Latest Updates
-
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...!
இந்த ராசிக்காரருக்கும் இதுவரை இந்த பிரச்னை இருந்திருக்குமே... இனி இருக்காது...
daily horoscope 10.4.18, 10.4.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவினால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனை விவகாரங்களில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கிவிடும். திறமைகளை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 9
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு

ரிஷபம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். நண்பர்களின் மூலம் சுப செய்திகள் கிடைக்கும். செய்யும் பணியில் பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண்- 7
அதிர்ஷ்ட நிறம் - நீலநிறம்

மிதுனம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும். பொருளாதாரத்தில் சிக்கலான சூழல் உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது, பேச்சில் கவனம் வேண்டும். நண்பர்களின் மூலம் சில விரயச் செலவுகள் நேரிடலாம். தம்பதிகளுக்கிடையே சிறு வாக்குவாதங்கள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண்- 8
அதிர்ஷ்ட நிறம் - இளநீலம்

கடகம்
கணவன், மனைவிக்கு இடையே இருந்த அன்யோன்யம் அதிகரிக்கும். வர்த்தகப் பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பரிசுகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண்- 5
அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்

சிம்மம்
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். வாழ்க்கைப் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். மறைமுக எதிரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்க கால தாமதமாகும். பங்காளிகளால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண்- 3
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்

கன்னி
பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் குறைந்து சுமூக நிலை உண்டாகும். புத்திரர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண்- 9
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

துலாம்
எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் கை கொடுக்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண்- 8
அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

விருச்சிகம்
பொதுச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். செய்யும் தொழிலில் உங்களின் மதிப்பு உயரும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். கலைஞர்களுக்கு சாதகமான நாள்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண்- 1
அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்

தனுசு
பணி சம்பந்தமான விஷயங்களை பகிர வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் இனம் புரியாத எண்ணங்களால் சோர்வு உண்டாகும். உறவினர்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண்- 6
அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு

மகரம்
கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பழைய நண்பர்களைச் சந்திப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மனகிழ்ச்சி அடைவீர்கள். அந்நிய தேசப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - வடக்கு
அதிர்ஷ்ட எண்- 5
அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். எதிர் பாலின மக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூா சம்பந்தமான பயணங்களால் நன்மை உண்டாகும். அரசு செயல்களில் இருந்து வந்த தடைகள் அகலும். சுப செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை - மேற்கு
அதிர்ஷ்ட எண்- 3
அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை

மீனம்
மூத்த சகோதரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். திருமண வரன்கள் கைகூடும். புதிய மனை வாங்குவதற்கான சூழல் அமையும். சக ஊழியர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை - தெற்கு
அதிர்ஷ்ட எண்- 2
அதிர்ஷ்ட நிறம் - அடர் பச்சை



Click it and Unblock the Notifications











