Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள்!
இங்கு தமிழ் போல்ட் ஸ்கை தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது.
பூஜை என்பது ஒரு ஆன்மீக நடவடிக்கை ஆகும். இது அன்றாடம் கடவுளை வணங்கும் போது ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஓர் செயலாகும். அப்படி பூஜை செய்யும் போது, நமக்குத் தெரியாமல் சில தவறுகளுடன் பூஜைகளை செய்வோம். அவ்வாறு தவறுகளுடன் செய்யப்படும் பூஜையால் பலன் ஏதும் கிட்டாது.
என்ன புரியவில்லையா? நாம் பூஜை செய்யும் போது சில பொருட்களை தரையில் வைத்து செய்வோம். அப்படி தரையில் வைத்து பூஜை செய்தால், அது துரதிர்ஷ்டத்தை தான் வழங்கும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது.

சிவலிங்கம்
வீட்டில் முடிந்த அளவு சிவலிங்கத்தை வைத்திருப்பதை தவிர்த்திடுங்கள். தரையில் நேரடியாக வைக்கவில்லை, துணியின் மீது தான் வைக்கிறேன் என்றும் வைக்காதீர்கள். ஒருவேளை வைக்க வேண்டுமானால், ஒரு மரப்பலகையை வைத்து, அதன் மேல் வைத்துக் கொள்ளுங்கள்.

பூணூல்
பூணூல், இந்து மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இத்தகைய புனித நூலை எப்போதும் தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாது.

சங்கு
சங்கில் லட்சுமி தேவி குடியிருப்பதாக கருதப்படுகிறது. இந்த சங்கை வீட்டு பூஜை அறையில் தரையில் மட்டும் வைக்கக்கூடாது. ஒருவேளை அப்படி வைத்தால், அவ்வீட்டில் பணப் பிரச்சனைகளை அதிகம் சந்திக்கக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.

விளக்கு
ஒவ்வொருவரது வீட்டிலும், காலை மற்றும் மாலையில் விளக்கேற்றுவது வழக்கம். அப்படி விளக்கை ஏற்றுகையில், அதனை தரையில் வைத்து செய்யக்கூடாது, மாறாக இதனை ஒரு சுத்தமான துணியில் மேல் வைத்து ஏற்றலாம்.

தங்கம்
மிகவும் புகழ்மிக்க ஓர் மெட்டல் தான் தங்கம். இந்த தங்கத்தில் லட்கூமி தேவி இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே பூஜை அறையில் தங்க பொருட்கள் இருந்தால், அவற்றை தரையில் வைக்காதீர்கள்.

குறிப்பு
யார் ஒருவர் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தரையில் வைத்து பூஜை செய்கிறாரோ, அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழிலில் பிரச்சனைகளை அதிகம் சந்திக்கக்கூடும். ஆகவே கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications
