Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
உலகில் உள்ள விசித்திரமான சில மூடநம்பிக்கைகள்!
இங்கு உலகில் உள்ள விசித்திரமான சில மூடநம்பிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலும் மூடநம்பிக்கைகள் ஏராளமாக உள்ளது. உலகில் பல தலைமுறைகளாக கண்மூடித்தனமாக சில பழக்கங்கள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏன் என்று காரணம் கேட்டால், அதற்கு சரியான காரணமும் தெரியாது.
இக்கட்டுரையில் உலக மக்களால் பின்பற்றப்பட்டு வரும் சில விசித்திரமான மூடநம்பிக்கைக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பிரட் நம்பிக்கை
பிரெஞ்சு மக்களின் நம்பிக்கையின் படி, பிரட் பாக்கெட்டை தலைகீழாக மேஜையில் வைத்தால், அதைக் கொடுப்போருக்கும், பெற்றுக் கொண்டோருக்கும் பசி அதிகமாக எடுப்பதோடு, துரதிர்ஷ்டத்தையும் வரவழைக்குமாம்.

மேஜை நம்பிக்கை
ரஷ்யாவில் உள்ள ஓர் மூடநம்பிக்கை, திருமணமாகாதவர்கள் மேஜையின் முனைகளில் அமரக்கூடாது. அப்படி அமர்ந்தால், வாழ்க்கைத் துணை அமைவது அல்லது அவர்களுக்கு திருமணமாவதே கஷ்டமாக இருக்குமாம்.

கூரை நம்பிக்கை
ஜெர்மனியில் உள்ள ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை என்னவெனில், ஒரு வீட்டில் மரணிக்க முடியாமல் யாரேனும் ஒருவர் இழுத்துக் கொண்டிருக்கும் போது, வீட்டுக் கூரையில் இருந்து மூன்று ஓடுகளை எடுப்பதன் மூலம், எளிதில் சொர்க்கத்திற்கு செல்வார்களாம்.

வெள்ளை நிற நம்பிக்கை
சீனாவில், வெள்ளை நிறமானது துக்கம்/மரணத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. எனவே இங்கு நல்ல நிகழ்ச்சியின் போது, வெள்ளை நிறத்தில் பூக்களோ அல்லது வேறு ஏதேனும் அழைப்பிதழ்களோ அனுப்பமாட்டார்கள்.

நெருப்பு நம்பிக்கை
ரஷ்யாவில் நோய்வாய்ப்பட்ட மிருகங்களை முந்தைய நாள் நெருப்பால் எரிந்த இடத்தில் ஓட வைக்க வேண்டுமென்ற நம்பிக்கை ஒன்று உள்ளது.

சூயிங் கம் நம்பிக்கை
துருக்கியில், சூயிங் கம்மை இரவு நேரத்தில் சாப்பிடுவதற்கு முன் இருமுறை யோசித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இங்கு இரவில் சூயிங் கம்மை சாப்பிடுவது என்பது, இறந்த சடலத்தின் தசையை வாயில் போட்டு மெல்லுவதற்கு சமம் என மக்களால் நம்பப்படுகிறது.

திராட்சை நம்பிக்கை
ஸ்பெயினில் புத்தாண்டின் போது, இரவு 12 மணிக்கு 12 திராட்சைகளை சாப்பிட்டால், அந்த வருடத்தின் 12 மாதங்களும் நல்ல அதிர்ஷ்டமிக்கதாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

பறவை நம்பிக்கை
ரஷ்யாவில் உள்ள மற்றொரு மூட நம்பிக்கை, ஒரு பறவை ஒருவர் மீதோ, காரின் மீதோ அல்லது சொத்துக்களின் மீதோ மலங்கழித்தால், அவர்கள் நல்ல செல்வ செழிப்புடன் பணக்காரர் ஆவார்களாம்.



Click it and Unblock the Notifications
