உலகின் டாப் 10 அழகிய பெண்கள் - 2017!

Posted By:
Subscribe to Boldsky

பஸ்நெட் (Buzznet) எனும் இணையத்தளம் இந்த வருடத்தின் உலகின் டாப் 30 அழகான பெண்கள் யார் என நடத்திய சர்வே வாக்கெடுப்பு நடத்தியது. இதில் பாடகர்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகைகள், பாடலாசிரியர்கள், மாடல்கள் என பலரும் இடம் பெற்றிருந்தனர்.

இந்தியாவின் பிரியங்கா சோப்ரா, ஹிலாரி கிளிண்டன், எம்மா வாட்சன் என நீங்கள் எதிர்பார்த்த, எதிர்பாராத பலரும் இந்த டாப் 10 இடத்தில் இடம்பெற்றுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#10 அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ

#10 அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ

அமெரிக்க நடிகையான அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ, பிரியங்கா சோப்ராவுடன் பேவாட்ச் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு வயது 31. இவரது நீலநிற கண்கள் கொள்ளை அழகு.

 #9 ஃஹஹ்ரிவே எவன்

#9 ஃஹஹ்ரிவே எவன்

துருக்கியை சேர்ந்த நடிகை இவர். தனது அழகான கண்களாலும், எழில்மிகு சிரிப்பாலும் ரசிகர்களின் இதயத்தை உருகவைத்து கொண்டிருக்கிறார்.

#8 ஏஞ்சலினா ஜூலி

#8 ஏஞ்சலினா ஜூலி

ஏஞ்சலினா ஜூலி கடந்த 2009ல் வேனிட்டி ஃபேர் நடத்திய உலகின் அழகான டாப் டென் பெண்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். பல நல்ல விஷயங்களுக்கு கொடையளித்து வருகிறார். நிறைய சமூக சேவைகள் செய்து வருகிறார்.

#7 மார்கோட் ராபி

#7 மார்கோட் ராபி

ஆஸ்திரேலிய நடிகை மார்கோட் ராபி இந்த பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்திருக்கிறார். இவரது கண்கள் தான் இவரது பெரிய அழகே. கடந்த வருடம் விவாகரத்து பெற்ற ஏஞ்செலினா ஜூலி மற்றும் பிராட் பிரிவிற்கு இவர் தான் காரணம் என பேச்சு அடிப்பட்டு வருகிறது.

#6 ஹிலாரி கிளிண்டன்

#6 ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த ஹிலாரி கிளிண்டன் பெண்களுக்கு தைரியம் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் சிறந்த வகையில் போட்டியிட்டார். சிறந்த அரசியல்வாதியாக திகழும் இவர் இந்த பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்திருந்தார்.

#5 டகோடா ஜான்சன்!

#5 டகோடா ஜான்சன்!

அமெரிக்க மாடல் மற்றும் நடிகையான டகோடா ஜான்சன் நடிகர் மெலனி க்ரிஃபித்தின் மகளாவார். இவர் ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே படத்தில் நடித்தவர்.

#4 எம்மா வாட்சன்

#4 எம்மா வாட்சன்

பிரிட்டிஷ் நடிகையான எம்மா வாட்சன் சமூக சீர்திருத்த செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ஹரி பாட்டர், பியூட்டி அன்ட் தி பீஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் சிறந்த யூத் ஐகானாகவும் விளங்குகிறார்.

#3 டெய்லர் ஹில்

#3 டெய்லர் ஹில்

விக்டோரியா சீக்ரெட் மாடல் டெய்லர் ஹில் இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இவர் 21 வயது நிரம்பிய அமெரிக்க மாடல் ஆவார். இவரை இன்ஸ்டாகிராமில் 7.6 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

#2 பிரியங்கா சோப்ரா

#2 பிரியங்கா சோப்ரா

இந்தியாவில் இருந்து ஹாலிவுட் சென்று கலக்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். மேலும், இந்த டாப் டென் பட்டியலில் தன்னை இரண்டாம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் பிரியங்கா.

#1 பியோனஸ்

#1 பியோனஸ்

ஏஞ்சலினா ஜூலி, எம்மா வாட்சன், டகோடா ஜான்சன் போன்றவர்களை வென்று இந்த முதல் இடத்தை பிடித்துள்ளார் பியோனஸ். ஃபேஷனிஸ்டான நபர். இவர் ஒரு அமெரிக்கன் பாடகர்ல், பாடலாசிரியர். இவர் இப்போது இரண்டாவது முறையாக கருவுற்று இருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Beautiful Women in The World 2017!

Most Beautiful Women in The World 2017!
Story first published: Friday, October 13, 2017, 15:41 [IST]