Latest Updates
-
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இறந்தவர்களின் மூக்கு மற்றும் காதில் ஏன் பஞ்சு வைக்கப்படுகிறது? கருட புராணம் சொல்லும் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க.. -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும்
பில்லி, சூனியம், வசியம் யாருக்கு எல்லாம் பலிக்காது?
பில்லி, சூனியம் வசியம் எல்லாம் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொன்றும், வெவ்வேறு செயலுக்கு செய்யப்படுகின்றன.
பில்லி, சூனியம், வசியம் எல்லாம் இன்னும் இருக்கிறதா என்ன? என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்தால். நீங்கள் கேரளாவில் சிறிய சுற்று பயணம் மேற்கொண்டு வந்தால் நன்கு அறியலாம்.
இன்னும், ஒரு சில இடங்களில் சூனியம் செய்வதும், வைப்பது, எடுப்பது எல்லாம் பட்டப்பகலில் நாம் அங்கே காண முடியும். இதில், பில்லி, சூனியம், வசியம், மனோ வசியம் என பல வகைகள் இருக்கின்றன.
எதை எதை, எதற்கெல்லாம் செய்கிறார்கள். யாருக்கு எல்லாம் இந்த தாக்கம் ஏற்படாது என அவர்கள் கூறும் சில தகவல்கள்...

எதிரி!
ஒருவர், தனக்கு பிடிக்காத நபர் அல்லது விரோதிகளுக்கு, வாழ்வில் தோல்வி அடைய வேண்டும், நஷ்டம் அடைய வேண்டும், துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக செய்வது பில்லி, சூனியம்.

மூளை கட்டு!
ஒரு நபரின் மூளையை மட்டும் கட்டுப்படுத்தி, குழப்பி, நம் பேச்சை மட்டும் கேட்டு, தலையாட்டி பொம்மை போல இயங்குவதற்கு செய்வது பில்லியாம்.

வசியம்!
ஆண், அல்லது பெண்ணை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு செய்யப்படுவது வசியம் என கூறப்படுகிறது.

சூனியம்!
ஒரு நபரை அளிக்க வேண்டும் என்றால் அதற்கு சூனியம் வைக்கிறார்கள். அதற்கு அந்த நபரின் துணி, காலடி மண் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

மாந்திரீகம்!
தோல்வி, நஷ்டம், துன்பம், அழிவு என ஒருவருக்கு எல்லா வகையிலும் தீங்கு ஏற்படுத்த மாந்திரீகம் செய்கிறார்கள். இதற்கான சிறப்பு பூஜைகள் செய்து வசியம் செய்யும் நபருக்கு அளிக்கிறார்கள்.
மாந்திரீகம் செய்யப்பட்ட பொருளை, அந்த நபர் வாழும் வீட்டில் அல்லது அலுவலகத்தில் மறைத்து வைத்து விடுவார்களாம்.

இன்டர்நெட் வசியம்!
வசியம் செய்ய நினைக்கும் நபரை, இன்டர்நெட் மூலமாக கூடி பேசி மனோவசியம் செய்யலாம் என ஒரு பிரிட்டிஷ் வசிய நிபுணர் கூறுகிறார்.

சந்திரன்!
எந்த ஒரு நபரின் ஜாதகத்தில் சந்திரன் பலம் இல்லா நிலையில் இருக்கிறதோ, அவர்களை தான் வசியம் செய்ய முடியுமாம். சந்திரன் பலமாக இருந்தாம் வசியல் செய்ய முடியாதாம்.

யார், யாருக்கு?
வேதம் ஓதுபவர்கள், சாமியார்கள், குருக்கள் போன்றவர்கள் மத்தியில் மாந்திரீகம் பலன் அளிக்காதாம். அதே போல தினமும் யோகா, தியானம் செய்யும் நபர்கள் மத்தியில் மனோவசியம் பலன் தராதாம்.

குல தெய்வம்!
குல தெய்வங்களை வணங்கி வரும் நபர்கள் மத்தியில் மாந்திரீகம் எந்த தாக்கத்தையும் உண்டாக்காது என்றும் மாந்திரீக செயல்களில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர். அதே போல, மனதை ஒருநிலைப்படுத்த தெரிந்த யாரிடமும் மனோவசியம் வேலை செய்யாது என கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
