக்கை, கொண்டாட்டங்களில் ஈடுபடுவீர்கள். அதனால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 8, அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட நிறம் பச்சை நிறம்.

மகரம்
நீங்கள் செய்யும் பல்வேறு நல்ல காரியங்களால் உங்கள் செயல்பாடுகளின் மூலம் உங்கள் மீது மற்றவர்களுக்கு மதிப்பு உயரும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம். மனதில் புதுப்புது எண்ணங்களும் ஆராய்ச்சிகளும் தோன்றும். சாஸ்திரங்கள் பற்றிய அறிவைப் பெறும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களுடைய திறமைகள் மூலம் உங்களுடைய தொழிலில் பல மடங்கு லாபம் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 2, அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட நிறம் காவி நிறம்.

கும்பம்
வீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாய்வழி உறவுகளால் மிகவும் மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். மனதில் சிறு சிறு குழப்பங்கள் வந்து சேரும். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது, நிதானமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். தொழிலில் பல்வேறு முன்னேற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 6, அதிர்ஷ்ட திசை மேற்கு, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை நிறம்.

மீனம்
உற்றார் உறவினர்களிடம் இருந்து சுப காரிய செய்திகள் வந்து சேரும். கொடுக்கல், வாங்கலில் நல்ல முன்னேற்ற சூழல்கள் உண்டாகும். மறைமுகுமாக இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். தொழிலில் நினைத்ததைவிட நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான முயுற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு நிறம்.



Click it and Unblock the Notifications