இந்த கொடுமைய நீங்களே பாருங்க... ஆதார் அட்டை வாங்க காத்திருக்கும் மாடுகள்...

Written By: manimegalai
Subscribe to Boldsky

நம்முடைய நாட்டில் பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த மட்டும்தான் இன்னும் ஆதார் அட்டை இணைக்கப்படவில்லை. அதைத்தவிர பால் கார்டு தொடங்கி, இறப்புச் சான்றிதழ் வரை எல்லாவற்றுக்கும் ஆதார் அட்டை இணைக்கப்பட வேண்டியது அவசியமாகிவிட்டது.

aadhar card

இதையே நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே. அடுத்ததாக, பசு மாட்டுக்கு ஆதார் கார்டு வழங்க ஆரம்பித்துவிட்டார்களே அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசுவுக்கு ஆதார் அட்டை

பசுவுக்கு ஆதார் அட்டை

மத்திய அரசு எல்லா அறிவிப்புகளையுமே நடு ராத்திரியிலோ அல்லது யாரும் எதிர்பார்க்காத போதோ வெளியிட்டே பழகிப்போய்விட்டது. அதேபோலத்தான் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது.அதாவது வீட்டில் வளர்க்கப்படும் பசு மாடுகளுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்காக 148 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக ஒரு அறிவிப்ப வெளியானது.

பால் கொடுக்கும் விலங்குகள்

பால் கொடுக்கும் விலங்குகள்

பால் கொடுக்கிற விலங்குகளான பசு மற்றும் எருமை மாடுகளுக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பசு சஞ்ஜிவினி திட்டம்

பசு சஞ்ஜிவினி திட்டம்

90 மில்லியன் பால் கொடுக்கும் கால்நடைகளுக்கு இந்த ஆதார் அட்டை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், பசு சஞ்ஜிவினி என்ற திட்டத்தின் மூலம் கால்நடைகளுக்கு சுகாதார சார்ந்த வசதிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்த ஆகும் செலவில் 60% மத்திய அரசும் 40% மாநில அரசும் ஏற்க வேண்டி வரும்.

பசுக்களின் ஆரோக்கியம் காக்க

பசுக்களின் ஆரோக்கியம் காக்க

மேலும் கால்நடைகளின் எண்ணிக்கை, அவற்றிற்கு பரவும் நோய்கள், பால் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு காரணிகளுக்காக கால்நடைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சக்ம் விளக்கம் அளித்துள்ளது.

டேட்டா பேஸ்

டேட்டா பேஸ்

பசு மற்றும் எருமை மாடுகளுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்காக, தேசிய பால் உற்பத்தி வளர்ச்சி கழகம் சார்பில் இந்தியா முழுவதும் தகவல்கள் திரட்டப்பட்டு கால்நடை வளர்ச்சி மற்றும் சுகாதார தகவல் தொழிநுட்ப தரவு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அலப்பறைகள்

ஆதார் அலப்பறைகள்

இந்த ஆதார் அட்டை அலப்பறைகள் நம் நாட்டில் இன்னும் என்னென்ன விஷயங்களில் எல்லாம் அரங்கேறப் போகிறதோ நமக்குத் தெரியவில்லை. இவற்றையெல்லாம் நாம் வெறுமனே கேட்டு சிரித்துவிட்டு, கடந்து போய்விடக்கூடாது. இதற்கான தேவை என்ன?... இந்த தரவுகள் எங்கு செல்லும்.இதனால் யாருக்கு லாபம் என்பதை நன்கு உற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync
English summary

cow sanjeevini scheme for providing aadhar for cow

Aadhaar cards for cows to cost govt Rs 148 crore. ust like the 12-digit Aadhaar number for every Indian, the Narendra Modi government is set to assign each of the country’s milk-producing cows a cheap
Story first published: Wednesday, March 14, 2018, 17:20 [IST]