Latest Updates
-
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்..
இந்த ராசிக்காரர்கள் ரொம்ப நேர்மையானவங்களாமே... அட நீங்களும் இந்த ராசிதானா?...
daily horoscope 11.4.18, 11.4.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள்.

மேஷம்
பெரியவர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். சொத்துக்கள் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை. வழக்குகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க காலதாமதமாகும். பயணங்களின் போது கொண்டு செல்லும் பொருள்கள் மீது கவனமாக இருங்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 8
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

ரிஷபம்
பொருளாதாரம் மேன்மையடையும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தொழிலில் ஆதரவுகள் பெருகும். திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 7
அதிர்ஷ்ட நிறம் - கருநீல நிறம்

மிதுனம்
இளைய உடன்பிறப்புகளால் நன்மை உண்டாகும். வீட்டு விவாகரங்களில் இதுவரை இருந்த சிக்கல்கள் தீரும்.எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடைய ஆதரவு கிட்டும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 6
அதிர்ஷ்ட நிறம் - பச்சை

கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு பெருகும். புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். கௌரவ பதவிகள் கிடைப்பதற்கான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 9
அதிர்ஷ்ட நிறம் - பிங்க்

சிம்மம்
பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பொறுமையை கடைபிடிப்பது வீண் சண்டைகளைத் தவிர்க்கும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனம் தேவை. பக்கத்து வீட்டாரிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை - தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்

கன்னி
செயல்களில் இருநு்த தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாராத பழைய பாக்கிகள் வசூலாகும். தொழிலுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். போட்டியில் வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 8
அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

துலாம்
எண்ணிய பணியில் இழுபறியான சூழ்நிலை அமையும். மூத்த உடன்பிறப்புகளால் சுப செய்திகள் உண்டாகும். பணியில் எதிர்பாலின மக்களிடம் சற்று கவனம் தேவை. மற்றவர்களின் பணிகளைக் கூடுதலாக செய்ய நேரிடும். கடன் தொல்லைகள் குறைந்து மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 1
அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்

விருச்சிகம்
மனதில் இருந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்பத்தில் புதுிய நபர்களின் வருஐகயால் மகிழ்ச்சி உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த காரியம் நடக்கும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 4
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

தனுசு
தந்தையின் ஆதரவால் தொழிலில் மேன்மை உண்டாகும். பணியில் நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். தூரத்து உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தேவையான வசதி, வாய்ப்புகள் பெருகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 2
அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்

மகரம்
புதிய முயற்சிகளில் எதிர்பார்து்த பலன்கள் கிடைக்கும்.சக ஊழியர்களின் ஆதரவால் பணியை விரைவில் முடிப்பீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். காது சம்பந்தப்பட்ட பிரச்னை குறையும்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம் - காவி நிறம்

கும்பம்
திருமணப் பேச்சுவார்த்தைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் சற்று கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். மனைவி வழி உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - மயில் நீலம்

மீனம்
உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் குழப்பமான எண்ணங்களால் தெளிவான முடிவெடுக்க காலதாமதமாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண் - 9
அதிர்ஷ்ட நிறம் - பச்சை



Click it and Unblock the Notifications











