For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுப் பொருட்களை ஞாயிற்று கிழமைகளில் சாப்பிடக்கூடாது என்று தெரியுமா?

இங்கு சூரிய பகவானின் கோபத்திற்கு உள்ளாகாமல் இருக்க ஞாயிற்று கிழமைகளில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

நவகிரகங்களில் முதன்மையாக கருதப்படுபவர் சூரிய பகவான். வாரத்தின் முதல் நாளான ஞாயிறு சூரிய பகவானின் பெயரைக் கொண்டே வந்தது. இதனால் ஞாயிற்று கிழமை சூரிய பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய ரதமே சூரிய பகவானின் வாகனம்.

Why Eating These 5 Things On Sunday Would Bring You Wrath Of Lord Sun?

ஜாதகப்படி சூரிய பகவானின் சொந்த வீடு சிம்ம ராசியாகும். ஜாதகத்தில் சூரியனின் ஆட்சி கொண்டவர்கள் மற்றும் வாழ்வில் அதிக கஷ்டத்தை அனுபவிப்பவர்கள், சூரிய பகவானின் முழு ஆசீர்வாதத்தையும் பெற, ஞாயிற்று கிழமைகளில் ஒருசில உணவுப் பொருட்களை உட்கொள்ளக்கூடாது.

இங்கு சூரிய பகவானின் கோபத்திற்கு உள்ளாகாமல் இருக்க ஞாயிற்று கிழமைகளில் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள் மற்றும் அதற்கான காரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மைசூர் பருப்பு

மைசூர் பருப்பு

மைசூர் பருப்புக்களை ஞாயிற்று கிழமைகளில் சமைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தண்டு கீரை (அமரந்த் கீரை)

தண்டு கீரை (அமரந்த் கீரை)

ஞாயிற்று கிழமைகளில் கீரையை சமைத்து சாப்பிடுவது கெட்ட சகுணமாக கருதப்படுகிறது.

பூண்டு

பூண்டு

இரத்த அழுத்தத்தை நிடுநிலைப்படுத்த பூண்டு சிறந்த பொருளாகக் கருதப்படுகிறது. ஆனால் ஞாயிற்று கிழமைகளில் சமையலில் பூண்டு சேர்ப்பதைத் தடுக்க வேண்டும்.

மீன்

மீன்

மீனையும் ஞாயிற்று கிழமைகளில் சமைத்து சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இது ஒரு இறைச்சி.

வெங்காயம்

வெங்காயம்

அனைத்து வீடுகளிலும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் வெங்காயம். இந்த வெங்காயம் ஞாயிற்று கிழமைகளில் சாப்பிடக்கூடாத ஒரு அமங்கலமான பொருளாக கருதப்படுகிறது.

காரணங்கள்

காரணங்கள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து பொருட்களையும் ஞாயிற்று கிழமைகளில் ஏன் சாப்பிடக்கூடாது என்பதற்கான காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் மாடுகளை கொல்லுவது என்பது பாவச்செயலாக இந்து மதம் கூறுகிறது. ஆனால் பழங்காலத்தில் இது சாதாரணமான ஒன்று.

கோமேத யாகம்

கோமேத யாகம்

இந்து மத புராணங்களில், மாடுகளை பலியிட்டு, புத்துயிர் வழங்கும் கோமேத யாகம் என்ற ஒன்று இருந்தது.

முனிவரின் யாகம்

முனிவரின் யாகம்

ஒருமுறை முனிவர் ஒருவர் கோமேத யாகத்திற்காக காலையில் ஒரு மாடை பலியிட்டு, மாலையில் புத்துயிர் வழங்க வீட்டிற்கு வெளியே வைத்திருந்தார். அதே சமயம் முனிவரின் மனைவி மிகவும் பலவீனமாக இருந்தார். அவருக்கு தாங்க முடியாத அளவில் பசி இருந்தது. இதுவரை பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு வந்த முனிவரின் மனைவி, பசி தாங்காமல், மாட்டின் சிறு பகுதியை வெட்டி சமைத்து சாப்பிட முடிவெடுத்தார்.

தூக்கி எறிந்த முனிவரின் மனைவி

தூக்கி எறிந்த முனிவரின் மனைவி

ஆனால் மாட்டிறைச்சியை சமைக்கும் போது தாங்க முடியாத அளவில் நாற்றம் வீசியதால், அவர் அந்த மாட்டிறைச்சியை அடர்ந்த காட்டில் தூக்கி எறிந்துவிட்டார். மாலையில் முனிவர் மாட்டிற்கு புத்துயிர் வழங்கிய போது, காட்டில் தூக்கி எறியப்பட்ட துண்டுகளும் புத்துயிர் பெற்றது.

உயிர் பெற்ற துண்டுகள்

உயிர் பெற்ற துண்டுகள்

முனிவரின் மனைவி தூக்கி எறியும் போது இறைச்சியின் ஒரு பாகம் தரையில் விழுந்து பூண்டாகவும், மற்றொரு பாகம் குளத்தின் அருகே விழுந்து மீனாகவும் உயிர் பெற்றது. இரத்தத் துளிகள் மைசூர் பருப்புக்களாகவும், தோல் வெங்காயமாகவும், எலும்பு தண்டு கீரையாகவும் உயிர் பெற்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Eating These 5 Things On Sunday Would Bring You Wrath Of Lord Sun?

Do you know why eating these 5 things on Sunday would bring you wrath of Lord Sun? Read on to know more...
Desktop Bottom Promotion