இந்தியாவின் உளவுப்பிரிவுப் பற்றி இதுவரை நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இதைப் பிறரிடம் சொல்லாதே என்று சொல்லி சொல்லியே பல இடங்களில் பரவுகிற விஷயம் தான் ரகசியம். ரகசியமாக வைத்திருக்க வேண்டிய விஷயத்தை எங்கிருந்தோ எப்படியோ கசிந்து பரவியிருக்கும்.

ஆனால் நான் இப்படியெல்லாம் இல்லை ரகசியம் என்றால் ரகசியம் தான். அதை நான் யாருக்கும் சொல்லமாட்டேன். அதோடு அந்த ரகசியத்தை காக்க உயிரை கொடுக்க கூட தயங்கமாட்டேன் என்று சொல்கிறவர்களா நீங்கள் அப்படியானால் நீங்கள் இந்தியாவின் உளவு அமைப்பான Research and Analysis Wing (RAW)வில் பணிக்குச் சேரலாம்.

நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கிறவர்கள் மத்தியில் நீங்கள் போரிட வேண்டும். இந்தப் போர் ஆயுதங்களால் அல்ல புத்தியால் நடத்தபடும் போராக இருக்கும். இங்கே உங்களது சாதுர்யத்தால் வென்றிட வேண்டும். அதாவது நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

ரா உளவுப்பிரிவில் பணியாற்றுகிறவர்களின் விவரம் எப்போதும் ரகசியம் காக்கப்படும். இன்னார் இந்தப் பொறுப்பு வகிக்கிறார்கள் என்பது எப்போதும் வெளியிடப்படாது. ரா உளவுப் பிரிவைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விதிமுறைகள் :

விதிமுறைகள் :

ரா கடுமையான விதிமுறைகளை கொண்டிருக்கிறது. ரா பிரிவில் நீங்கள் வேலைக்கு சேர நினைத்தாலும் நீங்கள் கண்டிப்பாக சில காலம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.

Image Courtesy

அசைன்மெண்ட் :

அசைன்மெண்ட் :

ஒரு அசைன்மெண்ட்டுக்காக ரா பல நபர்களை நியமிக்கும். அந்த வேலை முடிந்தவுடன் புதிய அசைன்மெண்ட்டுக்கு புதிய ஆட்களை தேர்ந்தெடுப்பார்கள்.

வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் ரா உளவு அமைப்பின் கீழ் பணியாற்றிவிட்டு வேலை முடிந்ததும் தங்கள் வேலையினை தொடரச் சென்றிடுவார்கள்.

பணம் :

பணம் :

ரா அமைப்பில் பணியாற்றுவது என்பது மிகவும் உயர்ந்ததாகும். அதனாலேயே அதிக சம்பளம் கிடைக்க்கும் நாம் பணக்காரன் ஆகிடலாம் என்ற எண்ணத்துடன் சென்றால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

அவ்வளவு எளிதாக முறையற்ற வகையில் பணத்தை கொடுக்கல் வாங்கல் செய்ய முடியாது.

மிலிட்டிரி :

மிலிட்டிரி :

ரா அமைப்பில் பணியாற்றுகிறவர்கள் மிலிட்டிரி ட்ரைனிங் எடுத்தவர்களாக இருப்பார்கள். நாட்டை காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவர்களுக்கு இருப்பதால் ராணுவம் குறித்தும் அவர்களது பயிற்சி முறைகள் குறித்தும் இவர்களுக்கு விவரிக்கப்படுகிறது.

அத்துடன் இவர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ரகசியம் :

ரகசியம் :

ரா அமைப்பில் பணியாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்களது விருப்பத்தைக் கூட ரகசியமாக வைத்திருங்கள். அதனை வெளியில் சொல்வது உங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்வது போன்றவை செய்யவே கூடாது.

பயிற்சிகள் :

பயிற்சிகள் :

ரா உளவு அமைப்பில் உங்களது உடற் திறனையும், மனத்திறனை சோதிக்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். வரப்போகிற பிரச்சனையை எதிர்கொள்ள உடலளவிலும் மனதளவிலும் திடமாக நீங்கள் இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் அது.

24*7 :

24*7 :

ரா வேலை என்பது அலுவல் வேலையாகவோ அல்லது காலையில் சென்று மாலையில் திரும்பிடும் வேலையாகவோ இருக்காது. அந்த வேலைக்காக 24 மணி நேரமும் உங்களை தயாருடன் வைத்திருக்க வேண்டும்.

எங்கேயிருக்கிறேன் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற தகவலைக்கூட யாரிடமும் பகிரக்கூடாது. குறிப்பாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள்.

விளையாட்டு :

விளையாட்டு :

விளையாட்டு வீரர்களாக இருந்தால் அவர்களுக்கு ரா வில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஏனென்றால் இங்கே பணியாற்றுபவர்கள் உடலளவில் தகுதியாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

மொழிகள் :

மொழிகள் :

ரா உளவிப்பிரிவில் பணியாற்றுவதற்கு அடிப்படை தகுதிகளில் ஒன்று மொழிகள். இவர்கள் பல்வேறு நாட்டினரின் பல்வேறு மொழி பேசும் மக்களிடையே பேசி பழக வேண்டியிருப்பதால் கண்டிப்பாக பல மொழிகள் கற்று வைத்திருப்பது அவசியம். அவற்றில் சில வெளிநாட்டு மொழிகளும் இருந்தால் கூடுதல் சிறப்பு.

தகுதிகள் :

தகுதிகள் :

ரா அமைப்பில் சேர நினைக்கிறவர்கள் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒருபட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் மீது எவ்வித கிரிமினல் குற்ற வழக்கும் இருக்கக் கூடாது.

எப்பிரிவில் பணியாற்றுகிறவர்களும் இதில் சேரலாம்.

சினிமா :

சினிமா :

கதாநயகன் ரா அமைப்பில் பணியாற்றுவது போன்ற காட்சிகள் கொண்ட ஏரளமான திரைப்படங்கள் வந்திருக்கிறது. அப்படி காண்பிக்கப்பட்டதற்கும் உண்மைக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு.

சினிமாவில் காண்பிப்பது போல விலையுயர்ந்த கார், ஹைஃப்பையான தொழில்நுட்பங்கள் நிறைந்த கேட்ஜெட்ஸ் அதோடு கூடவே டிடெக்டிவ் பெண் என்று எதுவும் இருக்காது. அவர்கள் எந்த சூழ்நிலையிலும் தனியாக சமாளிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சீனா :

சீனா :

இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் இருக்கும் சிக்கிம் பகுதியை சீனா ஆக்கிரமிக்க நினைத்தது. அதனை பல வழிகளில் அடைய முயற்சித்தது சீனா.

ஆனால் ரா அமைப்பின் திறமையான செயல்பாடுகளில் அவர்களின் திட்டத்தை முன்னரே அறிந்து சிக்கிம் மாநிலத்தை காப்பாற்றினர்.

ஆரம்பம் :

ஆரம்பம் :

ரா உளவு அமைப்பு 1968 ஆம் ஆண்டு ராமேஷ்வர் நாத் கோ என்பவரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இவர் அந்தக் காலத்திலேயே மிகப்பெரிய உளவாளியாக இருந்தார்.இவரது தலைமையின் கீழ் இந்தியாவிற்கு எதிரான பல்வேறு செயல்கள் முறியடிக்கப்பட்டன.

Image Courtesy

துப்பாக்கி :

துப்பாக்கி :

ரா உளவுப்பிரிவில் பணியாற்றுபவர்கள் தங்களது புத்தியை மட்டுமே ஆயுதமாக பயன்படுத்த முடியும். அவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட மாட்டாது. இவர்களுக்கென்ற சீருடை எதுவும் கிடையாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Unknown facts about RAW

Unknown facts about RAW
Story first published: Sunday, October 22, 2017, 14:02 [IST]