Latest Updates
-
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
நிலாவில் தெரிந்த சாய்பாபா இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கிறார் தெரியுமா?
daily horoscope 27.9.18, 27.9.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
வியாபாரத்தில் கொஞ்சம் விடாப்பிடியாகச் செயல்பட்டு சில பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். வாகன வசதிகள் பெருக வாய்ப்புண்டு. குடும்ப உறுப்பினர்களால் கொஞ்சம் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும்.

ரிஷபம்
வேலை நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதன்மூலம் அனுதாபங்கள் உண்டாகும். தடைபட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தொழில் முனைவோருக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும். பெற்றோரின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய பலம், பலவீனம் இரண்டையும் உணர்ந்து கொள்ளும் நாள் இது. பயணங்களினால் உங்களுக்கு மனம் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல்கள் உருவாகும். செய்யும் தொழிலில் நீங்கள் செய்யும் புதிய மாற்றங்களால் லாபங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கடகம்
வியாபாரத்தில் உங்களுடைய வாடிக்கையாளர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். உடன் பிறந்தவர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களின் பணிகளையெல்லாம் சேர்த்து செய்ய வேண்டிய சூழல் உருவாகும். திருமண முயற்சிகள் கைகூடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

சிம்மம்
கடன்களைத் திருப்பி செலுத்துதற்கான முயுற்சிகளை மேற்கொள்வீர்கள். நினைத்த செயலை பல தடைகளையும் கடந்து வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல்கள் உண்டானாலும் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உங்களுடைய உடைமைகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் பெரியவர்களிடம் தகுந்த ஆலோசனைகளைக் கேட்கவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
பணியில் சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியில் முக்கிய பிரபலங்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுப செய்திகள் வந்து சேரும். பணியில் நிம்மதியான சூழல்கள் உருவாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

துலாம்
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். செய்கின்ற தொழிலில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் இருந்து வந்த தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கூடும். சாமர்த்தியமாக நீங்கள் பேசி நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கருநீல நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
மேலதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். எந்த முக்கிய முடிவுகளையும் பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யுங்கள். உடன் பணிபுரியும் சக பணியாளர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். பயணங்கள் மேற்கொள்ளும்போது கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

தனுசு
சுப முயுற்சிகள் கைகூடி வரும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகுள் நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்களில் உங்களுக்கு சாதகமான உதவிகள் உங்களுக்கு வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் எதிர்பாராத வருகையினால் கலகலப்பான சூழல்கள் உருவாகும். தன வரவு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்
எதிர்பார்து்த கடன் உதவிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பணிபுரியும் இடங்களில் உங்களுக்கான பொறுப்புகளும் பணியில் மாற்றமும் தான் உண்டாகும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளினால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். காது தொடர்புடைய பிரச்னைகள் வரலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்
உறவினர்குளிடம் கோபமாக நடந்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல்கள் உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் முடிவதில் கொஞ்சம் கால தாமதம் உண்டாகலாம். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாக நேரிடும். மற்றவர்குளுடைய செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக் திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்
கல்வி பயிலும் மாணவர்குளுக்கு மேன்மை உண்டாகும். தாய்வழியிலான உறவுகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்குள். பிள்ளைகளின் மூலம் அனுகூலமான சூழல்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளை நிறைவுற்றுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையுமு் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவுமு் இருக்கும்.



Click it and Unblock the Notifications
