பார்க்கில் செக்ஸ் வைத்துக் கொண்ட ஜோடிக்கு தாறுமாறு தீர்ப்பு அளித்த விசித்திர நீதிபதி!

Posted By:
Subscribe to Boldsky

21 வருடங்களாக ஒரு கவர்ந்திழுக்கும் நீதிமானாக திகழ்ந்து வருகிறார் பெயின்ஸ்வில்லே, ஓஹியோவை சேர்ந்த மைக்கேல் சிக்னெட்டெட்டி.

இவரது நீதிமன்றத்திற்குள் நுழைந்தால், தவறு செய்ததைவிட, தவறு செய்ததற்கு என்ன தண்டனை வழங்க போகிறார் என்பதன் மீதான அச்சம் குற்றவாளிகளுக்கு அதிகமாக இருக்கும்.

செய்த தவறுக்கு தகுந்த தண்டனையாக மட்டுமின்றி, அந்த தவறை உணரும்படியான தண்டனைகளை தான் வழங்குகிறார் நீதிபதி மைக்கேல் சிக்னெட்டெட்டி. இதோ! இவர் கொடுத்த வினோத தீர்ப்புகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பார்க்கில் செக்ஸ்!

பார்க்கில் செக்ஸ்!

ஒரு ஜோடி பார்க்கில் செக்ஸ் வைத்துக் கொண்டு பிடிப்பட்டனர். அதற்கு இவர் அளித்த தண்டனை. பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் உட்பட பார்க்கை மொத்தமாக சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும், தாங்கள் செய்த தவறுக்கு உள்ளூர் பத்திரிக்கையில் தவறை சுட்டிக்காட்டி மன்னிப்பு கோர வேண்டும் என உத்தரவிட்டார்.

கடும் குளிரில் நடுகாட்டில்!

கடும் குளிரில் நடுகாட்டில்!

ஒரு பெண்மணி, 35 பூனைகளை குளிர்காலத்தில் நடுகாட்டில் விட்டு சென்றார். இதற்கு மைக்கேல் சிக்னெட்டெட்டி அளித்த தீர்ப்பு, நவம்பர் மாதம் உணவு, தண்ணீர், டென்ட் என எந்த உதவியும் இன்றி ஓர் இரவு தங்க வேண்டும் என உத்தரவிட்டார். பெண்மணி என்பதால் தீமூட்டிக் கொள்ள மட்டும் அனுமதித்தார்.

போலீஸ் பன்றி!

போலீஸ் பன்றி!

போலீஸை பன்றி என கூறி அவமதித்த ஆணை ஒரு தெரு முனையில் 175 கிலோ எடையுள்ள பன்றியுடன் நிற்க வைத்து, கையில் இது போலீஸ் இல்லை என எழுதிய பலகையை ஏந்தி நிற்க வைத்தார் மைக்கேல் சிக்னெட்டெட்டி.

குடிபோதையில் டிரைவிங்!

குடிபோதையில் டிரைவிங்!

குடி போதையில் வண்டி ஓட்டிய நபரை, அருகில் இருந்த பிணவறைக்கு அனுப்பி, குடித்துவிட்டு வாகனம் ஓட்டி உயிரிழந்த இருவரது உடல் அருகே நிற்க வைத்தார்.

டாக்ஸி கட்டணம்!

டாக்ஸி கட்டணம்!

ஒரு பெண் டாக்ஸியில் பயணம் செய்துவிட்டு, பணம் தர மறுத்தார். இந்த பெண்ணை அவர் பயணித்த 48 கிலோ மீட்டர்கள் நடந்த கடக்க சொல்லி உத்தரவிட்டார் நீதிபதி மைக்கேல் சிக்னெட்டெட்டி.

திருட்டு!

திருட்டு!

ஒரு நபர், பாதுகாப்பு ஆர்மி ஒருவரது வீட்டில் இருந்த பண பெட்டியை திருடி, வீடு இல்லாதவர்களுக்கு உதவி செய்தார். இந்த தவறுக்கு, நீதிபதி மைக்கேல் சிக்னெட்டெட்டி., அவரை ஒரு நாள் முழுக்க வீடு இல்லாதவர்களுடன் தங்கி இருக்க உத்தரவிட்டார்.

பள்ளி மாணவர்கள்!

பள்ளி மாணவர்கள்!

சில பள்ளி மாணவர்கள், தொடக்க பள்ளி மாணவர்கள் செல்லவிருந்த பயணத்தை தடுக்க பள்ளி வாகனத்தை பன்க்ச்சர் செய்தனர்.

இதற்கு தண்டனையாக, அவர்களையே தொடக்க பள்ளி மாணவர்களுக்கு ஒரு பிக்னிக் கூட்டி செல்ல உத்தரவிட்டார் மைக்கேல் சிக்னெட்டெட்டி.

666!

666!

இரு பதின் வயதினர், இயேசு சிலையில் 666 என எழுதி பிடிப்பட்டனர். அவர்களை ஒரு கழுதையுடன் மேரி, ஜோசப் போன்ற வேடம் அணிந்து, ஊர் முழுக்க நடந்து வர உத்தரவிட்டார் மைக்கேல் சிக்னெட்டெட்டி.

அசத்தல் நீதிபதி!

அசத்தல் நீதிபதி!

மைக்கேல் சிக்னெட்டெட்டி, தன்னிடம் தண்டனை பெற்ற 90% குற்றவாளிகள், அதற்ன் பிறகு எந்தவிதமான குற்ற சம்பவங்களிலும் பிடிபடவில்லை என கூறுகிறார்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Meet The Judge Who Makes Unique Judgements!

Defendants who enter the courtroom and meet judge Michael Cicconetti in Painesville, Ohio, never know what to expect.
Subscribe Newsletter