Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
இப்டி எல்லாமா ட்ராவல் பண்ணுவாங்க!
உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கிற மிக விசித்திரமான வாகனங்கள்
ஸ்போர்ட்ஸ் பைக்,மோனோ ரயில்,என்று தொழில்நுட்பங்களுடன் போட்டி போட்டு முன்னேறி நாம் பறந்து கொண்டிருக்க இன்னமும் சில பழங்காலத்தில் பயனித்ததைப் போலவே இன்றும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
இயந்தரத்தனமாய் ட்ராபிக் சிக்னலில் கூட நிற்க பொருமையில்லாமல் சந்து பொந்துகளில் புகுந்து வரும் இன்றைய யுகத்தினருக்கு நிச்சயம் இந்த மக்கள் எல்லாம் ஓர் பாடம் என்று தான் சொல்ல வேண்டும்,அவ்வளவு நிதானமாக மக்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்,பார்க்கவே சற்று பொறாமையாக இருந்தாலும் அவர்களையும் அவர்களின் சுழலையும் ரசிக்கலாம் வாருங்கள்.

டார்ஹெட்டோ :
வெனீஸில் இருக்கிறது இந்த நகரம் . வெனீஸ் கிராண்ட் கேனல் எனப்படுகிற ஆறு 3.5 கி.மீக்கும் அதிகமாக இருக்கிறது.மொத்த தூரத்தையும் கடக்க மூன்றே மூன்று பாலங்கள் தான் இருக்கிறது.
அதில் ஒரு நாளைக்கு எவ்வளவு பேரென்று கடப்பது? அதனால் அவர்கள் பயன்படுத்தும் படகு பெயர் தான் டார்ஹெட்டோ.

டன்கஹ் :
பாகிஸ்தான் நாட்டில் அழிந்து வரும் பட்டியலில் சேர்ந்து விட்டிருக்கிறது இந்த பயணம். ஆனாலும் சில மக்களால் உயிர்ப்புடன் இருக்கிறது.
இப்போது ஆட்டோ,டாக்ஸி எங்கும் வளர்ந்து விட்டதால் எங்கள் வாகனத்தில் பயணிக்க யாரும் விரும்புவதில்லை என்று புலம்புகிறார்கள்.

குதிரை வண்டி :
முன்னால் இரண்டு குதிரைகள் இருக்கும். பின்னால் இரண்டு கட்டைகளை கொண்டு உட்காருவதற்கு வசதியாக பலகை போடப்பட்டிருக்கும் அது ஏதோ காரில் உட்காருவதைப் போல வசதியாக எல்லாம் இருக்காது.
பயணம் முழுக்க குலுங்கிக் கொண்டே செல்ல வேண்டும்.அவசரத்திற்கு செல்ல பயன்படுத்தாமல் என்ஜாய் செய்வதற்கு இதனை தராளமாக பயன்படுத்தலாம். சுற்றுலா பயணிகள் தான் இந்த குலுங்கலை அதிகம் ரசித்து அவர்களை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பேம்பூ ட்ரைன் :
கம்போடியா நாட்டில் இன்றும் மக்கள் பயன்பாட்டில் இருக்கிற ட்ரைன் இது. பேம்பூ என்றதும் ஏதோ புல்லட் ட்ரைன் அசுர வேகத்தில் சென்று வரும் என்று கற்பனை செய்து வீடாதீர்கள்.
நம்மவூர் கட்ட வண்டியைப் போல இது கம்போடியாவின் கட்டை ட்ரைன்.

எளிய மக்கள் நிறைவான பயணம் :
அவ்வூருக்கு வருகிற சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி கிராமத்து மக்களும் இதையே தான் பயன்படுத்துகிறார்கள். மூங்கில்களால் உருவாக்கப்பட்ட பெரிய மேடை போல ஒன்று இருக்கிறது அதற்கு கீழே இரண்டு இன்ஜின்களை பொருத்தி ஓட வைக்கிறார்கள்.
மக்கள் எல்லாரும் அதில் உட்கார்ந்து கொள்ள நடந்து செல்லும் வேகத்திற்கு மக்கள் உட்கார்ந்திருக்கும் மூங்கில் மேடை நகர்ந்து செல்கிறது. இப்படியே சுமார் 40 கி.மீ வரை செல்லுமாம்.

மோண்டே டோபோகன் :
மோண்டேவிலிருந்து ஃபுன்சல் பகுதிக்கு வர பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மக்கள் பயன்படுத்தியது இந்த வாகனத்தை தான். மோண்டே மலைப்பகுதி அதெல்லாம் தற்போது நகரம் ஆகிவிட்டிருந்தாலும் இந்த வாகனப்பயணம் மட்டும் இன்னமும் சுவாரஸ்யம் குறையாமல் பயன்படுத்தப்படுகிறது.

தள்ளு தள்ளு நல்லா தள்ளு :
சுற்றுலா பயணிகளின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் இது தான், இதில் பயணிக்கவென்றே மோண்டே பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருவதும் உண்டு.
கீழே கட்டைகளை கொண்டு ஒரு மேடை இருக்கும் அதற்கு மேல் சோஃபா போல உட்காருவதற்கு ஓர் இடத்தை தயாரித்திருப்பார்கள்.அந்த இடத்தில் நாம் உட்காந்து கொள்ள வேண்டும், சக்கரமோ, எஞ்சினோ,அல்லது ட்ரைவர் உட்காரும் இடமோ எதுவும் இருக்காது.
இரண்டு டிரைவர்கள்,பெரும்பாலும் வெள்ளை நிற சீருடை அணிந்திருக்கிறார்கள் அவர்கள் பின்னாலிருந்து தள்ள ஆரம்பிப்பார்கள். ஆம், நம்மூரில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டை தான் அங்கே பயணத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் 48 கி.மீ வரை பயணிக்க முடியுமாம்.... ஆனால் பெரும்பாலும் சுற்றுலா பயணிகளே பயணிப்பதால் இரண்டு நிமிடங்கள் மட்டுமே பயணிக்கிறார்களாம்.

ஜெபினி :
பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. சாலையின் ராஜா என்று இந்த வாகனத்தை அழைக்கிறார்கள்.பார்க்கவே படு பயங்கரமாகவும் அதே நேரத்தில் பிரம்மாண்டமாகவும் இருக்கிறது.
இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயத்தில் அமெரிக்கப் படைகளால் பிலிப்பைன்ஸ் நாட்டினருக்கு இந்த வாகனம் பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது அதன் பிறகு இவர்கள் சின்ன சின்ன மாற்றங்களை செய்து இன்று வரை பயன்படுத்தி வருகிறார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் கலாச்சார சின்னமாகவே அந்த வாகனம் மாறிவிட்டிருக்கிறது.

லாங்டெயில் போட் :
தாய்லாந்து நாட்டின் ஓர் ஐகான் என்றே சொல்லலாம் இதனை. பேங்காக் பகுதியில் இருந்த ஆற்றைக் கடக்க தான் இந்த வகை படகு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றைக்கு அந்த ஆறு இருந்த பகுதிகள் எல்லாம் தார்ச்சாலைகள் ஆகிவிட்டிருக்கின்றன.
ஆனால் தாய்லாந்தில் இருக்கிறமக்கள் பிற பகுதிகளில் ஆற்றைக் கடக்க இதனை பயன்படுத்துகிறார்கள். ஷேர் ஆட்டோக்களை டீல் செய்வது போலத்தான் அவ்வூர் மக்கள் இந்த படகினை டீல் செய்கிறார்கள்.

சாங்க்தேயு :
லாவோஸ் நகரில் இன்றளவும் பயன்படுத்தப்படுகிற ஓர் வண்டி இது. ட்ரக்கில் இரண்டு கட்டைகளை போட்டு வரிசையாக மக்கள் உட்கார இடத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள்.
நம்மவூர் ஷேர் ஆட்டோ போலத்தான் ஏறிக் கொண்டு பயணிக்கிறார்கள் சில நேரங்களில் பலரும் நின்று செல்லக்கூட தயங்குவதில்லையாம். இந்த வண்டிக்கு அவ்வளவு கிராக்கி!

டியூக் :
இதனை டக் என்றே அழைக்கிறார்கள், லண்டன் நகர வீதிகளில் இந்த வாகனம் செல்வதை நீங்கள் பார்க்கலாம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நீரிலும் தரையிலும் பயணிக்கிற ஓர் வாகனத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்கப்படைகளுக்கு அப்போது வடிவமைக்கப்பட்டது தான் இந்த டியூக்.
சென்ட்ரல் லண்டனில் மக்களை கவர்கிற ஓர் பொருளாக இது இருக்கிறது. இன்றும் லண்டன் நகர வீதிகளையும், ஆற்றையும் கடந்து மக்களை சுவாரஸ்யப்படுத்துகிறது இந்த டக் டூர்!



Click it and Unblock the Notifications