For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மேட்டர்க்கு எல்லாம் சட்டம் போடுவாங்களா?உலகெங்கும் போடப்பட்ட காமெடி சட்டங்கள்!!

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இயக்கப்பட்டுள்ள காமெடி சட்டங்களை இந்த கட்டுரையில் காணலாம்.

By Hemalatha
|

சட்டம் என்பது மக்களை காப்பதற்காகவும், நாட்டில் ஒழுங்குத்தன்மை நிலை நாட்டவும்தான் ஒரு நாட்டில் போடப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்துக்காக எல்லாம் சட்டம் போடுவாங்களா என ஆச்சரியப்படும் வகையில் கேள்வி கேக்கும் அளவிற்கு உலகத்தில் பல விஷயங்கள் நடக்கின்றன. இறப்பதற்கு தடை, புருவம் சுருக்கத் தடை என ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியான வேடிக்கையான சட்டங்கள் போட்டிருக்கின்றன.

இவற்றை அவர்கள் காமெடியாக எடுத்துக் கொண்டாலும் உண்மையில் அவைகளால் ஏதாவது ப்ரயோசனம் இருக்க என்பது தெரியாது. அந்த மாதிரியான காமெடியான வி நோதமான சட்டங்கள் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இத்தாலி :

இத்தாலி :

நீங்க இத்தாலி நாட்டிற்கு சென்றால் ஈ என பல்லை காண்பித்து சிரித்தபடியே இருக்க வேண்டும் என்றால் எப்படி இருக்கும். ஆமாங்க. ஏன்னா அங்கே இத்தாலியிலுள்ள மிலன் என்ற நகரத்தில் புருவங்களை சுருக்கக் கூடாது.

புருவங்களை சுருக்கி பார்ப்பது அவமதிப்புக் குற்றமாகும். மருத்துவ மனைகள் மற்றும் இறுதிச் சடங்கு நடக்கும் இடங்களில் மட்டும் விதி விலக்கு.

ஆஸ்திரேலியா :

ஆஸ்திரேலியா :

ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மா நிலத்தில் வீட்டிலுள்ள பல்பை மாற்ற உங்களுக்கு அனுமதி கிடையாது. முறைப்படி எலக்ட்ரீஷியன் லைசன்ஸ் வாங்கிருந்தால் மட்டுமே நீங்கள் பல்பை மாற்றலாம். இல்லையென்ரால் எலக்ட்ரீஷியன் வர வரைக்கும் இருட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியதுதான்.

ஸ்பெய்ன் :

ஸ்பெய்ன் :

ஸ்பெயினில் போட்ட சட்டத்தைக் கேட்டா அப்டியே நீங்க ஷாக் ஆவீங்க. ஸ்பெயினிலுள்ள அண்டாலௌசியன் என்ற ஊரில் மனிதர்கள் யாரும் இறக்கக் கூடாது என்ற சட்டம் இருக்கிறது. அரசு ஒரு நிலத்தை வாங்கி கல்லறை கட்டும் வரை அந்த ஊரில் வசிக்கும் 40000 பேரில் யாரும் இறக்கக் கூடாதாம். இதெல்லாம் பாவம் மக்களே!!

ப்ரேசில் :

ப்ரேசில் :

இதே சட்டம் 2005 ஆம் ஆண்டு பல நாடுகளிலும் கொண்டு வரப்பட்டுள்ளதாம். தங்கள் உடல நலத்தை சரியாக பாதுகாக்காதவர்கள்தான் அதிகமாக உடல் நலம் குன்றி இறக்கிறார்கள். இதனால் கல்லறை கட்ட இடபற்றாக்குறை உண்டாகிறது. ஆகவே இது குற்றமாகும். என்று ப்ரேசிலிலுள்ள பிரிடிபா மிரின் என்ற ஊரிலும் இயக்கப்பட்டுள்ளது.

சீனா :

சீனா :

சீனாவில் போட்ட இந்த சட்டம் கொஞ்சம் காமெடியாகத்தான் இருக்கும். சீனாவிலுள்ள திபெத்தியன் துறவிகள் சீன அரசைக் கேக்காமல் மறுபிறவி எடுக்கக் கூடாது. இதையெல்லாம் நம்ம ஊர்ல கேட்டா சிரிச்சுடுவாய்ங்க..

இத்தாலி- டொரினோ :

இத்தாலி- டொரினோ :

இத்தாலியில் உள்ல டொரினோ என்ற நகரத்தில் உங்கள் நாயை ஒரு நாளைக்கு 3 தடவையாவது வாக்கிங்க் கூட்டிட்டு போகலைன்னா அது சட்டத்திற்கு புறம்பானதாம்.

மத்திய போலந்து :

மத்திய போலந்து :

மத்திய போலந்தில் டஸ்ஜின் எனப்படும் சிறு நகரத்தில் போஹ் எனப்படும் குழந்தைகளின் விருப்பமான கார்ட்டூன் கேரக்டரான கரடி பொம்மை தடை செய்யப்பட்டுள்ளது. இது அரை நிர்வாணமாக இந்த பொம்மையை சித்தரிப்பதால் குழந்தைகள் பார்க்கத் தகாதது என்ரு விவாதம் செய்கிறதாம் அரசு.

கொலம்பியா :

கொலம்பியா :

கொலம்பியாவில் உள்ள ஐகோனோஞ்சோ என்னும் ஊரில் யாரையும் யாரும் சபிப்பதோ, கெட்ட வார்த்தையில் திட்டுவதோ அல்லது குறை சொல்வதோ சட்டப்படி குற்றமாகும். நம்ம ஊர்ல பாட்டே எடுக்கறாங்களே என்ன சொல்ல...

 இங்கிலாந்து :

இங்கிலாந்து :

இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான வேடிக்கையான சட்டம் இதுவாகத்தான் இருக்கும். பொதுமக்கள் பாராளுமன்றத்தில் இறப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் பாராளுமன்றம் போன்ற மதிப்பு மிக்க இடங்களில் யார் இறந்தாலும் அவர்களை அரசு மரியாதையுடன்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்பதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஃப்லிப்பைன்ஸ் :

ஃப்லிப்பைன்ஸ் :

பிலிப்பைன்ஸின் தலை நகரமான மணிலாவில் அமெரிக்க நடிகையான க்ளெய்ர் டேன்ஸின் படங்கள் திரையிடப்படுவதை தடை செய்யப்பட்டுள்ளது. அவரது அவமரியாதையான இன்டர்வியூதான் காரணம் என சொல்கிறார்கள்.

சவுதி அரேபியா :

சவுதி அரேபியா :

சவுதி அரேபியாவில் ஹோட்டலிலுள்ல நீச்சல் குளத்தையோ, ஸ்பா வையோ பெண்கள் உபயோகப்படுத்தினாம் சட்டப்படி குற்றம். அரேபிய நாடுகளில் பெண்களுக்கான கட்டுப்பாடுகம் நிறைய இருக்கின்றன. கார் ஓட்டக் கூடாது, ஓட்டு போடக் கூடாது, ஃபேஷன் இதழ்கள் படிக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் உண்டு.

ஹவாய் :

ஹவாய் :

ஹவாய் ஊரில் கொஞ்சம் வித்யாசமான சட்டம். நைட் சத்தமா பாட அங்கே அனுமதியில்லை. சாயங்காஅலம் 7 மணி ஆனப்புறம் பின்னாடி நம்ம மீசை முருகேஷ் மாதிரி பாட ஆரம்பிச்சா அவ்ளோதான். புடிச்சு உள்ளே போட்ருவாங்க.

மெல்போர்ன் :

மெல்போர்ன் :

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரத்தில் இரவு 10 மணியிலிருந்து காலை 7 மணி வரை வீட்டில் வேக்குவம் க்ளீனர் பயன்படுத்தக் கூடாதாம். விடுமுறை நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 9 மணி வரை வாக்குவம் க்ளீனர் தொடக் கூடாதாம்.

 மெல்போர்ன் :

மெல்போர்ன் :

அதே மெல்போர்னில் ஆண்கள், பெண் ஆடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஸ்ட்ராப் இல்லாத பெண்கள் உடைகளை ஆண்கள் அணிந்து வரக் கூடாது என்ற முன்பிருந்த பழைய சட்டத்தை புதுப்பித்து இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.

 இத்தாலி- ஈபோலி :

இத்தாலி- ஈபோலி :

இத்தாலி ரொமான்ஸ் செய்வதற்காகவே எல்லாராலும் செல்லப்படும் நாடாகும். இதனால் சாலைகளில் ரொமான்ஸிற்கு பஞ்சமிருக்காது. இதனால் ஈபோலிஎன்ற ஊரில் வண்டியிலோ, அல்லது நடக்க நடக்கவோ முத்தம் பரிமாறிக் கொள்வது சட்டப்படி குற்றமாகும்.

இத்தாலி - கப்ரி :

இத்தாலி - கப்ரி :

இத்தாலி நாட்டில் கப்ரி என்னும் ஃப்லிப்- ஃப்லாப் என சொல்லப்படும் ரப்பர் செருப்பு அனுமதியில்லை. அதனை போட்டு நடக்கும்போது வரும் சத்தத்தால் இப்படி சட்டம் உண்டானதாம்.

இத்தாலி- மோன்ஜா

இத்தாலி- மோன்ஜா

இத்தாலியில் மிலனுக்கு அருகில் இருக்கும் ஊரான மோன்ஜா என்னும் நகரத்தில் கண்ணாடித் தோட்டியில் தங்க மீன்களை வளர்ப்பது சட்டப்படி தவறாகும்.

சிங்கப்பூர் :

சிங்கப்பூர் :

சிங்கப்பூர் போனா நீங்க வாங்கி வச்சிருக்கிற சூயிங்க் கம்மை வீட்டிலேயே வச்சுட்டு போயிடனும். ரோட்டில் சூயிங்க் மெல்லவும், துப்பவும் தடை செய்யப்பட்டுள்ளது. சாலையில் கம் துப்பினால் 500 டாலர் அபராதம்.

இங்கிலாந்து- லிம் ரீஜிஸ் :

இங்கிலாந்து- லிம் ரீஜிஸ் :

இங்கிலாந்தில் லிம் ரீஜிஸ் என்ற ஊரில் இறந்த விலாங்கு மீன்களைக் கொண்டு அடிக்கம் திருவிழா ஒன்று பல காலமாக நடந்துகொண்டிருந்தது. இப்போது அந்த மாதிரி மீனைக் கொண்டு அடிப்பது சட்டத்திற்கு புறம்பானது என சட்டம் வந்துவிட்டது.

பிரான்ஸ் :

பிரான்ஸ் :

பிரான்ஸிலுள்ள கௌலைன்ஸ் என்ற ஊரில் துப்புவது சட்டப்படி தவறு. ஸ்வைன் ஃப்ளூ வந்த போது அவங்க ஊரில் தடுக்க இந்த சட்டம் போடப்பட்டதாம்.

லண்டன் :

லண்டன் :

சாக்லேட் எல்லாருக்கும் பிடிக்காமல் இருக்காது. அதுவும் பெண்களுக்கு சாக்லேட் என்றால் உயிராகவே இருப்பார்கள். அதால்தானோ என்னவோ லண்டலின் பொது வாகனங்களில் பெண்கள் சாக்லேட் சாப்பிட்டால் தவறாம்.

லண்டன் :

லண்டன் :

அதேபோல், லண்டனில் சந்தேகத்திற்குரிய இடங்களில் நீங்கள் சால்மன் மீன்களை கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டால் அது சட்டப்படி தவறு என 1986 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

strange things banned around the world

strange things banned around the world
Desktop Bottom Promotion