Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்த பாகிஸ்தான் ரசிகர் இந்திய அணி வெல்ல உற்சாகப்படுத்துவது ஏன்?
ச்சாச்சா சிக்காகோ என்கிற முகமது பஷீர். பிறப்பால் பாகிஸ்தானியர் ஆனால், இவர் தாய்நாட்டை விட இந்தியாவை அதிகம் நேசிக்கிறார்.
இந்தியா - பாகிஸ்தான் என்பது ஒருசில காரணங்களால் எப்போதுமே ஒரு விரோத நாடு என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. அதில், ஒரு காரணமாக திகழ்வது இந்த இரு நாடுகளுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிகள்!
ஒரு யுத்தம் போல பாவிக்கப்படும் இப்படி ஒரு விளையாட்டில். பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இந்தியாவை நேசிக்கிறார் என்றால், எல்லா கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரியும் அது ச்சாச்சா சிக்காகோ என்கிற முகமது பஷீர் தான் என்று.

யார் இவர்?
ச்சாச்சா சிக்காகோ ஒரு தோனி ரசிகர். மைதானத்தில் இந்திய ரசிகர்களோடு அமர்ந்து இந்தியாவை உற்சாகப்படுத்தி, தோனியை பற்றி இந்திய ரசிகர்களை காட்டிலும் அதிக பெருமையாக பேசுபவர் இவர்.

இந்தியா - பாகிஸ்தான்!
நான் பாகிஸ்தானை விரும்புகிறேன். ஆனால், இந்தியாவை அதை காட்டிலும் மேலாக விரும்புகிறேன். ஆரம்பத்தில் பாகிஸ்தான் தான் வெல்ல வேண்டும் என வேண்டுவேன். ஆனால், இப்போதோ இந்தியா வெல்ல வேண்டும் என்றே அதிகம் பிரார்த்தனை செய்கிறேன்.

மொஹாலி!
2011ல் மொஹாலியில் எனது முதல் இந்திய சுற்று பயணத்தின் போது எனக்கு இந்தியாவில் கிடைத்த அன்பும், காதலும் மிகவும் பெரியது. அதானாலேயே நான் இந்தியாவை மிகவும் நேசுக்கிறேன் என ச்சாச்சா சிக்காகோ கூறுகிறார்.

ஒரு போட்டி கூட...
2011 உலக கோப்பை போட்டியில் இருந்து அதற்கு பிறகு நடந்த ஒரு இந்தியா - [பாகிஸ்தான் போட்டியை கூட முகமது பஷீர் தவறவிட்டதில்லை. நேரடியாக மைதானத்திற்கு சென்று கண்டு வந்துவிடுவார்.

பாதுகாப்பு!
நான் இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறையாவது இந்தியா வந்து விடுகிறேன். ஆனால், பாகிஸ்தானுக்கு எப்போதாவது தான் செலவே. பாகிஸ்தானை காட்டிலும், இந்தியாவில் நாம் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன் என்றும் முகமது பஷீர் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற அன்பு!
இவர் போல மதசார்பற்ற அன்பு செலுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கினால். நாடுகளின் எல்லைகள் வெறும் கோடாக மட்டுமே இருக்கும். மக்களும், மனிதத்தன்மையும் அதிகரித்து வெவ்வேறு நாடுகளுக்கு மத்தியிலான சண்டைகள் குறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications
