குமரிகள் குவிந்து கிடக்கும் அந்தபுரத்தில் லைஃபை என்ஜாய் செய்யும் கேம்ப்ளிங் கிங்!

Posted By:
Subscribe to Boldsky

டான் பிலெர்ஜியன்! இன்ஸ்டாகிராமில் இவரை 23.2 மில்லியன் (2.3 கோடி) பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். பெரும்பாலும் ஆண்களுக்கு டான் பிலெர்ஜியன் மீது ஒரு பொறாமை இருக்கும். அந்த பொறாமையின் காரணம் பெண்கள். போக்கர் விளையாட்டு மூலம் பல இலட்சம் டாலர்கள் வென்ற டான் பிலெர்ஜியனை சுற்றி எப்போதுமே ஒரு ஹாட் லிஸ்ட் பெண்களின் கூட்டம் இருக்கும். அதுவும், மிக செக்ஸியாக.

நீ போகும் இடமெல்லாம், நானும் வருவேன், போ... போ, போ... என்பது போல. இவர் போகும் இடமெல்லாம் பெண்கள் கூட்டம் அலைபாய்கிறது. அந்த அலை இவரே செலவு செய்து உருவாக்கிக் கொண்டதாகும். உடலுறவில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் டான் பிலெர்ஜியன். வயாகார பயன்படுத்திய காரணத்திற்காக நிறைய பக்கவிளைவுகள் அனுபவித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய கோளாறு!

இதய கோளாறு!

பார்க்க ஆள் ஆஜானுபாகுவான உடல் தோற்றம் கொண்டிருந்தாலும் டான் பிலெர்ஜியனுக்கு கடுமையான இதய கோளாறு இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இவர் மிகுதியாக வயாகரா எடுத்துக் கொள்வதால் வந்த பக்கவிளைவு தான் இது என்றும் கூறப்படுகிறது. இன்பத்திற்காக இவர் செய்யாத செலவே இல்லை என கூறலாம்.

முதல் மாரடைப்பு 25 வயதிலும், இரண்டாவது மாரடைப்பு 32 வயதிலும் டான் பிலெர்ஜியனுக்கு ஏற்பட்டது. இவருக்கு நுரையீரல் தொற்றும் ஏற்பட்டுள்ளது.

கப்பற்படை!

கப்பற்படை!

டான் பிலெர்ஜியனுக்கு கப்பற்படையில் வேலை செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஏறத்தாழ கப்பற்படையில் சேர்வதற்கான அனைத்து பயிற்சிகளும் முடித்தும்விட்டார். இதற்காக 510 நாட்கள் செலவழித்த டான் பிலெர்ஜியன், 94/99 மதிப்பெண்களும் பெற்றிருந்தார். கிட்டத்தட்ட கிராஜுவேஷன் வாங்கும் தருவாயில், தனது கமாண்டிங் அதிகாரியை அவதூறாக திட்டியதால். நல்லொழுக்கம் இல்லை என கூறி வெளியே அனுப்பிவிட்டனர்.

பூனை!

பூனை!

ஸ்முஷ்பால் என்பது டான் பிலெர்ஜியன் வளர்க்கும் பூனை. இவரை காட்டிலும் இவரது பூனை பிரபலமாக இருக்கிறது. இந்த பூனையை பல ஆயிரக்கணக்கானோர் இன்ஸ்டாவில் பின்தொடர்ந்து வருகிறார்கள். ஸ்முஷ்பாலுக்கு மூன்று கால்கள் தான்.

உங்களுக்கு நேரம் இருந்தால் Smushball என டைப் செய்து இன்ஸ்டாகிராமில் இந்த பூனையின் அக்கவுண்டை பாருங்கள். நேரம் போவதே தெரியாது.

பெண்களுடன் முறையற்ற வாழ்க்கை...

பெண்களுடன் முறையற்ற வாழ்க்கை...

டான் பிலெர்ஜியன் என்றாலே அனைவருக்கும் நினைவில் வரும் விஷயம்... "அந்தாளு சரியான ப்ளேபாய்ங்க..." என்பது தான். நமது தலைப்பும், டான் பிலெர்ஜியனின் இந்த குணத்திற்கு தான். ஆம்! டான் பிலெர்ஜியன் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால் அவரை சுற்றி குறைந்தது ஐந்தாறு பெண்களாவது இருப்பார்கள். அதிலும், மிக கவர்ச்சியாக, சில பல சமயங்களில் நிர்வாணமாகவும்.

சிறை சென்ற தந்தை...

சிறை சென்ற தந்தை...

டான் பிலெர்ஜியனின் தந்தை சிறைக்கு சென்றுள்ளார். டான் பிலெர்ஜியனின் தந்தை பவுல் 1980களில் ரோபோடிக்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இவரும் இராணவத்தில் இருந்தவர் என கூறப்படுகிறது. அப்போது அவர் செய்த தவறுக்காக சிறை தண்டனை பெற்றுள்ளார்.

பள்ளிக் காலம்!

பள்ளிக் காலம்!

தந்தை சிறை சென்ற காரணத்தால், பள்ளியில் டான் பிலெர்ஜியனின் நிலை மிகவும் மோசமானது. பலரும் இவரது கேலி, கிண்டல் செய்து தனிமைப் படுத்தியுள்ளனர். பருவ வயதில் தனிமையிலே வாழ்ந்துள்ளார் டான் பிலெர்ஜியன்.

ஸ்டன்ட் ஆக்டர்!

ஸ்டன்ட் ஆக்டர்!

டான் பிலெர்ஜியன் ஸ்டன்ட் நடிகராகவும் இருந்துள்ளார். இவர் ஒலிம்பஸ் ஹாஸ் ஃபாலன் படத்தில் தோன்றியுள்ளார். மேலும், தி அதர் வுமன், லோன் சர்வைவர் போன்ற படத்தில் இவர் நடித்துள்ளார்.

நூறு மில்லியன் டாலர்கள்!

நூறு மில்லியன் டாலர்கள்!

டான் பிலெர்ஜியனின் சொத்து மதிப்பு என்ன என்பது இன்றும் யாருக்கும் தெளிவாக தெரியாது. ஏறத்தாழ நூறு மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. போக்கர் விளையாட்டில் தான் இவர் அதிகமாக சம்பாதித்தார். ஒரே நாளில் இவர் மூன்று மில்லியன் டாலர்கள் வென்று, அந்நாளில் இருந்து மிகவும் பிரபலமடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

சொகுசு வாழ்க்கை!

சொகுசு வாழ்க்கை!

இவர் இப்போது தனியாக ஐம்பது மில்லியன் டாலர்கள் மதிப்பில் நிறைய ப்ரைவேட் விளையாட்டு விடுதிகள் நடத்தி வருவதாக அறியப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் கார், ஜெட், மாபெரும் மேன்சன் என டான் பிலெர்ஜியனின் வாழ்க்கை வேற லெவலில் மாறியுள்ளது. பெரும்பாலானவற்றை வாடகைக்கே எடுத்து பயன்படுத்தி வருகிறார் டான் பிலெர்ஜியன்.

தாராளம்!

தாராளம்!

போக்கர் மூலம் பணம் சம்பாதித்தாலும் டான் பிலெர்ஜியன் மிகவும் தாராள மனம் கொண்டவர் என கூறுகிறார்கள். உதவி என யாரும் கேட்காமலேயே பணம் கொடுத்து உதவும் மனோபாவம் கொண்டிருக்கிறார் டான் பிலெர்ஜியன். பல ஆயிரக்கணக்கான டாலர்களை தாராளமாக உதவிக்கு அள்ளிக் கொடுத்து வருகிறார் டான் பிலெர்ஜியன்.

பயங்கரம்!

பயங்கரம்!

இராணுவ குடும்பத்தை பின்னணியாக கொண்டிருப்பவர் டான் பிலெர்ஜியன். இவர் ஒரு துப்பாக்கி கலக்ஷனே வைத்துள்ளார். ஒரு முறை தனியாக வெடிகுண்டு செய்ததற்காக இவரை மீது வழக்கு பதிவானது என்றும் அறியப்படுகிறது. டிசம்பர் 9, 2014ல் வெடிகுண்டு தயாரித்ததாக கூறி இவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

ஆயுத விற்பனையாளர்!

ஆயுத விற்பனையாளர்!

டான் பிலெர்ஜியன் வெற்றிகரமாக ஆயுதங்களை வாங்கி விற்றுவருகிறார். இந்த ஆயுத விற்பனையிலும் அதிக லாபம் ஈட்டுகிறார். இது போக, இவர் வாரத்திற்கு 90,000 டாலர்கள் போக்கர் விளையாடி மட்டும் சம்பாதிப்பதாக அறியப்படுகிறது. 750 டாலர் மதிப்பிலான ஆயுதங்களை பத்தாயிரம் டாலர்களுக்கு விற்று, அதை கொண்டு வேகாஸ் சென்று அந்த பத்தாயிரம் டாலர்களை 1,87,000 டாலர்களாக மாற்றி திரும்பியிருக்கிறார் டான் பிலெர்ஜியன்.

தாடி!

தாடி!

நோ ஷேவ் நவம்பரில் மட்டுமல்ல, வருடத்தின் எந்த மாதத்திலும் ஷேவிங் செய்யமாட்டார் டான் பிலெர்ஜியன். தாடி என்றால் அவ்வளவு பிரியம் டான் பிலெர்ஜியனுக்கு. இன்ஸ்டாகிராமில் இவரது தாடி இல்லாத படங்களை காண முடியவில்லை.

ஜெயில்!

ஜெயில்!

இவரது தந்தை பவுல் போலவே இவரும் சிறை சென்றுள்ளார். பள்ளி பயிலும் போது M16 எனும் மெஷின்கன் பள்ளிக்கு எடுத்து சென்றுள்ளார். பள்ளியில் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள். இவரை உடனே பள்ளியில் இருந்து விரட்டினர். மேலும், இந்த செயலுக்காக சிறைக்கும் சென்றுள்ளார் டான் பிலெர்ஜியன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secret Facts About Dan Bilzerian!

Secret Facts About Dan Bilzerian!
Story first published: Friday, December 1, 2017, 14:00 [IST]
Subscribe Newsletter