For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்ன ராசிக்கல் அணிவது நல்லது... எதை அணியக்கூடாது?...

ராசிக்கற்கள் பொதுவாக அதிர்ஷ்டக் கற்கள் என்றே அழைக்கப்படுகின்றன. அதிர்ஷ்டம் என்பதை கிரகங்கள் நிர்ணயிக்குமா என்றால், நிச்சயம் நிர்ணயிக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.

|

ராசிக்கற்கள் பொதுவாக அதிர்ஷ்டக் கற்கள் என்றே அழைக்கப்படுகின்றன. அதிர்ஷ்டம் என்பதை கிரகங்கள் நிர்ணயிக்குமா என்றால், நிச்சயம் நிர்ணயிக்கும் என்று தான் சொல்ல வேண்டும். நாம் பிறந்த நேரத்தில் அந்த குறிப்பிட்ட மாதத்தில் எந்த கிகங்கள் எந்த திசையில் எப்படி இயங்குகிறதோா அதைப் பொறுத்துத்தான் ஒவ்வொருவருடைய ஜாதகமும் கணிக்கப்படுகிறது. அதனால் ஜோதிடத்துக்கும் நம்முடைய சாழ்க்கை முறைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

birthstone

கிரகங்களும் ஜோதிடமும் ஒரு போதும் பொய்யாவதில்லை. மக்கள் நம்புகிறார்கள் . அதை வைத்து தான் சம்பாதிக்க நினைத்து தொழிலாக செய்யும் பலர், முறையாக ஜோதிட அறிவியலைப் படிக்காமல் ஜாதகம் கணிப்பது தான் மக்களிடம் பெரும் அதிருப்தி, கோபம் மற்றும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது என்றுகூட சொல்லலாம். அந்த வகையில் ராசிக்கற்கள் எப்படி அதிர்ஷ்டத்தைக் கொடுக்கின்றன. எந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த ராசிக்கல்லை அணியலாம் என்று இங்கே பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிரகங்கள்

கிரகங்கள்

அதனால்தான் ஜாதகக் கட்டங்கள் 12. கிரகங்கள் 9 ம் அமைக்கப்பட்டுள்ளன. சூரியன், சுக்கிரன், சனி, குரு, ராகு, கேது, செவ்வாய், புதன், சந்திரன் என்னும் 9 கிரகங்கள் 12 மாதங்களில் எப்படி பயணிக்கிறது என்று பார்க்க வேண்டியது மிகமிக அவசியம்.

12 மாதங்கள்

12 மாதங்கள்

ஜாதகக் கட்டங்கள் 12 இருப்பது போலவே ஒரு ஆண்டுக்கும் 12 மாதங்கள் இருப்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த 12 மாதங்களும் கிரகங்கள் எப்படி பயணிக்கும் என்பதை வைத்தே ஜோதிடம் என்பது கணிக்கப்படுகிறது.

பிறந்த மாதமும் ராசிக்கற்களும்

பிறந்த மாதமும் ராசிக்கற்களும்

ஒருவர் எந்த மாதத்தில் பிறந்தார் என்பதை அடிப்படையாக வைத்து, அதற்கு தகுந்தபடி கிரகங்களின் இயக்கங்களை ஆராய்ந்து பின் அதற்கேற்ற ராசிக்கற்களை மோதிரமாக அணிவது என்பதும் வாழ்க்கையில் ஆரோக்கியம், செல்வம் என எல்லா வளங்களையும் பெற முடியும்

யாருக்கு எந்த ராசிக்கல்

யாருக்கு எந்த ராசிக்கல்

ஜனவரி

ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் கோமேதகம் மற்றும் ரத்தினக் கற்கள் அணிவது சிறப்பு. பாம்பு போன்ற விஷயங்கள் தாக்காமல் பாதுகாக்கும். கெட்ட கனவுகள், தூக்கமின்மை ஆகியவற்றை சரிசெய்யும். காதலும் நம்பிக்கையும் அதிகமாகும். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும். ரத்தினக் கற்கள் அணிந்தால் அழகாக இருக்கிறது என்பதற்கான

பிப்ரவரி -

பிப்ரவரி -

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் புஷ்பராகக் கல்லை அணிந்து கொள்ளலாம். இந்த கல்லை அணிவதன் மூலம் இதுவரை கட்டுக்கடங்காத கோபக்காரராக இருந்த நீங்கள் சாந்தமாக மாறிவிடுவீர்கள். பெரியவர்களுக்கு மதிப்பளிப்பீர்கள். தன்னடக்கம் அதிகரிக்கும். இந்த கல் அணிவதால் ராஜயோகம் உண்டாகும். அதன்மூலம் உங்களுக்குப் பொருத்தமான பல உயர் பதவிகள் உங்களைத் தேடி வரும்.

மார்ச் -

மார்ச் -

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் கோமேதகக் கல்லை அணிவது சிறப்பு. இந்த கல்லை அணிந்தால் உடல்நலக் கோளாறுகள் நீங்கும். மற்றவர்களிடத்தில் மிகவும் பணிவன்புடன் நடந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி வந்து குவிந்துகொண்டே இருக்கும்.

ஏப்ரல் -

ஏப்ரல் -

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் வைரக்கற்கள் பதித்த மோதிரத்தை அணிந்து கொ்ளவது அவர்களுக்கு ஏற்ற ஒன்று. வைரம் என்பது காதலின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதனால் ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் வைரக்கற்களை அணிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கையில் அன்பும் காதலும் நிறைந்து இருக்கும். வாழ்க்கை குதூகலமாக இருக்கும். அழகான அன்பான மனைவி கிடைப்பார். அதற்குப் பிறகும் உங்களை வெல்ல இங்கே வேறு யார் இருக்கிறார்கள்.

மே-

மே-

மே மாதத்தில் பிறந்தவர்கள் மரகத கற்களை அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். குழந்தைப்பேறு உண்டாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த மரகதக் கல்லை அணிந்து கொண்டால் நீங்கள் தொட்ட காரியமெல்லாம் வெற்றியடையும்.

ஜூன் -

ஜூன் -

ஜூன் மாதம் பிறந்த சிலருக்கு அடிக்கடி காரியத் தடைகள் ஏற்படும். அடிக்கடி உடல் நலக் கோளாறுகளும் ஏற்படும். அதுபோன்ற பிரச்னை உடையவர்கள் இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் முத்து பதித்த மோதிரத்தை வாங்கி அணிவது உங்களுக்கு சிறப்பைத் தரும். நீங்கள் நீல நிற படிகக் கல்கூட அணியலாம். நினைத்த காரியங்கள் அத்தனையும் நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.

ஜூலை-

ஜூலை-

ஜூலை மாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடியது மாணிக்கக் கற்கள் தான். இதுவரை தடங்கல்களாக இருந்து வந்த காரியங்கள் அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற ஆரம்பிக்கும். தன்னம்பிக்கையும் பொறுமையும் அதிகரிக்கும். பிறரிடத்தில் அன்பு செலுத்த ஆரம்பித்து விடுவீர்கள். இதுவரை வாழ்க்கையில் இருந்து வந்த விரக்தி நிலை காணாமல் போகும்.

ஆகஸ்ட் -

ஆகஸ்ட் -

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் பச்சை மணிக்கல் என்னும் வெளிர் பச்சை நிறக்க் பதித்த மோதிரத்தை அணிவது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இதன் மூலம் செல்வம் பெரும். இது ஆங்கிலத்தில் peridot என்ற பெயரில் அழைக்கப்படும். இந்த கற்களை அணிவதால் கெட்ட சக்திகள் உங்களை அண்டாது. இதுவரை இருந்து வந்த வாழ்க்கை பற்றிய கவலையும் மன அழுத்தமும் நீங்கும். வாழ்க்கையில் அதன்பின் உங்களுக்கு ஏறுமுகம் தான்.

செப்டம்பர் -

செப்டம்பர் -

செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் நீல நிறத்தில் உள்ள மாணிக்கக் கற்களை அணிந்து கொள்வது சிறந்தது. இதை தந்திரக் கற்கள் என்று சொல்வார்கள். இதை அணிந்து கொண்டால் உங்களுக்கு எதிராக செய்யப்படும் எந்த சூழ்ச்சியாலும் உங்களை ஒன்றுமே செய்ய இயலாது. எதையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் அதிகமாகும்.

அக்டோபர்

அக்டோபர்

அக்டோபரில் பிறந்தவர்கள் புஷ்ப ராகக் கல்லை அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். கலைஞர்களுக்கு படைப்பாற்றலை வளர்க்கும் தன்மை கொண்டது. எதிர்மறை எண்ணம் கொண்டவர்களையும் உங்கள் மீது பொறாமை கொண்டவர்களையும் உங்களை விட்டு தூரமாக ஒதுக்கி வைக்கும். நம்பிக்கையையும் துணிச்சலையும் ஏற்படுத்தும்.

நவம்பர் -

நவம்பர் -

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் புஷ்ப ராகக்கல் மற்றும் மரகதக் கற்கள் பதித்த மோதிரங்களை அணிந்து கொள்வது நல்லது. இந்த இரண்டு கற்களும் குறிப்பாக நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ரிஷபம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கும் தான் அதிக அளவில் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் என்பது சாஸ்திர விதி. உடல் ஆரோக்கியம் மேம்படும். நேர்மறை ஆற்றல்கள் பெருகும். வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு உங்களை நகர்த்திச் செல்லும்.

டிசம்பர் -

டிசம்பர் -

டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு நீலக்கற்கள் தான் அதிர்ஷ்டக் கற்கள். கும்ப ராசிக்காரர்களுக்கும் இது மிகப் பொருத்தமான கல்லாக அமையும். நீலக்கல், நீல நிற ரத்தினக் கற்கள், நீல புஷ்பராகக் கல் ஆகிய மூன்றுமே டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் அணியலாம். உடல் உபாதைகள் உங்களை விட்டு அடியோடு ஓடிவிடும்.

ராசியும் ராசிக்கற்களும்

ராசியும் ராசிக்கற்களும்

பிறந்த மாதத்தையும் கோள்களின் இயக்கங்களையும் வைத்து எவ்வாறு அதிர்ஷ்டனக் கற்கள் வரையறுக்கப்படுகிறதோ அதேபோல ஒவ்வொருவருடைய ராசியை வைத்தும் அவரவர்களுக்கான அதிர்ஷ்டக் கற்களை அணிந்து கொள்ள முடியும். மாதத்தை வைத்து கணிப்பதற்கும் ராசியை வைத்துக் கணிப்பதற்கும் சிறுசிறு வித்தியாசங்கள் வரக்கூடும். அதனால் ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று அதன்பின் அணிவது சிறப்பாக அமையும்.

எந்த ராசிக்கு எந்த கல்

மேஷம் - பவளம்

ரிஷபம் - மரகதம்

மிதுனம் - வைரம்

கடகம் - முத்து

சிம்மம் - மாணிக்கம்

கன்னி - மரகதம்

துலாம் - வைரம்

விருச்சிகம் - பவளம்

தனுசு - புஷ்ப ராகம்

மகரம் - நீலக்கல், மரகதம்

கும்பம் - நீலக்கல், நீல புஷ்பராகம், நீலநிற ரத்தினம்

மீனம் - புஷ்ப ராகம்

என்ன மக்களே! இதுவரைக்கும் இருந்த கஷ்டங்க்ள விலகி மகிழ்ச்சியும் செல்வமும் பெருகணும்னா உங்களுக்குப் பொருத்தமான ராசிக்கல்லை வாங்கி அணியுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

A list of Gemstone Birthstones And Astrology according your birth month and zodiac sign

Zodiac gemstones are also known as Astral stones. The word Astral is derived from Astrology and has been an important part of holistic beliefs for centuries.
Desktop Bottom Promotion