நான்கு படைத்தளபதிகள் பாதுகாப்புடன் பள்ளிக்குச் சென்ற சிறுமி!

Posted By:
Subscribe to Boldsky

ஒரு குழந்தையை எல்.கே.ஜி வகுப்பில் சேர்க்க வேண்டும் என்றாலே பெற்றோர் இருவருக்கும் பெண்டு நிமிறும் விதமாக க்யூவில் நின்று அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்குவதிலிருந்து காலையில் குழந்தையை எழுப்பி பள்ளிக்கு அனுப்புவது வரை ஏகப்பட்ட வேலைகள் இருக்கும்.

ஒரு குழந்தையை அனுப்ப வீட்டிலிருக்கும் அத்தனை பேரும் பம்பரமாய் வேலை செய்தாக வேண்டிய கட்டாயமும் இருக்கும். இங்கேயும் எலிமென்ட்ரி ஸ்கூலுக்குச் சென்ற சிறுமியை பற்றி தான் படிக்கப் போகிறீர்கள். ஆனால் இந்த சிறுமி வரலாற்றில் இடம்பிடித்துவிட்டாள்.

Amazing Life Story of Ruby Bridges

Image Courtesy

ரூபி பிரிட்ஜஸ் என்ற இந்த சிறுமி ஆப்ரிக்க-அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவள். கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வன்முறை உச்சக்கட்டத்தில் இருந்த போது படைத்தளபதி பாதுகாப்புடன் பள்ளிக்குச் சென்ற அசாத்திய தைரியம் கொண்ட முதல் கறுப்பினப் பெண்! இந்த நிகழ்வு நடந்த போது ரூபிக்கு வயது 6

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு :

பிறப்பு :

ரூபியின் பெற்றோர் அபோன் மற்றும் லுசிலி பிரிட்ஜஸ் இருவரும் விவசாயிகள். வேலை வாய்ப்பினைத் தேடி மிசிசிபியிலிருந்து நியூ ஆர்லென்ஸ் என்ற பெரிய நகரத்திற்கு குடிபெயர்கிறார்கள். அங்கே ரூபியின் அப்பாவிற்கு ஒரு கேஸ் ஸ்டேசனில் வேலை கிடைக்கிறது, குடும்பத்தைக் காப்பாற்ற லுசிலி இரவு நேர வேலைக்குச் செல்கிறார்.

ரூபிக்கு இரண்டு தம்பி மற்றும் ஒரு தங்கை என குடும்பம் வளர்ந்தது.

Image Courtesy

கிண்டர் கார்டன் :

கிண்டர் கார்டன் :

ரூபி கிண்டர் கார்டனுக்கு அனுப்பப்படுகிறாள். கிண்டர் கார்டனிலிருந்து எலிமென்ட்ரி ஸ்கூலுக்குச் செல்ல வேண்டுமென்றால் கறுப்பினத்தவர்கள் ஒரு தேர்வு எழுத வேண்டும். அது வெள்ளையர்கள் மட்டுமே பள்ளிக்குச் சென்று படிக்க அனுமதிக்கப்பட்ட காலம். கறுப்பினத்தவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுக்க அவர்கள் அப்போது எடுத்த ஆயுதம் நுழைவுத் தேர்வு.

Image Courtesy

நுழைவுத் தேர்வு :

நுழைவுத் தேர்வு :

இந்த நுழைவுத் தேர்வினை கறுப்பினத்தவர்கள் மட்டும் எழுதுவார்கள். அவர்கள் எழுதி தேர்வானால் மட்டுமே பள்ளியில் படிக்க அனுமதி கிடைக்கும். ஒர் எலிமென்ட்ரி பள்ளியில் சேர்வதற்கான தேர்வாக அது இருக்காது. மிகக் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டு அங்கேயே மாணவர்களை தடுத்து விடுவார்களாம். இந்த தேர்வில் கறுப்பினக் குழந்தைகள் எல்லாம் தோற்றுப் போக பல காலங்களாக வெள்ளையர்கள் மட்டுமே கல்வியை தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.

Image Courtesy

பள்ளி :

பள்ளி :

ரூபியின் வீட்டருகிலியே கிண்டர் கார்டன் பள்ளியிருந்திருக்கிறது. ஆனால் அதில் ரூபி சேர்க்கப்படாமல் பல மைல் தொலைவில் இருந்த கிண்டர் கார்டன் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு நாளும் சிரமமடைந்திருக்கிறாள் ரூபி.

அந்த வயதிலேயே இதுப் பற்றி தன் பெற்றோரிடம் கேட்கவும் செய்திருக்கிறாள். அதற்கு அவளின் அம்மா சொன்ன பதில் ரூபியின் மனதில் விதையாய் விதைத்திருக்கிறது. ரூபி,நீ கறுப்பினத்தில் பிறந்துவிட்டாய்..... இந்தப் பள்ளியில் வெள்ளை இனத்தவர்கள் மட்டும் தான் படிக்க வேண்டும். என்று சொல்லியிருக்கிறார்.

Image Courtesy

தேர்வு :

தேர்வு :

எலிமென்ட்ரி பள்ளியில் சேரும் வயது வந்தது. எந்த குழந்தையும் இந்த தேர்வில் தேர்வாக மாட்டார்கள் தெரிந்தே ரூபியையும் இந்த தேர்வில் பங்கேற்க வைக்க வேண்டுமா? என்று தயங்கினார் ரூபியின் தந்தை. ரூபிக்கு நாம் சிறந்த கல்வியை கொடுக்க வேண்டும் அதனால் ரூபி இந்த தேர்வை கண்டிப்பாக எழுதுவாள் அவள் தேர்ச்சிப் பற்றி பள்ளிக்குச் செல்வாள் என்று உறுதியாக நம்பினார் ரூபியின் தாய்.

அம்மா லுசிலியின் தூண்டுதலில் அப்பா சம்மதிக்க ரூபி தேர்வு எழுதுகிறாள்.

Image Courtesy

ஆறு பேர் :

ஆறு பேர் :

1960 ஆம் ஆண்டு ஆறு ஆப்ரிக்க மாணவர்களுக்கு இந்த தேர்வு நடக்கிறது. அதில் ரூபி மட்டுமே வெற்றி பெறுகிறாள். இந்த தேர்வில் வெற்றி பெற்றதால் வீட்டிற்கு அருகிலிருக்கும் வில்லியம் ஃப்ரண்ட்ஸ் பள்ளி அதுவும் வெள்ளையர்கள் மட்டுமே படிக்கிற பள்ளிக்கு முதல் கறுப்பினத்தவர் என்ற அடையாளத்துடன் உள்ளே நுழைகிறார் ரூபி.

Image Courtesy

சலசலப்பு :

சலசலப்பு :

கறுப்பினத்தவர் எப்படி வெள்ளையினத்தவர்களுக்கு சமமாக உட்கார்ந்து படிக்க முடியும் என்று பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. செப்டம்பர் மாதம் பள்ளி திறக்கப்படும் என்று சொல்லப்பட்டது ஆனால் அதை கடந்து நாட்கள் நகர்ந்து கொண்டேயிருந்தது. ரூபி பழைய பள்ளிக்கே சென்று கொண்டிருந்தார். லூசியானா மாநில அரசாங்கம் இந்த பிரச்சனைக்காக நீதிமன்றத்தை நாடியது.

பல எதிர்ப்புகளை கடந்து நவம்பர் மாதம் பள்ளி துவங்கும் தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவரும் பள்ளியில் சேர்ந்து படிக்கலாம் என்று தீர்ப்பு வருகிறது.

Image Courtesy

பாதுகாப்பு :

பாதுகாப்பு :

அதே நேரத்தில் இது வெள்ளையர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாலும் மக்கள் மனதில் ஏற்கனவே பயங்கர வெறுப்புணர்வு இருப்பதால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு என்று நினைத்த நீதமன்றம்.

முதன்முறையாக கறுப்பினத்திலிருந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தையை பாதுகாக்க படைத்தளதிகளை நீயூ ஓர்லென்ஸ் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது.

Image Courtesy

முதல் நாள் பள்ளிக்கு :

முதல் நாள் பள்ளிக்கு :

1960, நவம்பர் 14 ஆம் தேதி முதன் முதலாக கறுப்பினத்தவர்கள் வரலாற்றிலேயே முதன்முறையாக வெள்ளையர்கள் படிக்கும் பள்ளிக்கும ரூபி செல்லவிருக்கிறார். வீட்டிலிருந்து ஐந்து தெரு தள்ளியிருந்த பள்ளிக்கு காரில் அழைத்து வரப்பட்டார்.ரூபிக்கு பாதுகாப்பு வழங்க நான்கு படைத்தளபதிகள் வந்திருந்தார்கள்.இருவர் முன்னாலும் இருவர் ரூபிக்கு பின்னாலும் வந்தார்கள். இவர்களுடன் ரூபியின் தாயும் உடனிருந்தார்.

Image Courtesy

வரவேற்பு :

வரவேற்பு :

பள்ளி வாயிலில் ஏராளமான மக்கள் கூட்டம். எப்படி கறுப்பினத்தவரை பள்ளியில் அனுமதிக்கலாம் என்று பயங்கர எதிர்ப்பு. ரூபியை கடுமையாக வசைபாடினார்கள் ரூபி மீது கண்ட பொருட்களை வீசியெறிந்தார்கள்.பேரிகேட் எல்லாம் போட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள்.

ஆறு வயதே நிரம்பிய ரூபி அது தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று தான் முதலில் நினைத்துக் கொண்டாள்.

Image Courtesy

முதல் நாள் :

முதல் நாள் :

ஒரு வழியாக பள்ளிக்கு உள்ளே கொண்டுவரப்பட்டாள் ரூபி. நேராக வகுப்பறைக்கு செல்லாமல் தலைமையாசிரியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டாள். மக்கள் கூட்டம் வெளியில் இன்னமும் கத்திக் கொண்டிருந்தார்கள்.

கறுப்பினத்தவர் படிக்கும் பள்ளியில் எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க மாட்டோம் என்று சொல்லி வெள்ளையினத்தவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றார்கள். அன்றைக்கு எந்த வகுப்பும் நடக்கவில்லை நாள் முழுவதும் தலைமையாசிரியர் அலுவலகத்திலேயே உட்கார்ந்திருந்தாள் ரூபி.

Image Courtesy

இரண்டாம் நாள் :

இரண்டாம் நாள் :

மறுநாளும் அதே எதிர்ப்பு.பெற்றோர்கள் மட்டுமல்ல அந்தப் பள்ளியின் ஆசிரியர்களும் ரூபிக்கு பாடம் எடுக்க மறுத்துவிட்டார்கள். ஒரு வழியாக ஓரேயொரு ஆசிரியர் பர்பரா ஹென்றி என்பவர் ரூபிக்கு பாடம் எடுக்க முன் வந்தார். அவர் அந்தப் பள்ளியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஆசிரியர் ஆவார். ஆசிரியருக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஹென்றியும் மிரட்டப்பட்டார் கறுப்பினத்தவருக்கு நீ கல்வி கற்றுத்தரக்கூடாது என்றார்கள்.

ஆனால் ஹென்றி எதையும் கேட்கவில்லை

Image Courtesy

இரண்டு பேர் :

இரண்டு பேர் :

பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளை அந்த பள்ளியிலிருந்து வெளியேற்றி வேறு பள்ளிக்கு மாற்றினார்கள். ஹென்றியும் வகுப்பையும் அன்னைத்து வெள்ளையின மாணவர்கள் புறக்கணித்தார்கள்.

வகுப்பறையில் ஹென்றியும் ரூபியும் மட்டுமே உட்கார்ந்திருப்பார்கள். ஹென்றி ரூபிக்கு பாடத்தை எடுக்க ஆரம்பித்தார். கல்வியில் மட்டுமல்லாது பல விஷயங்களிலும் ரூபிக்கு துணையாக இருந்தார் ஹென்றி.

Image Courtesy

ஒரு வாரம் :

ஒரு வாரம் :

ரூபி ஒரு வாரம் பள்ளிக்குச் சென்றது பெரும் போராட்டமாகவே இருந்தது. அது அவ்வளவு எளிதான காரியமாக இருந்திருக்கவில்லை. நான்கு படைத்தளபதிகளின் பாதுகாப்பையும் மீறி ரூபியை தாக்க பலர் முயன்றார்கள். ஒரு நாள் பள்ளியில் உனக்கு கொடுக்கப்படுகிற உணவில் விஷம் வைத்து உன்னைக் கொன்றுவிடுவோம் என்று ஒரு பெண்மணி கத்தினாள். அன்றிலிருந்து பள்ளியில் உணவு வாங்கி சாப்பிட ரூபி அனுமதிக்கப்பட்டவில்லை மாறாக வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவை மட்டுமே சாப்பிட்டாள்.

இன்னொரு நாள் பள்ளி வாசலில் இறந்தவர்களை புதைக்கும் பெட்டியில் கருப்பு பொம்மையை வைத்து அதில் ரூபி என்று எழுதியிருந்தார்கள்.

Image Courtesy

கழிவறை :

கழிவறை :

பள்ளிக்கு சென்று விட்டாலே தவிர இன்னமும் பாகுபாடு தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. பிற மாணவர்களுடன் உட்கார அனுமதிக்கப்படவில்லை அவர்களுடன் ப்ரேக் நேரத்தில் விளையாடவோ கேண்டீனுக்கோ செல்ல அனுமதிக்கப்படவில்லை. இவ்வளவு ஏன் கழிவறைக்கு செல்லக்கூட ரூபி அனுமதிக்கப்படவில்லை.

பிற மாணவர்களிடமிருந்து ரூபி தனிமைபடுத்தப்பட்டேயிருந்தாள், ரூபி கழிவறைக்கு செல்ல வேண்டுமென்றால் உள்ளே வேறு யாரும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகு தனியாகவே படைத்தளபதிகள் பாதுகாப்புடனே சென்றாள்.

Image Courtesy

குடும்பம் :

குடும்பம் :

ரூபி பள்ளிக்குச் சென்றதில் ரூபிக்கு மட்டுமே எதிர்ப்பு அல்ல அவளது மொத்த குடும்பத்தையும் எதிர்த்தார்கள்.முதலாவதாக ரூபியின் தந்தைக்கு வேலை பறிபோனது.ஊரில் தாத்தாப்பாட்டி 25 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருந்த நிலம் பிடுங்கப்பட்டது.

பலசரக்கு கடையில் நுழைந்து சாமான் வாங்க தடை விதிக்கப்பட்டது. ஒரு பக்கம் இப்படி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும்.இவர்களுக்கு சிலர் ஆதரவும் தெரிவித்து வந்தார்கள்.

Image Courtesy

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

ஒரு கட்டத்தில் ரூபிக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. இரவில் அடிக்கடி விழுத்துக் கொள்ள ஆரம்பித்தாள் தாயின் அரவணைப்பிலேயே இருக்க வேண்டும் என்று அழுதாள். ஆறு வயது குழந்தை சந்திக்கிற எதிர்ப்பையா அவள் சந்தித்திருக்கிறாள்?

பள்ளியில் எல்லாரும் தன்னை ஒதுக்குவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் மட்டும் ஏன் வீட்டிலிருந்து கொண்டு சென்ற உணவை சாப்பிட வேண்டும். பிற மாணவர்களைப் போல பள்ளியில் கொடுக்கப்படுகிற உணவைச் சாப்பிட்டால் என்ன என்று கேட்டாள் ரூபி.

Image Courtesy

சாப்பிட வாங்க :

சாப்பிட வாங்க :

பிறருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று அதீதமாக விரும்பினாள் ரூபி. இதனால் தான் கொண்டு வருகிற சேண்ட்விச் உணவை பள்ளியில் சாப்பிடாமல் வகுப்பறையில் இருந்த ஒரு பெட்டியில் ஒளித்து வைத்தாள். சில நாட்களில் அங்கே கரப்பான்பூச்சி எலி ஆகியவை வருவதையறிந்தவர்கள் திறந்து பார்த்த போது உள்ளே நான்கைந்து சேண்ட்விச்சுகள் இருந்திருக்கிறது. எல்லாமே ரூபி வைத்தது தான்.

இந்த சம்பவம் ரூபியின் ஆசிரியர் ஹென்றியை கலங்க வைத்தது. இனி என்னுடனே நீ சாப்பிடலாம் என்று சொல்லி தினமும் ரூபியை சாப்பிடும் போது உடன் அழைத்துக் கொண்டார்.

Image Courtesy

உளவியல் ஆலோசனை :

உளவியல் ஆலோசனை :

ரூபியின் உளவியல் பிரச்சனை நாளுக்கு நாள் மோசமடைந்தது. குழந்தைகள் மனநல மருத்துவரான ராபர்ட் ரூபிக்கு ஆலோசனை வழங்க முன்வந்தார். ஆறு வயதில் இந்த சிறுமி எத்தகைய எதிர்ப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவருக்கு தெரிந்தேயிருந்தது, வாரம் ஒரு முறை தொடர்ந்து ரூபியை சந்தித்து பேச ஆரம்பித்தார் ராபர்ட்.

இவர் சந்திக்கும் போதெல்லாம் ரூபியை மட்டுமே அதிக நேரம் பேச வைப்பார். பள்ளியில் என்ன நடந்தது என்பதிலிருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்கள் தன்னை நோக்கி வீசப்பட்ட வார்த்தைகள் வரை எல்லாமே மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள் ரூபி. சில நேரங்களில் ராபர்ட்டுடன் அவரது மனைவியும் உட்கார்ந்து ரூபி விவரிப்பதை கேட்பார்கள்.

Image Courtesy

இரண்டாம் ஆண்டு :

இரண்டாம் ஆண்டு :

இரண்டாம் ஆண்டிற்கு அடியெடுத்து வைத்தார் ரூபி. எல்லாம் மாறியிருந்தது. ரூபிக்கு பாடமெடுத்த ஆசிரியர் ஹென்றியின் கான்ட்ராக்ட் நீட்டிக்கப்படவில்லை. அதனால் பழையபடி போஸ்டானுக்கே திரும்பிவிட்டார். ரூபிக்கு பாதுகாப்பு வழங்கிய படைத்தளபதிகளை திரும்ப பெற்றுக் கொண்டது அரசு. ரூபி தனியாகவே பள்ளிக்குச் சென்று வர ஆரம்பித்திருந்தாள்.

இம்முறை ரூபியின் வகுப்பறையில் ஒரு சில மாணவர்கள் இருந்தார்கள். ரூபி தொடர்ந்து படிக்க ஆரம்பித்த ரூபி அமெரிக்கன் எக்ஸ்பிரஸில் உலக சுற்றுலா ஏஜெண்ட்டாக பணியமர்த்தப்பட்டார்.

Image Courtesy

இன்று :

இன்று :

1984 ஆம் ஆண்டு ரூபிக்கு மல்கம் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நான்கு குழந்தைகள். தொண்டு நிறுவனத்தை துவங்கி இன்றளவு நிற வேற்றுமைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார் ரூபி.

ரூபியின் வாழ்க்கை வரலாறு 2007 ஆம் ஆண்டு கண்காட்சியாக வைக்கப்பட்டது. அவரைப்பற்றி பல புத்தகங்கள் வெளி வந்திருக்கிறது. அதோடு ரூபிப் பற்றிய திரைப்படமும் வெளியிடப்பட்டிருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Amazing Life Story of Ruby Bridges

Amazing Life Story of Ruby Bridges
Story first published: Thursday, April 12, 2018, 10:48 [IST]