மெர்சல், தௌலத், பேமானி போன்ற சென்னை தமிழ் சொற்களின் உண்மை அர்த்தம் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஏ மாமு... என்னா நைனா வூட்டுல சொல்லிட்டு வந்துட்டியா... சாம்பு மவனே... கெலம்பு... கெலம்பு... காத்து வரட்டும்... அமுக்கி வாசி... பீத்திக்காத... என்னும் எண்ணிலடங்காத வாக்கியங்கள் சென்னையை அடையாளப்படுத்தி வருகின்றன. இவற்றை பொத்தாம்பொதுவாக கொச்சை வார்த்தைகள் என நாம் கூறிவிட முடியாது.

ஒவ்வொரு மாகாண சொல் வழக்கில் வேறுபாடுகள் இருப்பது போல தான் சென்னை வழக்கும். கஸ்மாலம், பேமானி போன்றவை கொச்சை வார்த்தைகள் அல்ல, உருது, பெர்ஷியன், சமஸ்கிருதம் என வேறு மொழிகளில் இருந்து மருவிய சொற்கள். பல்வேறு மாநில மக்களின் கலப்பு கொண்டு இயங்கி வரும் சென்னை வழக்கில் இந்த சொற்கள் ஒன்றென கலந்து போயின.

இதோ! நீங்கள் கொச்சை அல்லது தீய சொற்கள் என எண்ணும் சென்னை வழக்கு சொற்களின் உண்மை அர்த்தங்கள் இவை தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேமானி!

பேமானி!

பேமானி என்பது Beiman எனும் பெர்சியன், உருது மொழியில் இருந்து வந்தது சொல் ஆகும். இது யார் ஒருவர் ஏமாற்றுகிறாரோ, நேர்மையற்று இருக்கிறாரோ அவரை குறிப்பது.

கஸ்மாலம்!

கஸ்மாலம்!

கஸ்மாலம் என்பது உண்மையில் சம்ஸ்கிருத மொழியில் இருந்து வந்த சொல், இது அழுக்கு, அருவருப்பை குறிக்கும் சொல் ஆகும்.

கூச்சு... / குந்து!

கூச்சு... / குந்து!

கூச்சு / குந்து என்பது தெலுங்கு, கன்னடா மொழி சொற்கள். இதற்கு கீழே உட்காரு என அர்த்தம்.

கம்மனாட்டி!

கம்மனாட்டி!

கம்மனாட்டி என்பது ஒரு சொல் அல்ல. இது ஆங்கில சொற்றொடரான "Come Here You Naughty" என்பதில் இருந்து மருவி வந்த சொல். ஆங்கிலோ-இந்தியர்கள் குறும்பு செய்யும் குழந்தைகளை இப்படி சொல்லி அழைப்பார்கள்.

நாஸ்தா!

நாஸ்தா!

நாஸ்தா என்பது உண்மையில் காலை உணவை குறிக்கும் இந்தி சொல்.

கைமா!

கைமா!

கைமா என்பது உருது மொழி சொல்லான கீமாவில் இருந்து மருவிய வார்த்தை. கீமா என்றால் துண்டுதுண்டாக வெட்டுதல்.

மெர்சல்!

மெர்சல்!

மெர்சல் என்றால் மிரளவைப்பது, ஆச்சரியம், அதிர்ந்து போவது போன்ற உணர்வை குறிக்கும் சொல் ஆகும்.

தௌலத்!

தௌலத்!

தௌலத் என்றால் வீரம் என்பதை குறிப்பது. உனக்கு என்ன அவ்வளவு தௌலத்தா... என்றால், உனக்கு என்ன அவ்வளவு வீரமா.. அவன்கிட்ட போய் முறைச்சுட்டு இருக்க... என கூறலாம்.

தாராத்துட்டான்...

தாராத்துட்டான்...

தாரைவார்த்துவிட்டான் என்பதே தாராத்துட்டான் என்பது ஆகும். ஒருவரிடம் ஒரு பொருளை தொலைப்பது/ தோற்பது, மானம் இழந்து வந்து நிற்கும் போது என கோபமாக இருக்கும் போது தாரத்துட்டு வந்து நிக்கிறான் என சென்னை வழக்கில் கூறுவார்.

ஜபூர் / ஜபுரு!

ஜபூர் / ஜபுரு!

ஜபூர்/ஜபுரு என்பது "ஜபுர்" என்னும் உருது மொழி சொல்லாகும். இதன் பொருள் வித்தை / ஜகஜ்ஜாலம் / மாயவித்தை. இதைஎ சென்னை வழக்கில் இழுத்து "ஜபுரு காட்டாதே" என கூறுகின்றனர். அதாவது ஒருவர் மாயஜால விஷயங்கள் அல்லது பொய்புரட்டு செய்யும் பொது "ஜபுரு காட்டாதே" என கூறுவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Strange Madras Slang Words and It's Meaning!

Strange Madras Slang Words and It's Meaning!
Story first published: Thursday, June 22, 2017, 10:40 [IST]
Subscribe Newsletter