நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள்.
மேஷம்
பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். திடீர் யோகத்தால் எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் அலைச்சல்களால் அனுகூலமான லாபம் கிடைக்கும். எண்ணிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- அதிர்ஷ்ட திசை - கிழக்கு
- அதிர்ஷ்ட எண் - 8
- அதிர்ஷ்ட நிறம் - நீலநிறம்
ரிஷபம்
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். கடனால் மன வருத்தம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் உரையாடும்போது பேச்சில் கவனம் தேவை. சுரங்கப் பணிகளில் ஈடுபடுபவர்கள் பணியில் கவனமாக செயல்படவும்.
- அதிர்ஷ்ட திசை - தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் - 9
- அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்
மிதுனம்
கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அந்நியர்குளின் மூலம் லாபம் உண்டாகும். வர்த்தகம் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும்.
- அதிர்ஷ்ட திசை - வடக்கு
- அதிர்ஷ்ட எண் - 8
- அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு
கடகம்
பூர்வீக சொத்துக்களால் பொருள் சேர்க்கை உண்டாகும். தாய்மாமன் உறவினர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். பொது காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு சாதகமான நாள்.
- அதிர்ஷ்ட திசை - கிழக்கு
- அதிர்ஷ்ட எண் - 6
- அதிர்ஷ்ட நிறம் - ஆகாய நீலம்
சிம்மம்
பரம்பரை சொத்துக்களால் சுப விரயங்கள் செய்ய வேண்டியிருக்கும். நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்ற வெளியிடங்களுக்குச் செல்வீர்கள். மனதில் புதுவித எண்ணங்கள் உண்டாகும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். அந்நியர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
- அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு
- அதிர்ஷ்ட எண் - 3
- அதிர்ஷ்ட நிறம் - இளம் பச்சை
கன்னி
பிள்ளைகளின் வழியாக சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். வாகனப் பயணங்களின் வழியாக லாபம் அடைவீர்கள். பொன், பொருள் போன்றவற்றைக் கையாளும்போது நிதானத்துடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். போட்டிகளில் வெற்றியடைவீர்கள்.
- அதிர்ஷ்ட திசை - தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் - 7
- அதிர்ஷ்ட நிறம் - சாம்பல்நிறம்
துலாம்
நிர்வாகத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் வரும். மாற்றங்கள் செய்வதால் நிறைய சாதகமான சூழல்கள் உண்டாகும். சுயதொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவும் நினைத்த பலன்களைத் தரும். தொழிலுக்கு பெற்றோர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். பிள்ளைகளால் சுப விரயச் செலவுகள் உண்டாகும்.
- அதிர்ஷ்ட திசை - வடமேற்கு
- அதிர்ஷ்ட எண் - 8
- அதிர்ஷ்ட நிறம் - கருப்பு நிறம்
விருச்சிகம்
எந்த காரியமாக இருந்தாலும் எடுத்த காரியத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
- அதிர்ஷ்ட திசை - வடகிழக்கு
- அதிர்ஷ்ட எண் - 4
- அதிர்ஷ்ட நிறம் - ஊதா நிறம்
தனுசு
சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களை மேற்கொள்வீர்கள். தாயின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
- அதிர்ஷ்ட திசை - தெற்கு
- அதிர்ஷ்ட எண் - 3
- அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை
மகரம்
கூட்டாக தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் சுப விரயங்கள் ஏற்படும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
- அதிர்ஷ்ட திசை - மேற்கு
- அதிர்ஷ்ட எண் - 6
- அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்
கும்பம்
மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும் நாள். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- அதிர்ஷ்ட திசை - வடக்கு
- அதிர்ஷ்ட எண் - 9
- அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு
மீனம்
பிள்ளைகளின் மூலம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். குல தெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பயணங்களால் லாபம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல் திட்டங்கள் தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுப விரயங்கள் உண்டாகும்.
- அதிர்ஷ்ட திசை - கிழக்கு
- அதிர்ஷ்ட எண் - 6
- அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்.
Boldsky உடனடி செய்தி அலர்ட் பெற | Subscribe to Tamil Boldsky.
Related Articles
இன்னைக்கு இந்த ராசிக்காரருக்கு தண்ணியில கண்டமாம்... ஜாக்கிரதையா இருங்க...
ஞாயிற்றுக்கிழமை ஆனாலே இந்த ராசிக்காரர்கள் இப்படித்தான்ப்பா…
இந்த மூனு ராசிக்காரர்களையும் எப்பவும் நம்பிடாதீங்க… அப்புறம் நீங்க கோவிந்தா தான்…
இந்த ராசிக்காரரின் முக்கியமான பொருள் ஒன்று இன்றைக்கு திருடுபோகும்... ஜாக்கிரதை...
மீன ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது?...
உங்க ராசிக்கு தமிழ்ப் புத்தாண்டான இன்று எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?
இன்றைக்கு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள் தான்...
இன்னைக்கு சந்தோஷத்துல திணறப்போற ராசிக்காரர்கள் யார்யார்னு தெரியுமா?
இந்த ராசிக்காரர்கள் ரொம்ப நேர்மையானவங்களாமே... அட நீங்களும் இந்த ராசிதானா?...
இந்த ராசிக்காரருக்கும் இதுவரை இந்த பிரச்னை இருந்திருக்குமே... இனி இருக்காது...
இன்னைக்கு சொந்த செலவுலயே சூன்யம் வெச்சுக்க போற ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
அட! இந்த ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்
என்னப்பா! இந்த ராசிக்காரங்க திருந்தவே மாட்டீங்களா?...