For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வகைவகையான கக்கூஸ் - அலப்பறையை கூட்டும் ஜப்பான்!

ஜப்பானில் மட்டுமே காணப்படும் விசித்திரமான கழிவறை வகைகள்!

|

காலை கடன் கழிக்க வேண்டியது மிகவும் அத்தியாவசியமான வேலை. ஒரு நாள் என்றில்லை, ஒருவேளை கழிக்காவிட்டாலும் கதி அம்பேல் ஆகிவிடும்.

முன்னொரு காலத்தில் காடுகளில் கழிந்துவந்த மக்கள் இனம், நாகரீக நிலை அடைந்தவுடன் நான்கு சுவர் கட்டி மானம் காக்க ஆரம்பித்தது.

மக்கி உரமானது, மனிதர் அள்ளும் அவலநிலைக்கு தள்ளப்பட்டது தான் பாக்கி. ஆனால், இன்று அதிநவீன நாகரீக உலகம் கழிவறையை கூட மிக நவீனமாக, அழகாக உருவாக்கிக் கொள்ள தான் விரும்புகிறது.

இந்த வகையில் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் ஜப்பான் காரர்கள், தங்கள் நாட்டில் பல்வேறு வகையிலான கழிவறைகள் கட்டி பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தங்கம்!

தங்கம்!

800-க்கும் மேற்பட்ட ஜப்பான் நாட்டு கழிவறைகளை பயன்படுத்தி, அதில் சிறந்த 10 கழிவறைகளை பற்றி ஒரு பெண்மணி எழுதிய தொகுப்பு தான் இது.

இது 18 காரட் தங்கத்தில் உருவாக்கப்பட்ட தங்க கக்கூஸ். இங்கே டான்ஸிங் ரோபோட்களும் இருக்கின்றன.

இயற்கை!

இயற்கை!

உலகின் பெரிய திறந்வெளி கழிவறை இது. கண்ணாடி சுவர்களால் மூடப்பட்டுள்ள இந்த கழிவறை பெண்களுக்காக உருவாக்கப்பட்டது.

#எதுக்கு!

கார்டன்!

கார்டன்!

Resuto Uji எனும் மீன்வகை ரெஸ்டாரண்ட்டில் தான் இந்த கார்டன் கழிவறை இருக்கிறது. இங்கே ஜப்பானின் தனித்துவமான செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

மீன் தொட்டி!

மீன் தொட்டி!

கழிவறை சுற்றுப்புற சுவர்கள் மீன் தொட்டி போல கட்டமைக்கப்பட்டு, அதில் மீன்களும் நீந்துகின்றன.Hipopopapa Restaurantல் ஒரு கோடி செலவில் இது அமைக்கப்பட்டுள்ளது.

பழங்கால கழிவறை!

பழங்கால கழிவறை!

Tōfukuji எனப்படும் கோவிலுள் இருக்கும் கழிவறை இது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கழிவறை இது. இங்கே ஒரே நேரத்தில் 100 பேர் வரை பயன்படுத்தலாம்.

#பலேபலே!

உச்சா....

உச்சா....

Madarao Kōgen Ski ரசார்ட்டில் உச்சா போக தான் இந்த வசதி. இது 1988ல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில் நடந்த பனிசறுக்கு விளையாட்டு இடம்போல.

கடலை பார்த்தவாறு...

கடலை பார்த்தவாறு...

கடலின் அழகை ரசித்தவாறே சிறுநீர் கழிக்க இப்படி ஒரு வசதி செய்து வைத்துள்ளனர்Aqua-Line ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள்.

டொயோட்டா

டொயோட்டா

Ippūdō's ramen ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் பிரித்து எடுக்கப்பட்டடொயோட்டா என்ஜின்கள் கொண்டு கழிவறை சுவர் கட்டியுள்ளனர்.

பேப்பர்!

பேப்பர்!

Momojirō ரெஸ்டாரண்ட் உரிமையாளர் தெரியாமல் அளவுக்கு அதிகமாக டாய்லேட் பேப்பர் கருவிகள் வாங்கிவிட்டதால், திருப்பி அனுப்ப மனமில்லாமல் அனைத்தையும் ஒரே இடத்தில் நிறுவிவிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Various Weird Toilets Types in Japan!

Various Weird Toilets Types in Japan!
Desktop Bottom Promotion