Latest Updates
-
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இன்று! ஒரே நாளில் "சிரிப்பு" பிறந்த தினம், இறந்த தினம்!
ஆம்! இன்று தான் வைகைப்புயல் வடிவேலு பிறந்த தினம், ஆச்சி என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டு வந்து மனோரமா அவர்கள் இறந்த தினம்.
ஆம்! இன்று தான் வைகைப்புயல் வடிவேலு பிறந்த தினம், ஆச்சி என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டு வந்து மனோரமா அவர்கள் இறந்த தினம்.
இவர்கள் இருவரின் பெயர்களும் தமிழக திரையுலகில் நீங்கா இடம் பெறும் என்பது ஊர்ஜிதமானது. இருவரும் பெரிதாக பள்ளிப்படித்து பயிலாதவர்கள்.
ஆனால், வாழ்க்கையை நன்கு பயின்றவர்கள். சிறுவயதிலேயே வறுமையின் பிடியில் இருந்து திரையுலகில் நுழைந்து கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொடிக்கட்டி பறந்த நடிப்புலகின் ஜாம்பவான்கள்.
வெறுமென நகைச்சுவை கதாப்பாத்திரம் என்பதை தாண்டி வடிவேலு, மனோரமா இருவர் மத்தியிலும் சில கூடுதல் கலை முகங்களும் இருக்கின்றன. இருவரும் நன்கு பாடல் பாடும் திறன் பெற்றவர்கள். குணச்சித்திர வேடங்களில் பட்டையை கிளப்பும் கில்லாடிகள்.
இன்று, இந்த நாள் அந்த வருடம் - அக்டோபர் 10!

பிறப்பு!
வைகை புயல் வடிவேலு பிறந்ததினம்!
- பள்ளி படிப்பு அனுபவமே இல்லாதவர்!
- சிறு வயது முதலே நண்பர்களுடன் சேர்ந்த நாடகங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர்.
- எதிர்பாராத அப்பாவின் மரணத்தால், கண்ணாடி ஃபிரேம் மாட்டும் கடையில் வேலை செய்ய துவங்கினார்.
- பின்னர் நடிகர் ராஜ்கிரண் வீட்டிலும், அலுவலகத்திலும் வேலை செய்து வந்த வடிவேலு, அவரது என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரைப்படத்தில் நடிக்க துவங்கினார்.
- இவரது இயற்பெயர் கோபிசந்தா!
- 6 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் சிறுவயதில் பலகாரம் சுட்டு விற்பனை செய்து வந்துள்ளார்.
- தனது 12ஆவது அகவையில் திரையுலகில் நடிக்க துவங்கினார். ஆரம்பக் காலத்தில் இவரை பள்ளத்தூர் பாப்பா என அழைத்து வந்தனர்.
- ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர் நடிகை மனோரமா!
- தனது நாடக கம்பெனியை சேர்ந்த எம்.எஸ் ராமநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- இவர்களுக்கு பூபதி என்ற மகன் பிறந்தார். திருமணமான இரண்டே ஆண்டுகளில் மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

மறைவு!
மனோரமா இறந்த தினம்!

கிரெகொரியின் நாட்காட்டி!
1582 - கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகமானதைஎடுத்தும், இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய காலண்டரில் இந்த ஆண்டில் இந்நாள் (அக்டோபர்) இடம்பெறவில்லை.

விடுதலை!
1868 - லாடெமஹாகுவாவில் கார்லோஸ் செஸ்பெடஸ் தலைமையில் கியூபாவின் முதலாவது விடுதலைப் பிரதேசம் அறிவிக்கப்பட்டது.
1970 - பீஜி, ஐக்கிய இராஜ்ஜியதிடம் இருந்து விடுதலை பெற்றது.
1911 - வூச்சாங் எழுச்சி உருவாகி, சிங் வம்சத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசு உருவாவதற்கு வழிவகுத்த தினம் இன்று.

அசம்பாவிதம்!
1780 - கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.
1957 - உலகின் முதலாவது அணுவுலை விபத்து ஐக்கிய இராஜ்ஜியத்தின் கம்ப்றியா என்ற இடத்தில் ஏற்பட்டது.
1986 - எல் சல்வடோரின் சான் சல்வடோர் நகரில் உண்டான 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் காரணமாக 1,500 பேர் உயிரிழந்தனர்.

போர்!
1943 - II ஆம் உலகப் போர்: ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த சிங்கப்பூர் துறைமுகம் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தனர் என்ற காரணம் காட்டி 57 அப்பாவிகளை ஜப்பானிய அரசு கைது செய்து சித்திரவதை செய்தது.
1944 - II ஆம் உலகப் போர்: 800 ஜிப்சி சிறுவர்கள் அவுஸ்விச் வதைமுகாமில் படுகொலை செய்யப்பட்டனர்.



Click it and Unblock the Notifications
