Latest Updates
-
பிரியாணியை விட சூப்பரா இருக்கும் தக்காளி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
150 ஆண்டுக்கு மேல் வாழும் பாகிஸ்தானின் ரகசிய இனக்குழு பெண்கள் - இவர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன தெரியுமா? -
கோதுமை ரவா பொங்கலும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குதூகலமான நாளாக இருக்குமாம் -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-செவ்வாய்: மே 10 வரை இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
குருபகவான் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
கர்நாடகா பேமஸ் குடைமிளகாய் தக்காளி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
உங்க முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க! -
வெயில் காலத்தை சமாளிக்க உதவும் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தை மாற்றப்போகும் ஸ்டார் வேட்பாளர்களும் அவர்களின் தொகுதிகளும்
ஒருவரை மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜா அனுப்பும் 4 கடிதங்கள் என்னவென்று தெரியுமா?
இங்கு மரணத்தை நெருங்கும் முன் எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் அந்த 4 கடிதங்கள்/அறிகுறிகள் என்னவென்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வுலகில் யாரும் மரணத்திற்கு தயாராக இருக்கமாட்டார்கள். அனைவருக்குமே நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதிகாசங்களின் படி, மரண கடவுளபன எமதர்மராஜன் ஒருவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை முன்கூட்டியே 4 கடிதங்கள்/அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இதுக்குறித்து ஓர் சுவாரஸ்ய கதை ஒன்றும் உள்ளது. இக்கட்டுரையில் அந்த கதை குறித்தும், மரணத்தை நெருங்கும் முன் எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் அந்த 4 கடிதங்கள்/அறிகுறிகள் என்னவென்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அம்ரிதா
பண்டைய காலத்தில், யமுனா ஆற்றங்கரையின் அருகே 'அம்ரிதா' என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். மற்றவர்களைப் போலவே, இவனுக்கும் மரணம் பற்றிய பயம் இருந்தது. இந்த மரணத்தில் இருந்து தப்பிப்பதற்கு, அம்ரிதா எமதர்மராஜனை வேண்டி கடுமையாக தவம் மேற்கொண்டான். இதனால் மனம் குளிர்ந்த இறப்பு கடவுளான எமதர்மராஜன், அம்ரிதாவின் முன் தோன்றினார்.

எமனின் கூற்று...
அம்ரிதாவின் முன் தோன்றிய எமன் அவனிடம், "பொதுவாக நான் இறக்கும் தருவாயில் உள்ளவர்கள் அல்லது இறந்தவர்கள் முன் தான் தோன்றுவேன். முதல் முறையாக உனது தவத்தால் உயிருடன் உள்ள ஒரு மனிதனின் முன் தோன்றியுள்ளேன்" என்றார்.

அம்ரிதா கூற்று...
அதற்கு பதிலளித்த அம்ரிதா, "எனக்கு ஒரு வரம் வேண்டும். நீங்கள் எனக்கு மரணம் நிகழாது என வரம் தரமுடியாவிட்டால், என்னை மரணம் நெருங்கும் முன் குறைந்தது எனக்கு ஒரு கடிதத்தை அனுப்புங்கள். இதனால் நான் என் குடும்பத்தை சரியான நிலையில் வைத்து, அடுத்த ஜென்மம் எடுப்பதற்காக கடவுளைத் தொழுது என்னை நானே தயார் செய்து கொள்கிறேன்" என்று கேட்டுக் கொண்டான்.

எமனின் பதில்...
அம்ரிதா கேட்ட வரத்திற்கு எமதர்மராஜனும் ஒப்புக் கொண்டு, உன்னை மரணம் நெருங்கும் முன் நான் சில கடிதங்களை அனுப்புகிறேன், நீ தயாராகிக் கொள் என்றார்.

சில வருடங்கள் கழித்து...
சில வருடங்களுக்குப் பின், அம்ரிதா மரணத்தின் மீதுள்ள பயத்தை மறந்துவிட்டு, எமனிடமிருந்து இன்னும் கடிதம் வரவில்லை என்று நினைத்துக் கொண்டு, அனைத்து வகையான பாவ செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். இப்படியே நாட்கள் செல்ல, அம்ரிதாவிற்கு வயதாகிவிட்டது. ஒருநாள் அவனது தலைமுடியும் நரைத்துவிட்டது. அம்ரிதா இன்னும் எமனிடம் இருந்து கடிதம் வரவில்லை, ஆகவே நாம் இன்னும் பல நாட்கள் உயிருடன் தான் இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

மேலும் சில வருடங்களுக்கு பின்...
இன்னும் சில வருடங்கள் கழித்து, அம்ரிதா தன் பெரும்பாலான பற்களை இழந்தான். அப்போது பலரும் அவனிடம் மரணம் உன்னை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று எச்சரித்தனர். ஆனால், அதைப் பற்றி சற்றும் கவலைக் கொள்ளாமல், இன்னும் எமனிடம் இருந்து கடிதம் வரவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தான்.

அடுத்து..
சில நாட்கள் கழித்து, அம்ரிதாவால் எதையும் சரியாக பார்க்க முடியாமல் போனது. ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாமல், பாவ செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனால் நடக்க முடியாமல் போனது மற்றும் உடல் முடங்கி போனது.
அனைவருமே அம்ரிதா இறக்கப் போகிறான் என்று நினைத்தனர். ஆனால் அப்போதும், அம்ரிதா தனக்கு மரணம் நெருங்க காலம் இருப்பதாக எண்ணி, சந்தோஷமாகவே இருந்தான்.

எமனின் வருகை
ஒருநாள் எமன் அம்ரிதாவை அழித்துச் செல்ல வந்தார். அப்போது அம்ரிதா அதிர்ச்சிக்குள்ளாகி எமனிடம், கடவுளே, நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள், மரணம் என்னை நெருங்கும் முன் கடிதம் அனுப்புவேன் என்று எனக்கு வரமளித்து ஏமாற்றிவிட்டீர்கள் என்று கூறினான்.

எமனின் கூற்று...
அப்போது எமன் அம்ரிதாவிடம், "நீ உன் வாழ்க்கை முழுவதையும் பாவ செயல்களில் ஈடுபடுத்தி, ஆன்மீக வாழ்க்கையில் நாட்டம் காட்டாமல் இருந்துவிட்டாய். பின் எப்படி என்னுடைய கடிதம் உன்னை அடைந்ததை நீ உணர்ந்திருப்பாய்? நான் இதுவரை உனக்கு 4 கடிதங்களை அனுப்பினேன். அவை அனைத்தையும் நீ நிராகரித்துவிட்டாய்" என்றார்.
"நான்கு கடிதங்களா? ஆனால் என்னிடம் ஒன்று கூட வந்து சேரவில்லை" என்று அம்ரிதா கூறினான்.

எமனின் விளக்கம்
பின் எமதர்மராஜன் அந்த நான்கு கடிதங்கள் எப்படி அவனை அடைந்தது என்று கூறினார். மேலும் கடிதம் என்பது அவனது உடல் என்றும், மாற்றங்கள் தான் பேனா மை என்றும், காலம் தான் தபால்காரர் என்றும் கூறினார். எமனின் கூற்றுப்படி, அம்ரிதாவை மரணம் நெருங்கும் முன் 4 மாற்றங்கள் அம்ரிதாவின் உடலினுள் ஏற்பட்டுள்ளது. அவை:
* தலைமுடி நரைத்தது, எமன் அனுப்பிய முதல் கடிதம்.
* பற்கள் முழுவதையும் இழந்தது, எமன் அனுப்பிய 2 ஆவது கடிதம்.
* மூன்றாவது கடிதம், அம்ரிதா எதையும் சரியாக பார்க்க முடியாமல் போனது.
* நான்காவது கடிதம், உடல் முடங்கி போனது.
விளக்கமளித்துவிட்டு, அம்ரிதாவை எமலோகத்திற்கு எமதர்மராஜன் அழைத்து சென்று விட்டார்.



Click it and Unblock the Notifications











