For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

200வது பிறந்த நாளின் போதும் எதிர்ப்பை சந்திக்கும் கார்ல் மார்க்ஸ்!

சீனாவைச் சேர்ந்த பெண்மணி கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரை விடுதலைச் செய்யாவிட்டால் கார்ல் மார்க்ஸ் சிலையை நிறுவ அனுமதிக்கமாட்டோம் என்றிருக்கிறார்கள் மக்கள்

|

உலகம் முழுவதும் அறியப்படும் நபர்.வரலாற்றில் இன்றளவும் தனக்கென தனி அடையாளத்தை வைத்துக் கொண்டிருக்கும் நபர், பத்திரிகையாளர் பொருளாதார அறிஞர்,தத்துவவாதி இவை எல்லாவற்றையும் விட கம்யூனிசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கார்ல் மார்க்ஸின் 200 பிறந்த நாள் இன்று. பல நாடுகளுக்கும் இவரது கொள்கைகள் தான் வழிநடத்தும் அடிப்படையாய் இருக்கிறது.

கார்ல் மார்க்ஸ் என்ற பெயரைச் சொன்னாலே அரசியல், பொருளாதார,தத்துவ பக்கங்களைத் தாண்டி கார்ல் மார்க்ஸின் காதல் மற்றும் நட்பு குறித்தும் பெரிதாக பேசப்பட்டது, அவரது 200வது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி இதுவரை பேசப்படாத பெரிதும் கவனிக்கப்படாத ஓர் விஷயத்தை பற்றி இங்கே தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிமுகம் :

அறிமுகம் :

இதே நாள் 1818 ஆம் ஆண்டு ஹெர்ஷல் மார்க்ஸ்க்கும் ஹென்ரிட்டா என்பவருக்கும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு நடுவில் இருக்கக்கூடிய ட்ரைர் என்ற நகரத்தில் பிறந்தார் கார்ல் மார்க்ஸ். தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும் என்று சொன்னவர் முதலாளித்துவத்திற்கு எதிராக போராட ஆரம்பித்தார். இதனால் ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்டார். ஏங்கல்ஸுடன் இணைந்து பொதுவுடைமைச் சங்கத்தை துவக்கினார். இந்த சங்கத்தில் இருப்பவர்கள் தங்களை கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொண்டனர்.

காதல்,வறுமை,நெருக்கடி,பிரிவு,குழந்தைகள்,பசி,துயரம்,வெற்றி இப்படி பல போராட்டங்களைக் கடந்து மார்க்ஸின் வாழ்க்கை இருக்கிறது.

Image Courtesy

 சிலை :

சிலை :

இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் அவரைச் சுற்றி சர்ச்சைகள் இல்லாமல் இல்லை.

கார்ல் மார்க்ஸ் பிறந்த இடமான ஜெர்மனியின் ட்ரைர் என்ற இடத்தில் வைப்பதற்கென்று சீனாவிலிருந்து கார்ல் மார்க்ஸின் சிலை அனுபப்பட்டிருக்கிறது/ ஆனால் கார்ல் மார்க்ஸின் சிலை இங்கே வைக்கக்கூடாது என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

இன்று நேற்றல்ல கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சிலை நிறுவுவதில் இழுப்பறி நடந்து கொண்டிருக்கிறது.

Image Courtesy

காரணம் :

காரணம் :

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நபரின் சிலையை அவரது பிறந்த ஊரில் வைக்க ஏன் இவ்வளவு போராட்டம்? இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்க காரணம் என்று என்று பார்த்தால், இதற்கு முதன்மையான காரணமாக சொல்லப்படுவது இந்த சிலையை வைப்பதாக நாம் ஏற்றுக் கொண்டால் சீனாவில் நடக்கிற மனித உரிமை மீறல்களை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது என்பது தான்.

Image Courtesy

சீனாவில் மார்க்ஸ் :

சீனாவில் மார்க்ஸ் :

உலகின் மிகச்சிறந்த ஆளுமை கார்ல்மார்க்ஸ் என்று தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருக்கிறார் சீன அதிபர் ஜின்பிங். இதோ சீனாவில் ஆளுகின்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் மார்க்ஸிசம் குறித்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் ஆழமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றிருக்கிறார்.

சீனாவில் இருக்கக்கூடிய மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மார்க்ஸிச கோட்பாடு குறித்து அவசியமாக ஒரு கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.

Image Courtesy

 வீட்டுச் சிறை :

வீட்டுச் சிறை :

ட்ரைர் நகரில் கார்ல் மார்க்ஸ் பிறந்த வீடு, ஜெர்மன் தலைநகரான பெர்லினில் கார்ல் மார்க்ஸின் சிலை எல்லாம் சுற்றுலா தளமாக இருக்கிறது. 4.5 மில்லியன் மக்கள் வரையிலும் பார்த்துச் செல்கிறார்கள். இந்தநிலையில் தான் சர்ச்சை வெடித்திருக்கிறது.

ஜெர்மனைச் சேர்ந்த எழுத்தாளர்கள் சீனாவின் நோபல் பரிசு பெற்றவரான லியு க்சியபோ என்பவரது மனைவி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிறுக்கிறார். அத்தனைக்கும் அந்த பெண்மணி மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை. கணவரை இழந்த அந்த பெண்மணியை வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கும் வரை சிலையை ட்ரைர் நகரில் வைக்க அனுமதிக்கக்கூடாது என்றிருக்கிறார்கள்.

Image Courtesy

சீன தம்பதி :

சீன தம்பதி :

Liu Xiaobo என்பவர் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் இவர் தன் வாழ்நாளின் பாதியை சிறையிலேயே தான் கழித்தார். காரணம் சீனாவில் நடக்கிற அரசாங்கத்தை, ஆட்சியை மாற்ற வேண்டும் என்று அவர் கூறியது தான். புற்று நோயினால் அவர் இறந்துவிட்ட நிலையில் அவருடைய மனைவி தற்போது கடந்த எட்டு வருடங்களாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்.

Image Courtesy

போராட்டம் :

போராட்டம் :

இருவருக்குமிடையில் இருந்த காதல் திருமண பந்தத்தில் இணையவும் அரசாங்கம் எதிர்த்தது. பல இன்னல்களைக் கடந்து திருமணத்திற்கு அனுமதிப் பெற்றாலும் அங்கேயும் சிக்கல் வந்தது. சீனாவின் அதிகாரப்பூர்வ திருமணச் சான்றிதலில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லாமல் முழுமை பெறாது. அதாவது புகைப்படம் சரியாக இல்லாததது செல்லாது. புகைப்படக்காரர் கடைசி நேரத்தில் கேமரா வேலை செய்யவில்லை என்று தலையைச் சொறிந்தார்.

Image Courtesy

திருமண வாழ்க்கை :

திருமண வாழ்க்கை :

இது திட்டமிடப்பட்டது என்பதை அறிந்த லியு உடனடியாக மாற்று ஏற்பாட்டினை செய்து மனைவியுடன் புகைப்படம் எடுத்து தனது திருமணத்தை பதிவு செய்தார். இவர்கள் திருமணம் செய்து கொண்டது 1996 ஆம் ஆண்டு.

தங்களது திருமணத்திற்கு கிடைத்த அனுமதி இவர்களது போராட்டத்திற்கு கிடைத்த சிறு வெற்றியாகவே பார்த்தார்கள்.

Image Courtesy

கணவனைப் பார்க்க :

கணவனைப் பார்க்க :

சட்டப்படி இருவரும் கணவன் மனைவியாக பதிவு செய்து கொண்டதினால் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் ஓர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கணவரை நேரடியாக சென்று சந்திக்கும் உரிமையைப் பெற்றார் லியு க்சியா.

பீஜிங்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் 1,600 கி.மீ தூரம் வரை பயணித்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கணவரை சந்தித்து வருவார். 2010 ஆம் ஆண்டு நீண்ட காலம் வன்முறை அல்லாது மனித உரிமைக்காக போராடியமைக்காக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் நார்வேயில் நடைப்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் சென்று பங்கேற்க லியு அனுமதிக்கப்படவில்லை.

Image Courtesy

அரசுக்கு எதிராக :

அரசுக்கு எதிராக :

லியு எக்ஸபோ மிகச்சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த கல்வியாளர் மற்றும் விரிவுரையாளரும் கூட, இவருக்கு வெளிநாடுகளில் சென்று படிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தது. 1989 ஆம் ஆண்டு நியூயார்க்கில் படித்துக் கொண்டிருந்த போது சீனாவின் தியான்மென் சதுக்கத்தில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது. இதைக் கேள்விப்பட்டு சீனாவிற்கு திரும்பினார் லியு. ஏற்கனவே அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனம் கொண்டிருந்த லியு போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்தார்.

அதோடு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களையும் பாதுகாக்கும் வகையில் சீனப்படையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் போராட்டத்தின் போது ஏராளமான மக்கள் கொல்லப்பட்டார்கள். இன்றளவும் அந்த நிகழ்வில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால் எல்லாருமே அன்று இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை மட்டும் ஒப்புக் கொள்கிறார்கள்.

Image Courtesy

காவல் :

காவல் :

காலப்போக்கில் இந்த படுகொலை சம்பவம் மறக்கப்பட்டது. அதன் பிறகு போராட்டக்காரர்களை ஆதரித்த குற்றத்திற்காக லியு காவலில் வைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 20 மாதங்கள் சிறைத்தண்டனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். அப்போது அனைத்தையுமே இழந்திருந்தார் லியு. தன்னுடைய வேலை,தங்கியிருந்த வீடு என எல்லாமே பறிபோயிருந்தது.

வாழ்வில் எல்லாம் முடிந்தது என்ற தருணத்தில் தான் தன் காதலியும் கவிஞருமான லியு எக்ஸியா என்ற பெண்ணை சந்திக்கிறார்.

Image Courtesy

பாதுகாப்பு :

பாதுகாப்பு :

எங்களை கண்காணிக்கிறோம், என்ற பெயரில் நிறைய கொடுமைகளை செய்தார்கள். எங்களது சுதந்திரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டுவிட்டது.

மனைவியின் பிறந்த நாளுக்கு நணபனிடம் சொல்லி அவளுக்குப் பிடித்த வைன் வரவழைத்தேன் பாட்டிலை உள்ளே அனுமதிக்க முடியாது என்றுவிட்டார்கள். பின்னர் கேக் ஆர்டர் செய்தேன் அதையும் எங்களிடம் கொடுக்க முடியாது என்றார்கள் காவலர்கள் கோபப்பட்டு சண்டையிட்டேன்...

இன்றைக்கு எல்லா இடத்திலும் குண்டு வெடிப்பு சாதரணமாகிவிட்டது என்று சொல்லி அப்படியே திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

2009 ஆம் ஆண்டு லியுவிற்கு கல்லீரல் புற்றுநோய் தாக்கியது. பல எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்தித்து தான் ஒவ்வொரு முறையும் சிகிச்சை பெற வேண்டியிருந்தது.

Image Courtesy

கணவன் இறந்த பிறகு :

கணவன் இறந்த பிறகு :

கணவர் இறந்த மறுநாளிலிருந்து லியு எக்ஸியா தனிக்காவலில் வைக்கப்பட்டார். யாருடனும் பேச அனுமதிக்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் லியு எக்ஸியா உயிருடன் தான் இருக்கிறாரா என்று பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.

அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதை அவரை காவலில் வைத்திருக்கும் சீன அரசாங்கம் உடனடியாக நிரூபிக்க வேண்டும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருடன் பேச அனுமதிக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் கரம் கோர்த்தனர். மனித உரிமை ஆர்வலர்களும் இதில் இணைந்து கொண்டனர்.

Image Courtesy

சாகத் தயார் :

சாகத் தயார் :

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசிய லியு எக்ஸியா, கடந்த 2010 ஆம் ஆண்டு கணவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகிலிருந்து இருவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டோம். கடந்த 2017 ஆம் ஆண்டு கல்லீரல் புற்றுநோய் காரணமாக கணவர் லியு இறந்துவிட்டார். இப்போது நான் தீவிர மன அழுதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களைக்கூட சந்திக்க விடாமல் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தான் எக்ஸியா தன்னுடைய நண்பரும் பத்திரிகையாளருமான லியா என்பவருடன் போனில் பேசும் ஆடியோ சீன சமூக வலைதளங்களில் வெளியானது.

Image Courtesy

விடுதலை செய் :

விடுதலை செய் :

அதில் முதல் சில நிமிடங்கள் எக்ஸியாவின் அழுகை சத்தம் மட்டுமே கேட்கிறது. அதன் பிறகு, எனக்கு யாரைப் பற்றியும் பயமில்லை. குறிப்பாக சாவைப் பற்றி எனக்கு பயமில்லை. என் வீட்டிலேயே நான் சாக வேண்டும் என்று நினைக்கிறேன். என் கணவன் லியு என்னை தனியாக தவிக்கவிட்டுச் சென்று விட்டான். அதோடு இந்த உலகத்தில் எனக்காக இங்கே யாருமே இல்லை நான் சாகத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லி மீண்டும் அழுகிறார்.

இது சமூகவலைதளத்தில் வெளியாகி பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து எந்தக் குற்றமும் செய்யாத எக்ஸியாவை வீட்டுக்காவலிலிருந்து விலக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது. சீனாவில் இருக்கிற ஜெர்மன் தூதர், எக்ஸியாவை ஜெர்மனிக்கு வரவேற்கிறோம் என்றார். இருந்தும் கூட எக்ஸியா சீனப் பிரஜை அவர் எங்கு தங்க வேண்டும் என்பதை அரசாங்க அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள் என்று சொல்லப்பட்டது.

Image Courtesy

கார்ல்மார்க்ஸும் எக்ஸியாவும் :

கார்ல்மார்க்ஸும் எக்ஸியாவும் :

லியு சீனாவின் நெல்சன் மண்டேலா என்று புகழப்பட்டவர். எக்ஸியாவை வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கும் வரை கார்ல் மார்க்ஸின் சிலையை அவரது பிறந்த ஊரான ஜெர்மனியில் இருக்கும் ட்ரைனில் வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி ஜெர்மனில் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலாளித்துவத்திற்கு எதிராக நிற்கிறோம் என்று சொல்லிக் கொள்ளும் கம்யூனிச நாட்டிலிருந்து லியு மற்றும் எக்ஸியா சீனா மட்டுமல்ல பல நாடுகளுக்கும் அறிமுகம். அதனால் தான் வீட்டுக்காவலில் இருக்கும் எக்ஸியாவை விடுவிக்க கோரி ஜெர்மனியில் மக்கள் போராடுகிறார்கள். அதோடு கம்யூனிசத்தின் தந்தை என்று சொல்லப்படக்கூடிய காரல் மார்க்ஸின் சிலையைக் கூட நிறுவ அனுமதிக்கமாட்டோம் என்கிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Chinese Women Who Kept In House Arrest

Chinese Women Who Kept In House Arrest
Story first published: Saturday, May 5, 2018, 11:08 [IST]
Desktop Bottom Promotion