தில்லுக்கு துட்டு: முடிஞ்சா இந்த 25 வெப்சைட்கள ஒருதடவ செக் பண்ணிட்டு வாங்க!

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் வேடிக்கையான நபரா? நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு எழுந்து சுடுகாட்டிற்கு போக கூறினாலும், அசால்ட்டு காட்டுவேன் என அறைகூவலிடும் நபராக இருந்தால், நீங்கள் இந்த 25 தளங்களையும் போய் பார்க்கலாம். இது உங்கள் சுய முடிவாக மட்டுமே இருக்க வேண்டும். நாங்கள் யாரையும் வற்புறுத்தவில்லை.

இவற்றில் சில தளங்கள் வேடிக்கையானவை. ஆனால், சில தளங்கள் பயங்கரமானவை. சில தளங்களில் இருக்கும் பதிவுகள் மனரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்தலாம். சிலவன உங்கள் கணினியிலும் பாதிப்பை உண்டாக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#25 மலம்

#25 மலம்

ratemypoo.com எனும் இந்த இணையதளம் ஒருவரது மலத்திற்கு ரேட்டிங் செய்யும் தளமாகும். நடக்கும் போது சாலையில் மலத்தை கண்டாலே குமட்டிக் கொண்டு வரும். இதை தேடி சென்று இணையத்தளத்தில் பார்க்கவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை காணும் போது குடலை பிரட்டிக் கொண்டு வருகிறது.

என்ன ரெடியா? பார்க்க போறீங்களா?

Source: http://www.ratemypoo.com/

#24 பிறப்பு, இறப்பு

#24 பிறப்பு, இறப்பு

உலகில் புதிதாக கால் பதிக்கும் உயிர்களையும், உலகைவிட்டு பிரியும் உயிர்களையும் நீங்கள் இங்கே காணலாம். எந்தெந்த பகுதியில் பிறப்பு, இறப்பு இந்த நொடி நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை காட்டும் இணையத்தளம்.

Source: http://worldbirthsanddeaths.com/

#23 மரண எண்ணிக்கை!

#23 மரண எண்ணிக்கை!

நீங்கள் எப்போது இறப்பீர்கள் என என்றாவது யோசித்ததுண்டா? இங்கே கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்கள பதில் கூறுங்கள், இந்த தளம் உங்களது இறப்பு எப்போது நிகழ்வும் என கூறும். மேலும், உங்கள இறப்பு எதை சார்ந்து, எப்படியாக அமையும் என்றும் இந்த தளம் கூறும்.

Source: http://deathdate.info/

#22 குத்திக் கிழிக்கும்!

#22 குத்திக் கிழிக்கும்!

இந்த தளம் மிகவும் கொடூரமானது. கனடாவின் சட்டத்திற்கு எதிராக இருந்த காரணத்தால், இந்த தளத்தின் உரிமையாளரை கைது செய்துவிட்டனர்.

ஏன்? என்று கேட்கிறீர்களா? இந்த நபர் ரியல் லைப் கொலைகளை இந்த தளத்தில் காட்டிக் கொண்டிருந்தார்.

Source: http://www.bestgore.com/

#21 ஜோசப் இ. டன்கன்

#21 ஜோசப் இ. டன்கன்

ஜோசப் இ. டன்கன் எனும் சீரியல் கில்லரை பற்றிய தளம் இது. இவன் இப்போது மரண தண்டனை கைதியாக வாழ்ந்து வருகிறான். இதில், இவனது கடைசி நேர கருத்துக்கள் இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Source: http://5nchronicles.blogspot.com/

#20 கொலம்பைன் சைட்

#20 கொலம்பைன் சைட்

கொலம்பைன் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு நிகழ்வை பற்றியும், அதில் உயிரிழந்தவர்கள் பற்றியும், அந்த துப்பாக்கி சூடு நடத்திய நபர், ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் என எல்லா தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Source: http://www.acolumbinesite.com/

#19 973-eht-namuh-973

#19 973-eht-namuh-973

இதை ஷாக்கிங் சைட் என்பதை தாண்டி, ஒரு கிறுக்குத்தனமாக இணையதளம் என்று தான் கூறவேண்டும். பல கிறுக்குத்தனங்களின் தொகுப்பாக இருக்கிறது இந்த இணையத்தளம்.

Source: http://973-eht-namuh-973.com/coloured%20site/start/i_thought/1.htm

#18 Zombo

#18 Zombo

நீங்கள் இங்கே என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த தளம் மிக சுத்தமாக ஒன்றுமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. இந்த தளம் லோட் ஆனதும், ஒரு குரல் இங்கே யாவும் சாத்தியம் என கூறும். மிகவும் குழப்பமான தளம் இது.

Source: http://www.zombo.com/

#17 hashima-island.co.uk

#17 hashima-island.co.uk

ஜப்பானில் இருக்கும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தீவிற்கு உங்களை அழைத்து செல்லும் தளம் தான் இது. கருப்பு வெள்ளையில் கொஞ்சம் பேய் படம் பார்ப்பது போன்ற உணர்வை அளிக்கும் இந்த தளம். இரண்டாம் உலக போரின் தாக்கத்தால் இப்படி உருக்குலைந்து இருக்கிறது.

Source: http://hashima-island.co.uk/

#16 சொர்கத்தின் கதவு!

#16 சொர்கத்தின் கதவு!

இது ஒரு வழிபாட்டு தளம். ஏலியன், வால் நட்சத்திரம் என திகிலூட்டும் இந்த தளம், உங்கள் கணினிக்கு உகந்தது அல்ல. இதன் மூலம் ஸ்பேம் அல்லது வைரஸ் பரவலாம்.

Source: http://www.heavensgate.com/

#15 ஜோடி

#15 ஜோடி

நீங்கள் இந்த பக்கத்தின் சோர்ஸ்-ஐ Ctrl + U அழுத்தி கண்டால், ஒரு நியூக்ளியர் பாமின் வரைப்படம் காண்பிக்கும். இப்போ நீங்கள் ஒரு தேசிய பாதுகாப்பு ஏஜன்சி நடத்த தயாராகலாம்.

http://wwwwwwwww.jodi.org/

#14 தூக்கு தண்டனை!

#14 தூக்கு தண்டனை!

கடைசியாக தூக்கு தண்டனை பெற்ற டெக்சாஸ் கைதிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய பக்கம் இது. மரண தண்டனை என்பது இப்போது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறது. அரசாங்கம் இப்படி வெளிப்படையாக இருப்பதும் ஒரு வகையில் நன்மை தான். எந்த தவறு செய்தால் மரண தண்டனை கிடைக்கும் என்றால், எவரும் அதை செய்ய முயற்சிக்க மாட்டார்கள்.

Source: http://www.tdcj.state.tx.us/death_row/dr_executed_offenders.html

#12 லைவ் லீக்!

#12 லைவ் லீக்!

மிகவும் குழப்பமான, தொல்லை கொடுக்கும் வகையிலான வீடியோக்களை இவர்கள் பதிவு செய்து வருகிறார்கள். சில கொலை சார்ந்த வீடியோக்கள் எல்லாம் கூட இவர்கள் பதிவிட்டுள்ளனர்.

Source: liveleak.com

#11 YYYYYY

#11 YYYYYY

நாம் கண்ட விசித்திரமான தளங்களில் இதுவும் ஒன்று. இது அதனுள் இருக்கும் கன்டன்ட் காரணமாக க்ரீப்பி என கூற முடியாது. முற்றிலும் ஒரு முட்டாள்தனமான தளமாக இருக்கிறது.

Source: http://www.yyyyyyy.info/

#10 99 அறைகள்!

#10 99 அறைகள்!

இது ஒரு கேம் போன்ற தளம். நீங்கள் ஒவ்வொரு அறையை க்ளிக் செய்யும் போது ஒரு சப்தம் வரும். ஒவ்வொரு சப்தமும் வேற லெவலில் இருக்கும். விளையாடி தான் பாருங்களேன்.

Source: http://cdn.99rooms.com/99rooms.html

#09 நரமாமிச தளம்!

#09 நரமாமிச தளம்!

இது ஒரு இணையதளம் அல்ல. இது பல தளங்களின் தொகுப்பு, இங்கே நரமாமிசம் பற்றி விவாதம் நடத்துகிறார்கள். சில சமயம் நரமாமிச சம்பவங்களில் சிக்கிய நபர்களின் படங்களும் இங்கே பதிவு செய்கிறார்கள். மிகவும் அசௌகரியமான தளமிது.

#08 சூப்பர் பேட் (Super Bad)

#08 சூப்பர் பேட் (Super Bad)

நீங்கள் பிரமையை விரும்பும் நபரா? வினோதங்கள் என்றால் பிடிக்குமா? இன்டர்நெட்டில் இருக்கும் ஒரு வித்தியாசமான தளம் இது. இங்கே எந்த லிங்கும் இருக்காது. நீங்களாக எங்கேனும் க்ளிக் செய்தா, அது எங்கேனும் செல்லும். ஒரு ரேண்டம் லிங்க் சைட்.

Source: http://www.superbad.com/

#07 செண்டிமெண்டல் கார்ப்

#07 செண்டிமெண்டல் கார்ப்

சற்றே விசித்திரமான தளம். ஒவ்வொரு லெவலாக நீங்கள் தாண்டி போக, ஒரு படம் அல்லது வீடியோ தோன்றும். இது பெரிதாக உதவாது எனிலும், கொஞ்சம் க்ரேசியாக இருக்கும்.

Source: http://www.sentimentalcorp.org/

#06 கடைசி வார்த்தைகள்...

#06 கடைசி வார்த்தைகள்...

இந்த தளத்தில் விமான விபத்து ஏற்பட்டு, அதில் பதிவான கடைசி வார்த்தைகளின் பதிவுகளை போஸ்ட் செய்துள்ளனர். பல மோசமான இடங்கள், மோசமான விபத்துக்கள், யார் என்றே தெரியாத நபரின் குரல், உங்கள் உணர்வுகளோடு விளையாடும் தளம்.

Source: planecrashinfo.com

#05 Run the Gauntlet

#05 Run the Gauntlet

மோசமான வீடியோக்களின் சேகரிப்பு. காணும் முன்பே, இது மோசமான வீடியோக்கள் என கூறிவிட்டு தான் காண்பிக்கிறார்கள். இதனால் மனநல தாக்கம், கெட்ட கனவுகள் கூட வரலாம். எலும்புகளை உடைப்பது, கொல்வது என எல்லையற்ற கொடூரமான வீடியோக்களின் தொகுப்பு.

Source: http://runthegauntlet.org

Image: pixabay

#04 இறந்து பிறந்த குழந்தைகள்!

#04 இறந்து பிறந்த குழந்தைகள்!

இறந்து பிறந்த குழந்தைகளின் தொகுப்பு கொண்ட இணையதளம். புகைப்பட தொகுப்பு தான் எனிலும், மனதுக்குள் சோகத்தை ஏற்படுத்தும் படங்கள் அவை. இளகிய மனம் கொண்டவர்கள் இந்த தளத்திற்கு செல்ல வேண்டாம்.

Source: stillborn-angels.memory-of.com

Image : pixabay

#03 ஒயிட் எனாமல்!

#03 ஒயிட் எனாமல்!

பைத்தியங்களின் புகலிடம். கிரேசியான வீடுகளுக்கு விர்சுவல் டூர் அழைத்து செல்லும். சில சமயம் வித்தியாசமாகவும், சில சமயம் அச்சுறுத்தலாகவும் இருக்கும்.

Source:whiteenamel.com

Image Credit: commons.wikimedia

#02 ஸ்கைவே பிரிட்ஜ்

#02 ஸ்கைவே பிரிட்ஜ்

ஸ்கைவே பிரிட்ஜ், ப்ளோரிடாவின் சூசைடு ஸ்பாட். இங்கிருந்து குதித்து பலர் இறந்துள்ளனர். தற்கொலைக்கு முயற்சித்த பலரது வீடியோ காட்சிகள் இங்கே பதிவாகியுள்ளன. மனதை குழப்பும் தளம்.

Source: http://www.skywaybridge.com/

#01 அழுகிய

#01 அழுகிய

#01 அழுகிய

நாம் இதுவரை கண்டத்தில் உச்சம் இது தான். பல நாடுகளில் இது தடைசெய்யப்பட்டுள்ளது.இரத்தமும், சதையும் சிதறிக்கிடக்கும் தளம். இந்த தளங்களை எல்லாம் நீங்கள் காணவேண்டும் என்றால் உங்கள் சுய துணிவுடன் காணுங்கள். இது வெறும் பட்டியலே. சில தளங்கள் உங்கள் கணினியை கூட பாதிக்கலாம்.

Source : http://rotten.com/

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 25: The Most Weirdest Websites You Won’t Believe Actually Exist!

Top 25: The Most Weirdest Websites You Won’t Believe Actually Exist!
Subscribe Newsletter