பேயாக நடித்துக் கொண்டிருந்த நடிகைக்கு பேய் பிடித்ததால், பேய்ப்பட ஷூட்டிங்கில் பரப்பரப்பு - வீடியோ!

By: Staff
Subscribe to Boldsky

உங்களுக்கு பேய், பிசாசு போன்றவற்றுள் நம்பிக்கை இருக்கிறதா? எப்போதாவது, எங்காவது நீங்கள் அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்ததுண்டா? அல்லது நீங்கள் மட்டுமே தனியாக இருக்கும் அறையில் வேறு யாரோ ஒரு நபர் இருப்பது போன்ற பிரம்மை ஏற்பட்டதுண்டா? சில சமயம் பேய் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது இதுபோன்ற விஷயங்களை நாம் அனுபவித்திருப்போம்.

Cambodian Actress Who Got Possessed By Ghost During Shooting

பேய் படங்கள் எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட்டில் வேலை செய்த சிலரே, நாங்கள் வேலை செய்த இடத்தில் சில அமானுஷ்யமான விஷயங்களை உணர்ந்தோம் என்று கூறியதுண்டு. மக்கள் அவர்கள் படத்திற்கு பில்டப் கொடுக்கிறார்கள் என்று கருதுவார்கள். ஆனால், அவர்கள் நிஜமாகவே அப்படியொரு உணர்வை கடந்து வந்திருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெகடிவ் எனர்ஜி!

நெகடிவ் எனர்ஜி!

நாம் என்ன வேலை செய்கிறோமோ, அந்த வேலை எத்தகைய உணர்வை / சக்தியை வெளிப்படுத்துகிறதோ, அதன் சரிசமமான தாக்கம் நம்முள் ஏற்படும். நிறைய பக்தி உடையவர்கள், கோவிலுக்கு சென்று வருபவர்கள் சாமி வந்து ஆடுவதை நாம் கண்டிருப்போம் அல்லவா... அதே போல தான் பேய் பிசாசு என்று கூறி கண்ட இடங்களுக்கு சுற்றி வந்தால்... அதன் தாக்கமும் நம்மிடையே இருக்கும்.

சமீபத்திய நிகழ்வு!

சமீபத்திய நிகழ்வு!

ஓரிரு வாரங்களுக்கு முப்பு இந்த நிகழ்வு நடந்துள்ளது...

கம்போடியாவை சேர்ந்த நடிகை ஒரு பேய் படத்தில் நடித்து வந்தார். ஷூட்டிங் நடந்துக் கொண்டிருந்த போது திடீரென நிஜமாகவே அவருக்கு பேய் பிடித்துவிட்டது. உடன் இருந்த துணை நடிகையை அவர் நிஜமாகவே தாக்கிவிட்டார். இதனால், அவருக்கு கழுத்து பகுதியில் அவருக்கு பலமான அடி விழுந்தது.

Image Source:THECOVERAGE.MY

வீடியோ பதிவு!

ஷூட்டிங் போது கம்போடியாவை சேர்ந்த நடிகை பேய் போன்ற மேக்கப்புடன் தனியாக ஒரு மூளையில் அமர்ந்துக் கொண்டு அமானுஷ்ய செய்கைகள் செய்துக் கொண்டிருப்பதை இந்த வீடியோ பதிவில் நீங்கள் காணலாம்...

ரன்வீர் சிங்!

ரன்வீர் சிங்!

இதை சிலர் மறுக்கலாம்... படத்திற்கு பில்டப் கொடுக்கிறார்கள் என்று கருதலாம். ஆனால், நம்ம ஊரிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அதுகுறித்து அந்த படத்தின் நடிகரும் கூறியிருந்தார்.

சமீபத்தில் பல் சர்ச்சைகளை கடந்து வெளியான பத்மாவத் என்ற திரைப்படத்தில் வில்லன் வேடம் ஏற்ற நடிகர் ரன்வீர் சிங் தான் அவர்.

இருபது நாட்கள்!

இருபது நாட்கள்!

கில்ஜி கதாபாத்திரம் ஏற்று நடிக்க இவர் 20 நாட்களுக்கு மேல் தன்னை தானே ஒரு தனியறையில் அடைத்துக் கொண்டார். மேலும், நடித்துக் கொண்டிருக்கும் போது நிஜமாகவே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சிலரை இவர் தாக்கியதாக தகவல்கள் வெளியாகின. இது போன்ற சம்பவங்கள் நிஜமாகவே நடக்க வாய்ப்புகள் உள்ளன. இது ஒரு மாதிரியான உளவியல் தாக்கம் என்று அறியப்படுகிறது.

விரதம்!

விரதம்!

சிலர் ஏதேனம் சாமிக்காக நிறைய நாள் விரதம் இருந்து வேண்டி வருவார்கள். அந்த விரதம் நிறைவேறும் போது அல்லது விரதத்தின் நாட்களுக்கு இடையே பூஜைகளில் கலந்துக் கொள்ளும் போது திடீரென அவர்களுக்கு சாமி வந்துவிடும். முக்கியமாக பூ மிதித்தல், பூச்சட்டி ஏந்தி வரும் போதெல்லாம் நாம் இதை கவனிக்க முடியும்.

ஒரு சூழலோடு நாம் மிக அதிகமாக நம்மளை உட்படுத்திக் கொள்ளும் போது இத்தகைய உளவியல் சார்ந்த தாக்கங்கள் ஏற்படலாம் என்று அறியப்படுகிறது.

உதாரணம்!

உதாரணம்!

எளிதாக புரியும்படி கூற வேண்டும் என்றால்... நண்பர்கள் சிலர் நீண்ட நாள் கழித்து கூடும் போது பார்ட்டியில் ஈடுபடுகிறார்கள். அதில் சோஷியலாக குடிப்பவர்கள் சிலர் இருப்பார்கள், குடிக்க மறுக்கும் சிலர் இருப்பார்கள், வேண்டி, விரும்பி குடிக்கும் சிலர் இருப்பார்கள். ஆனால், குடிக்க விருப்பம் இருந்தும் அதிகம் குடிக்காமல், சரியான சந்தர்ப்பம் அமையும் போது நிர்பந்தம் செய்தால் மட்டும் குடிப்பவர்களும் இருப்பார்கள். இந்த பல வகையினர்களில் ஒருவேளை அந்த கடைசி வகை ஆளுக்கு குடி பெரிய ஆவல் இருந்திருக்கும். ஆனால், நிறைய குடித்திருக்க மாட்டார்.

உளவியல் தாக்கம்!

உளவியல் தாக்கம்!

ஆனால், பார்ட்டி துவங்கிய சில நேரத்தில் அதிகமாக போதை ஏறியது போல ஆட்டம் போட்டு, ஆர்பாட்டம் செய்து, கத்தி கலாட்டா பண்ணி அமர்க்களம் செய்வார். நிஜமாகவே அவருக்கு நிறைய போதை ஆகியிருக்காது. ஆனால், தான் குடித்துவிட்டேன், அளவுக்கு மீறி தனக்கு போதை ஏறிவிட்டது என்று அவரே நினைத்துக் கொள்வார்.

இது எல்லா சூழலுக்கும் பொருந்தும். இவை எல்லாம் அவரவரை சார்ந்து மனதில் ஏற்படும் ஒரு உளவியல் தாக்கங்கள்.

நடிப்பாகவும் இருக்கலாம்!

நடிப்பாகவும் இருக்கலாம்!

ஒருபுறம் உளவியல் சார்ந்த தாக்கமாக இருக்க வாய்ப்புள்ளது போலவே, முற்றிலும் ஒருவர் நடிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஆம்! அவர் ஒரு நடிகை என்பதால்... ஒருவேளை கலாட்டா செய்து பார்க்கலாம் என்று எண்ணியிருந்தால்.. அவர் நிஜமாகவே நடித்திருக்கலாம். இது அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம்... தெரியாமல் இருக்கலாம். எனவே, நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போலாம், இந்த சம்பவத்திற்கும் இரண்டு பக்கம் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cambodian Actress Who Got Possessed By Ghost During Shooting

Cambodian Actress Who Got Possessed By Ghost During Shooting,
Subscribe Newsletter