திருமணம் தள்ளிப்போகுதா?... விரைவில் திருமணம் ஆக செய்ய வேண்டிய பரிகாரங்கள்

Written By: manimegalai
Subscribe to Boldsky

ஹிந்துக்கள் குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் திருமணம் கைகூடுவில்லை என்றால் ஏதோ தோஷம் இருப்பதாகக் கருதுகிறார்கள். ஜாதகத்தில் ஏதோ குறைப்பதாகவும் அதை நிவர்த்தி செய்தால் சில கோவில்களுக்கு செல்வது, சில பரிகாரங்கள் செய்வது திருமணத்தடையை நீக்கும் என்று நம்புகிறார்கள்.

அப்படி என்ன மாதிரியான கோவிலுக்குப் போகலாம்?... என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்தால் தடை நீங்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமணத்தடை

திருமணத்தடை

சிலருக்கு மிகக் குறைந்த வயதிலேயே திருமணம் கைகூடி வரும். அப்போது வேண்டாமென ஒதுக்கிவிட்டு, பின் வயதானபின் மிகவும் கவலைப்படுவார்கள். அதேபோல சிலர் என்ன தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக திருமுண முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் ஏதாவது ஒரு தடை வந்துகொண்டே இருக்கும்.இதற்கு என்னதான் தீர்வு?...

தோஷங்கள்

தோஷங்கள்

தோஷங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். நாக தோஷம், களஸ்திர தோஷம், செவ்வாய் தோஷம், ராகு தோஷம் இப்படி பல தோஷங்கள் உண்டு. அதில் உங்களுடைய ஜாதகத்தில் குறிப்பிட்ட சில தோஷங்களுக்கு சில கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்தால் சரியாகும் என்று சொல்வார்கள். அதில் திருமணத் தடைகள் வரும்போது என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

பரிகாரங்கள்

பரிகாரங்கள்

7-ல் ராகு இருப்பது கடுமையான திருமண தோஷமாகும். எவ்வளவு முயன்றும் திருமணம் கூடுவதில்லை. இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வரவும். இவ்விரதம் ஒன்பது வாரங்கள் செய்து வர திருமணம் தோஷம் விலகும். திருமணம் கூடி வரும்.

ஏழைக்கு எண்ணெய் ஸ்நானம்

ஏழைக்கு எண்ணெய் ஸ்நானம்

வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு ஏழைப்பெண்ணுக்கு செவ்வாய், வெள்ளி, சனி மூன்றில் ஏதாவது ஒரு நாளில் நல்லெண்ணெய் அல்லது 5 எண்ணெய் கலந்து எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, வாழை இலையில் விருந்து உணவு படைத்து, உங்களுடைய சக்திக்கு ஏற்ப புத்தாடை வாங்கி தானமாகக் கொடுத்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.

கருமாரி அம்மன் வழியாடு

கருமாரி அம்மன் வழியாடு

சென்னை - திருவேற்காட்டில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. அந்த திருத்தலம் பல்வேறு புராணச்சிறப்புகள் மிக்கது. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது.

குரு பகவான்

குரு பகவான்

கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது ஆலங்குடி என்னும் சிறிய ஊர். அந்த ஊரில் ஒரு புகழ்பெற்ற குரு பகவான் கோவில் இருக்கிறது. அந்த கோவிலுக்குச் சென்று அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமண யோகம் உண்டாகும்.

அடிப்பிரதட்சணம்

அடிப்பிரதட்சணம்

காஞ்சீபுரத்தில் கச்சபேஸ்வரர் ஆலயம் உள்ளது. அந்த ஊரின் சிறப்பே அங்குள்ள நாகமூர்த்திகள் தான். திருமணம் தடைபட்டுக் கொண்டே இருப்பவர்கள் அந்த கோவிலில் உள்ள உள்ள நாகமூர்த்திகளை வணங்கி, வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதஷணம் செய்யுங்கள். அதோடு ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு வாங்கி, தானம் செய்யுங்கள். சகல திருமண தோஷமும் தீர்ந்து விரைவில் திருமணம் கைகூடும்.

கல்யாண சுந்தரேஸ்வரர் வழிபாடு

கல்யாண சுந்தரேஸ்வரர் வழிபாடு

பொதுவாக, தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களால் தான் திருமணம் தடைப்படுகிறது என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. மாயவரம்-குத்தாலம் நெடுஞ்சாலையில் உள்ள ஊர் திருமணஞ்சேரி. இது திருமண தோஷங்கள் நீக்குவதற்கெனவே சிறப்பு பெற்ற ஊர். இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் உடனே திருமணம் ஆகிவிடும்.

திருமணம் செவ்வாய் தோஷத்தால் தடைபடுமாயின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

கல்யாண நவகிரகங்கள்

கல்யாண நவகிரகங்கள்

துணைவியருடன் இருக்கும் நவக்கிரகங்களை வழிபட உடனே திருமணம் நடைபெறும். இத்தகைய நவக்கிரகங்கள் கல்யாண நவக்கிரகங்கள் என அழைக்கின்றனர். இதுபோன்ற கல்யாண நவகிரகங்கள் இருக்கிற கோவில்கள் மிக மிக அரிது. அதன் அருஐம நன்கு புரிந்தவர்களே கோவிலில் அப்படி நவகிரகங்களை பிரதிஷ்டை செய்கிறார்கள். அப்படி துணைவியருடன் இருக்கும் நவகிரக சிலைகளை வழிபட முடியாதவர்கள் துணைவியாருடன் சேர்ந்துள்ள நவக்கிரக படம் வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டு வரவும். விரைவில் திருமணம் நடைபெறும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync
English summary

astrological remedies for delayed marriage

In Hinduism particularly, it is believed that the time of marriage in one’s life is pre-decided based on the astrological planets and their movements at the time of their birth
Story first published: Saturday, March 10, 2018, 15:21 [IST]