Latest Updates
-
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம்
இன்னைக்கு உங்களுக்கு இதுதாங்க நடக்கும்... உங்க ராசி அப்படி தான் சொல்லுது...
daily horoscope 11.3.18, 11.3.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தொழில் சம்பந்தமாக முக்கிய நபரை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் இழந்த பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் நிறைவேறும் நாளாக உங்களுக்கு இருக்கும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 1
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்

ரிஷபம்
சந்திராஷ்டமம் இருப்பதால் மூத்த உடன் பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். உத்தியுாகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் மற்றவர்களின் பணிகளையும் கூடுதலாகப் பார்க்க நேரிடும். கலைஞருக்கு சாதகமற்ற சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம் - பச்சை நிறம்

மிதுனம்
திருமண வரன்கள் கூடி வரும் நாள். சுப செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும் தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 4
அதிர்ஷ்ட நிறம் - இளம் சாம்பல் நிறம்

கடகம்
எதிர்பார்த்த தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த மனக்கசப்பு நீங்கி இன்பம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 3
அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்

சிம்மம்
உயர் பதவியில் உள்ள அதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும். செய்யும் பணிகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்ப்பதன் மூலம் நன்மைகள் உண்டாகும்
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 6
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

கன்னி
தந்தைவழி உறவினர்களால் சாதகமான சூழல் அமையும். செய்யும் பணியால் செல்வாக்கு உயரும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். மனை விவகாரங்களில் இருந்த சிக்கல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 4
அதிர்ஷ்ட நிறம் - பிங்க் நிறம்

துலாம்
தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். தாய் வழி உறவினர்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான சூழல் அமையும். வாகனப் பயணங்களால் லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம் - அடர் பச்சை

விருச்சிகம்
எடுத்துரைக்கிற பேச்சுத்திறனால் லாபம் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும். நண்பர்களுடனான வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் மேலோங்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 5
அதிர்ஷ்ட நிறம் - இளம் பச்சை

தனுசு
பணியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். பொதுத் தொண்டில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமான உறவினர்களுக்கிடையே விரிசல்கள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 1
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்

மகரம்
அரசாங்கத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். தூர தேசத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் சுமூகமாகத் தீரும். உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும். அருள்தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண் - 9
அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு

கும்பம்
அறக்காரியங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தந்தையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் குறையும். பொருள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வாகனங்களால் விரய செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 6
அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்

மீனம்
நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும். இளைய சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. விலையுயர்ந்த பொருளு்களை கையாளும்போது கவனம் வேண்டும். பணிகளில் கவனம் தேவை
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண் - 8
அதிர்ஷ்ட நிறம் - நீல நிறம்



Click it and Unblock the Notifications
