சாணக்கியர் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சந்திரகுப்த மௌரியரின் முதன்மை அமைச்சராகவும், வழிகாட்டியாகவும் இருந்து, மிகப்பெரிய மௌரிய பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர் தான் சாணக்கியர். இவருக்கு கௌடில்யர், விஷ்ணுகுப்தர் போன்ற பெயர்களும் உண்டு. இவர் பொருளியலின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார்.

இந்திய வரலாற்றிலேயே இவரைப் போன்ற சிறந்த அரசியல் ஆலோசகர் வேறு யாரும் இருக்க முடியாது. பெண்களைப் பற்றிய இவரது சிந்தனை பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். இக்கட்டுரையில் சாணக்கியர் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தகவல் #1

தகவல் #1

பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர் தான் சாணக்கியர். இவர் பிறக்கும் போது பற்களுடன் பிறந்தவர். துறவி ஒருவர், இவரது வீட்டிற்கு தானம் கேட்டு வரும் போது, சாணக்கியரின் தனித்துவ நிலையை அறிந்து, அந்த துறவி சாணக்கியரின் தந்தையிடம், இக்குழந்தை உலகே வியக்கும் வண்ணம் மன்னராகும் என்று கூறினார். ஆனால் சாணக்கியரின் தந்தையோ, வேறொரு திட்டத்தைக் கொண்டிருந்தார். தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தகவல் #2

தகவல் #2

ஆசிரியரான சாணக்கியரின் தந்தை, தனது மகனுக்கு இப்படி ஒரு ஆபத்தான வாழ்வு வேண்டாம் என நினைத்து, இருந்த பற்களை உடனே பிடுங்கிவிட்டார். இதைக் கண்ட துறவி, இக்குழந்தை மன்னராகாவிட்டாலும், ஒரு ஆட்சியை நியமிப்பவனாக ஆவான் என்று கூறினார்.

தகவல் #3

தகவல் #3

சாணக்கியர் தனது படிப்பை பழம்பெரும் தக்ஷஷீலா பல்கலைகழகத்தில் முடித்தார். இந்த இடம் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது. அப்போது இந்த பல்கலைகழகம் தான் உலகிலேயே மிகச்சிறந்த பாடசாலையாக இருந்தது.

தகவல் #4

தகவல் #4

அலெக்சாண்டர் இந்தியாவைப் படையெடுத்து வரும் போது, அப்படையை எதிர்த்துப் போராடி இந்தியாவுடன் இணைத்தவர். அதுவும் தனது 19 வயதிலேயே சந்திரகுப்த மௌரியரின் உதவியுடன் மிகப்பெரிய இந்திய பேரரசை உருவாக்கியவர் சாணக்கியர்.

தகவல் #5

தகவல் #5

எதிரிகளை வீழ்த்துவதற்கு சிறுமிகளைக் கொண்டு ஒரு படையை சாணக்கியர் உருவாக்கினார். இந்த சிறுமிகளுக்கு சிறு வயதில் இருந்து பூப்பெய்தும் வரை தினமும் சிறிய அளவில் விஷம் கொடுக்கப்பட்டு வந்தது. இதனால் அச்சிறுமிகள் பூப்பெய்தியப் பின் எதிரிகளை அழிக்கும் விஷக்கன்னிகளானார்கள்.

இந்த கன்னிப் பெண்கள் யாருக்கு முத்தம் கொடுத்தாலும், அவர்கள் இறந்துவிடுவர், அந்த அளவில் ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் விஷம் பயங்கர அளவில் இருந்தது. இப்படியும் எதிரிகளை அழிக்க சாணக்கியர் தந்திரமாக செயல்பட்டார்.

தகவல் #6

தகவல் #6

சாணக்கியரின் படி, ஒரு நல்ல மனைவி காலையில் தாய் போன்று சேவைகளையும், பகலில் சகோதரி போன்று அன்பையும், இரவில் வேசிகளைப் போன்றும் நடந்து கொள்ள வேண்டுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Should Know About Chanakya

Here are some things you should know about chanakya's life. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter