காதலித்து ஏமாற்றியதற்காக ஊரில் என்ன செய்கிறார்கள் பாருங்க!

Posted By:
Subscribe to Boldsky

திருவிழாக்கள் தான் நம்முடைய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிற ஓர் விஷயமாக இருக்கிறது. தாங்கள் வணங்கக்கூடிய கடவுளை மகிழ்விப்பது, வரலாற்றில் நிகழ்ந்த நாளை நினைவு கூர்வது, உறவுகள் எல்லாம் ஒன்றிணைவது, சாப்பிடுவது,பூஜைகள்,கொண்டாட்டங்கள் என்று தான் பெரும்பாலான திருவிழாக்கள் இருக்கும்.

இங்கே உங்களுக்காக சில விசித்திரமான திருவிழாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது அவை நடக்கும் இடம்,நடக்கும் முறை மட்டுமல்ல அந்த திருவிழா நடப்பதற்கான காரணங்களும் விசித்திரமாகவே இருக்கிறது. அவை குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாட்டர் கன் :

வாட்டர் கன் :

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தாய்லாந்தில் இந்த திருவிழா நடக்கிறது. இது ஏதோ குறிப்பிட்ட பகுதி அல்லது ஒரு கிராமம்,நகரத்தில் இந்த விழா கொண்டாடப்படுவதில்லை தாய்லாந்து முழுக்கவே இந்த விழாவினை கொண்டாடுகிறார்கள்.

வாட்டர் கன் கொண்டு தெருவில் செல்வோர் வருவோரை எல்லாம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறார்கள் சில நேரங்களில் பக்கெட்களில் கூட ஊற்றுவதுண்டு. சிலர் யானையைக் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடிக்க வைப்பார்களாம்!

Image Courtesy

தக்காளி :

தக்காளி :

ஒரு காலத்தில் காய்கறிகடையில் தக்காளி வாங்குவதில் இரண்டு இளைஞர்களுக்கு மத்தியில் சண்டை நடந்திருக்கிறது. அதில் ஒருவரையொருவர் தக்காளியை வீசி தாக்கிக் கொண்டார்கள். காலப்போக்கில் அது அப்படியே மிகப்பெரிய திருவிழாவாக உருவெடுத்துவிட்டது. இது ஸ்பெயினில் இருக்கக்கூடிய பன்யோல் என்ற இடத்தில் நிகழ்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா நடந்த முடிந்த பிறகு நகரின் எல்லா பகுதியும் தக்காளிதான் படிந்திருக்குமாம். ஃபையர் இன்ஜின் கொண்டு வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து நகரை சுத்தப்படுத்துவார்களாம்.

Image Courtesy

 சகதி :

சகதி :

அங்கே தக்காளியென்றால் இங்கே சகதியை அள்ளி பூசி விளையாடும் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழா தென் கொரியாவில் ஒவ்வொரு கோடை காலத்திலும் நடக்கிறது. இதற்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் இருக்கிறார்களாம். ஆனால் இந்த திருவிழா ஓர் விளம்பர யுக்திக்காக ஆரம்பிக்கப்பட்டது நாளடைவில் இது மிகப்பெரிய கொண்டாட்டமாகிவிட்டது என்கிறார்கள்.

இந்த சகதியில் ஏரளமான மினரல்ஸ் இருக்கிறதாம். சில அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தங்கள் பொருளில் இந்த மினரல்ஸ் எல்லாம் இருக்கிறது என்பதை விளம்பரப்படுத்த இதனை துவக்கியிருக்கிறார்கள்.

Image Courtesy

குரங்கு :

குரங்கு :

இதுவும் தாய்லாந்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கக்கூடிய ஒர் திருவிழா, இந்த திருவிழா நவம்பர் மாதத்தில் நடக்கிறது. அங்கிருக்கும் மக்கள் குரங்குகளுக்காக மிகப்பெரிய விருந்து படைக்கிறார்கள் குரங்குகளுக்கு பிடித்தமான அத்தனை உணவுகளும் இதில் இடம்பிடிக்கிறது. இந்த திருவிழா துவங்கிய கதை யாருக்கும் தெரியவில்லை முதலில் சிறிய அளவில் செய்திருக்கிறார்கள் அதன் பிறகு மிகப்பெரிய அளவில் செய்யத் துவங்கி விட்டார்கள். இது சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக செய்யப்படுகிறது என்றும் சொல்லப்படுவதுண்டு.

Image Courtesy

முள்ளங்கி :

முள்ளங்கி :

இந்த திருவிழா மெக்சிகோவில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் இந்த திருவிழா நடக்கிறது. சாலையோரத்தில் வியாபாரிகள் தங்கள் நிலங்களில் விளைந்த முள்ளங்கியை விற்கிறார்கள். அதோடு முள்ளங்கியை பல உருவங்களாக செதுக்கி அதனையும் காட்சிக்கு வைக்கிறார்கள்.

Image Courtesy

ஓடு ஓடு... :

ஓடு ஓடு... :

ஸ்பெயினில் உள்ள பேம்ப்லோனா என்னும் இடத்தில் நடைப்பெறுகிற ஓர் திருவிழா தான் இது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் இந்த திருவிழா நடக்கிறது. இதில் காளைகள் உங்களை துறத்தி வரும் நீங்கள் ஓடி தப்பித்துக் கொள்ள வேண்டும்.

இதில் பங்கேற்க இரண்டே இரண்டு விதிகள் தான். உங்களுக்கு பதினெட்டு வயது நிறைவாகியிருக்க வேண்டும். போட்டியின் போது போதைப் பொருள் பயன்படுத்தியிருக்க கூடாது.

Image Courtesy

எறும்பு :

எறும்பு :

ஒவ்வொரு அண்டும் லாசா என்னும் பகுதியில் இந்த திருவிழா நடக்கிறது. இதில் ஒருவருக்கு ஒருவர் சேறு நிரம்பிய குட்டி குட்டி பைகளை வீசிக் கொள்வார்கள். இதில் அவரவர் தங்களுக்கான சேற்றுப் பைகளை தயார் செய்து கொள்ள வேண்டும். இதில் பங்கேற்கிற சிலர் இதற்காகவேன்று மலைக்குச் சென்று எறும்புகளை பிடித்து சேற்றுப்பையில் சேர்த்து வீசுவார்களாம்.

அந்த எறும்புகள் மிகவும் வீரியமானவை அதே நேரத்தில் அந்த எறும்பு கடித்தால் நெருப்பால் சுட்டது போல வலிக்குமாம்.

Image Courtesy

வாத்து :

வாத்து :

ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் இருக்கக்கூடிய கிராமங்களில் இந்த திருவிழா நடக்கிறது. பல காலங்களாக நடக்கிறது என்றாலும் இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ஆற்றில் இறங்கி வாத்தை பிடிக்க வேண்டும் அதே நேரத்தில் கையிறு அல்லது ஓர் வயரைக் கொண்டு வாத்தின் தலையை பிய்க்க வேண்டுமாம்.இது மிகவும் கொடூரமாக இருக்கிறது என்று சொல்லி பலரும் எதிர்த்திருக்கிறார்கள். இன்றைக்கும் இந்த திருவிழா நடக்கிறது. ஆனால் இந்த திருவிழாவில் இறந்த வாத்துகளைத் தான் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

Image Courtesy

தார் டின் :

தார் டின் :

இங்கிலாந்தில் இருக்ககூடிய டிவோன் என்னும் பகுதியில் இந்த திருவிழா நடக்கிறது. நவம்பர் மாதத்தில் அதிக குளிர் வீசும் காலத்தில் இந்த விழா கொண்டாட்டப்படுகிறது. விழாவில் ஒவ்வொருரும் தங்கள் முதுகில் மிகப்பெரிய தார் டின்னை பற்ற வைத்து நெருப்பு எரிய நீண்ட தூரம் ஓட வேண்டும்.

இது சூரியனைப் போல வெளிச்சம் தரப்படுவதற்காக ஆரம்பிக்கப்பட்டு பின் அதுவே ஓர் திருவிழாவாக கொண்டாட்டத்திற்கு வந்து விட்டது.

Image Courtesy

நெருப்பு விளையாட்டு :

நெருப்பு விளையாட்டு :

இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் எரிமலை வெடித்து சான் சல்வேடர் என்னும் பகுதியில் இருக்கும் நெஜப்பா என்ற சிறிய நகரம் முழுவதும் அழிந்துவிட்டதாம். அங்கு வாழ்ந்த மக்கள் பலரும் உயிரிந்துவிட்டார்கள் சிலர் பல ஊர்களுக்கு தப்பித்துச் சென்றிருக்கிறாரக்ள் அப்படி தப்பித்துச் சென்றவர்கள் தங்கள் ஊரையே அழித்த அந்த சம்பவத்தை நினைவுகூறும் விதமாக இதை கொண்டாட ஆரம்பித்து இப்போது மிகப்பெரிய திருவிழா ஆகிவிட்டிருக்கிறது.

Image Courtesy

ஆடு பாவம் :

ஆடு பாவம் :

ஸ்பெய்னில் இருக்கும் சிறிய கிராமமான மங்கனீஸ் டீலா போல்வொர்சா என்னும் இடத்தில் இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடக்கிறது. சில இளைஞர்கள் ஓர் ஆட்டை பிடித்து அந்தப்பகுதியில் இருக்ககூடிய சர்ச்சின் மேல் தளத்திற்கு செல்கிறார்கள் அங்கிருந்து ஆட்டை கீழே போடுவார்களாம். கீழே விழும் ஆட்டை அங்கே நிற்கக்கூடிய கிராம மக்கள் பிடித்துவிடுவார்களாம்.

Image Courtesy

 விதைப்பை :

விதைப்பை :

இது பல ஊர்களில் இருக்கும் கிராமங்களில் இந்த திருவிழா நடக்கிறது. அதாவது விலங்குகளின் விதைப்பையை எடுத்து ருசியாக சமைக்கும் போட்டி. இது மிக பழங்காலத்திலிருந்து கடைபிடித்து வருவதாக சொல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இந்த திருவிழா நடக்கிறது. டெஸ்டிக்கல் சேம்பியன்ஷிப் என்ற பட்டமும் இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு வழங்கப்படுகிறது.

Image Courtesy

ஆண்களே! :

ஆண்களே! :

சற்று விசித்திரமான திருவிழா தான் இது! இத்தாலியை பொறுத்தவரையில் மாட்டின் கொம்புகள் ஏமாற்றத்திற்கான ஓர் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ரோமன் அரசாட்சி நடந்து கொண்டிருந்த போது போரில் பங்கேற்று வெற்றியுடன் திரும்பிய வீரர்களுக்கு அரசரி மாட்டின் கொம்புகளை பரிசாக அளித்தாராம். அதிலேயே வீரர்கள் பெரும் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.

வீட்டிற்குச் சென்ற போது, போர் பல நாட்கள் நடந்ததால் போர் முடிந்து தன் கணவர் வருவாரோ மாட்டாரோ என்ற எண்ணத்தில் அவர்களின் மனைவிமார்கள் வேறு ஆடவரை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்களாம்.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் தங்களை விட்டு பிரிந்து சென்ற இணையை நினைவு கூர்ந்து கொம்பை எடுத்து ஊர்வலமாக செல்கிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Bizarre Festivals Around the world

Bizarre Festivals Around the world
Story first published: Wednesday, April 11, 2018, 14:00 [IST]