Latest Updates
-
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
இந்தியாவின் சர்ச்சைக்குரிய 5 நீதிபதிகள்!
மார்கண்டேய கட்ஜு முதல் பிரதீபா ராணி வரை இந்தியாவின் சர்ச்சைக்குரிய டாப் ஐந்து நீதிபதிகள்!
உலகிலேயே பொய் சொல்லக் கூடாது என கூறப்படுவது, மருத்துவரிடமும், நீதிபதியிடமும் தான். காரணம் இவர்கள் தான் பல உயிர்களை காக்கின்றனர்.
இந்தியாவில் பிரதமர், ஜனாதிபதி என உயர் பதிவி வகிக்கும் நபர்களையும் கேள்வி கேட்கும் உரிமை நீதிபதிகளுக்கு மட்டும் தான் இருக்கிறது.
இத்தகைய நீதித்துறையில் பணியாற்றி வரும் சில உயர்வான நீதிபதிகளும் கூட சில சமயங்களில் தவறான அல்லது அழுத்தமான கருத்துக்கள் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்...

மார்கண்டேய கட்ஜூ!
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் மார்கண்டேய கட்ஜூ இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் பலமுறை சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.
ஒருமுறை இந்தியர்களில் 90% முட்டாள்கள் என கருத்து தெரிவித்தார். சாதி அடிப்படையிலான இட ஒதிக்கீட்டை ரத்து செய்ய கூறினார். இதற்கு பல அமைப்புகள் எதிர் கருத்து தெரிவித்தனர்.

நீதிபதி டி.எஸ். தாக்கூர்!
இவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நீதித்துறை வலிமைப்படுத்த பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் முக்கியமாக நீதிபதிகளை பணியமர்த்துவதில் பிரதம மந்திரி மோடி அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.
புதுடெல்லி முதலவர் மற்றும் நீதிபதிகள் கூட்டத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

நீதிபதி கர்ணன்!
இவர் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்தித்துள்ளார்.இவர் தலைமை நீதிபதிகளுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். நீதித்துறை மற்றும் நிர்வாக துறையில் இவர் பணியாற்ற தலைமை நீதிபதி அமர்வு குழு தடை விதித்தது.
பிற நீதிபதிகளுக்கு தண்டனை அளித்ததால் இவர் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளார் என அந்த அமர்வு குழு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து அமர்வு குழு நீதிபதி கர்ணனை கைது செய்ய உத்தரவிட்டது.

நீதிபதி மகேஷ் சந்திர சர்மா!
இவர் பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். மேலும், பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஓய்வு பெறும் நாளில் பரிந்துரை செய்தார்.
மேலும், இவர் மயில் பிரம்மாச்சாரி என கூறிய கருத்து சமூக தளங்களில் மிகவும் வைரலானது.

நீதிபதி பிரதிபா ராணி!
ஜவர்ஹலால் பல்கலைகழக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாருக்கு பிணை உத்தரவு கொடுத்து இவர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.
மாணவர்களின் போராட்ட கோஷங்களை தொற்று நோய் என்றும், இது சமூக விரோத மனப்பான்மை என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவு செய்திருந்தார்.



Click it and Unblock the Notifications
