அமெரிக்காவின் சகோதர! சகோதரிகளே!... இந்தக் குரல் நினைவிருக்கிறதா?

Posted By:
Subscribe to Boldsky

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்தியர் ஒருவரின் சொற்பொழிவு வெளிநாட்டில் வரவேற்பு கிடைப்பது என்பது அவ்வளவு சாதரண விஷயமல்ல. உலகமே வியந்து கேட்ட விவேகானந்தரின் நியூயார்க் சமய மாநாட்டு உரை 1893 ஆம் ஆண்டு இதே தினத்தில் தான் நடைப்பெற்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரம்மாண்ட கண்காட்சி :

பிரம்மாண்ட கண்காட்சி :

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்து 400 ஆண்டுகள் ஆகியிருந்தது. அதன் நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்கு, அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில், பிரம்மாண்டமான ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் கண்காட்சியில் அறிவியல், பொருளாதாரம் என்று சுமார் 20 பேரவைகள் நடைபெற்றன.

Image Courtesy

சமய பேரவை :

சமய பேரவை :

யூத மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம், பவுத்த மதம், தாவோ மதம், கன்ஃபூசியஸ் மதம், ஷிண்டோ மதம், ஜொராஷ்டிரிய மதம், ஜைன மதம், இந்துமதம் ஆகிய மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் கலந்துகொண்டார்கள்.

சர்வ சமய பேரவை சொற்பொழிவுகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை, பதினேழு நாட்கள் நடைபெற்றன. அங்கு ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகளை, மூன்று பிரிவுகளாகப் பிரித்து நடத்தினார்கள் அதில் ஒன்றான சொற்பொழிவுகளில் 4000-க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டார்கள்.

Image Courtesy

சகோதர சகோதரிகளே ! :

சகோதர சகோதரிகளே ! :

1893-செப்டம்பர் 11 ஆம் தேதி, காலை 10 மணிக்கு சிகாகோ சர்வ சமயப் பேரவை துவங்கியது. அதில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவு செய்வதற்கு முன்பு, தன் குரு ஸ்ரீராமகிருஷ்ணரையும், கல்விதேவதை சரஸ்வதியையும் நினைத்து பிரார்த்தனை செய்தார்.

அதன்பின்பு அவர் அமெரிக்க நாட்டின் சகோதரிகளே! சகோதரர்களே! என்று கூறி, தன் சொற்பொழிவைத் துவக்கினார்.

Image Courtesy

உற்சாக கரவொலி ! :

உற்சாக கரவொலி ! :

சிஸ்ட்ர்ஸ் அன்ட் பிரதர்ஸ் ஆப் அமெரிக்கா என்ற சுவாமி விவேகானந்தரின் இந்த ஓரிரு சொற்கள். அங்கு ஓர் அற்புதத்தையே நிகழ்த்திவிட்டது.ஆம், இந்தச் சொற்களைக் கேட்டு, அங்கிருந்த ஆயிரக் கணக்கான மக்களின் உற்சாகம் கரைபுரண்டோடியது. அவர்கள் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து உற்சாகத்துடன் கைதட்டி விடாமல் தொடர்ந்து கரவொலி எழுப்பினார்கள்.

Image Courtesy

சொற்பொழிவு :

சொற்பொழிவு :

ஆங்கிலத்தில் விவேகனந்தர் ஆற்றிய இந்தச் சொற்பொழிவை நான்கு நிமிடங்கள்தான் . நான்கு நிமிடங்கள் கொண்ட இந்த சொற்பொழிவு, 15 வாக்கியங்களையும் 473 சொற்களையும் கொண்டிருந்தது.

Image Courtesy

பிரபலம் :

பிரபலம் :

மறுநாள் எல்லாப் பத்திரிகைகளும், சர்வ சமயப் பேரவையில் நிகழ்ந்த சொற்பொழிவுகள் எல்லாவற்றிலும் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுதான் வெற்றிகரமானது என்று செய்திகள் வெளியிட்டன. இதனால் சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா முழுவதும் பிரபலமானார்.

தி நியூயார்க் ஹெரால்டு பத்திரிக்கை, இவ்வளவு ஆன்மீக ஞானம் உடைய இவரது நாட்டிற்கு கிறிஸ்துவ மதப் பிரச்சாரகர்களை அனுப்புவது முட்டாள்தனம் என்று செய்தி வெளியிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Remembrance of Swami Vivekananda Historic Speech

Remembrance of Swami Vivekananda Historic Speech
Story first published: Monday, September 11, 2017, 16:04 [IST]
Subscribe Newsletter